ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. 1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி உருவான இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. மேற்படி துறைகள், மனித மனங்களில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதான நோக்கத்தை அடைவதற்கான வழியாக இருக்கின்றன என்ற அடிப்படையைக் கொண்டே இந்நிறுவனம் இயங்கி வருகின்றது.


ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு
யுனெஸ்கோ கொடி
வகைவிசேடத்துவ அமைப்பு
சுருக்கப்பெயர்யுனெஸ்கோ (UNESCO)
தலைமைDirector General of UNESCO
Koïchiro Matsuura
 சப்பான்
நிலைபணியில் உள்ளது
நிறுவப்பட்டது1945
இணையதளம்யுனெஸ்கோ

இவ்வகையான ஒத்துழைப்பினால் உலகில் அமைதியையும், பாதுகாப்பையும் ஏற்படுத்தி, அதன் மூலம் இன, மொழி, மத, பால் வேறுபாடின்றி, உலக மக்கள் அனைவருக்குமான நீதி, சட்ட விதிமுறைகள், மனித உரிமைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் உரிமை ஆவணத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றிற்கு உலகளாவிய ரீதியில் கிடைக்கும் மதிப்பை உறுதி செய்வதே இவ்வமைப்பின் நோக்கமாகும்[1]. கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டின் மூலமாக உலக அளவில் உயர்த்திட ஒத்துழைப்பை நல்கி உலக அமைதிமற்றும் மனித உரிமைகளைக் காக்க உரிய பங்களிப்பைச் செய்வது இதன் நோக்கம் ஆகும். ஐக்கிய நாடுகளின் அதிகார பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி இதன் செயல்பாடு அமைந்துள்ளது. இது அனைத்துலக அறிவார்ந்த கூட்டமைப்பு மற்றும் ஆணைக் குழுவின் வழித் தோன்றல் ஆகும். இது 193 உறுப்பு நாடுகளையும் 7 கலந்துகொள்ளும் உறுப்பினர்களையும் கொண்டது. இது களப்பணி அலுவலகங்கள் மூலமாகவும், 3 அல்லது அதற்கு மேலான நாடுகளின் கூட்டு அலுவலகங்கள் மூலமாகவும் செயல்படுகிறது. கல்வி, இயற்கை அறிவியல், சமூக மற்றும் மனித அறிவியல், பண்பாடு, செய்தி தொடர்பு போன்ற 5 முக்கிய நிரல்கள் மூலமாக இதன் நோக்கங்கள் நிறைவேற்றப்படுகிறது.

எழுத்து அறிவித்தல் அனைத்துலக அறிவியல் நிகழ்ச்சிகள் நடத்துதல், ஊடகங்கள், அச்சமைப்புகள் ஆகியவற்றின் சுகந்திரத்தைப் பாதுகாத்தல், அந்தந்தப் பகுதியின் பண்பாடு மற்றும் வரலாற்றுத் திட்டங்களை உயர்த்துதல் உலக பண்பாடு மற்றும் இயற்கை மரபுரிமை இவற்றை பாதுகாக்க உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை இதன் திட்டங்கள் ஆகும். இது உலக நாடுகளின் முன்னேற்ற குழுவின் ஒரு அங்கம் ஆகும்.

நோக்கம் மற்றும் முன்னுரிமை

சமாதானத்தை ஏற்படுத்துதல், வறுமையைக் குறைத்தல், தொடர் முன்னேற்றத்தை மேம்படுத்துதல்.கல்வி, அறிவியல், பண்பாடு, செய்தித் தொடர்பு ஆகியவற்றின் வாயிலாக உள் கலாச்சார உரையடல்களை மேம்படுத்துதல். ஆகியவை இந்நிறுவனத்தின் நோக்கம் ஆகும். செலுத்தக்கூடிய முன்னுரிமைகள் முக்கியக் கவனம் செலுத்தக்கூடிய முன்னுரிமைகள் – ஆப்ரிக்காவும் பாலின சமத்துவமும் ஆகும்.

வரலாறு

உலக நாடுகளின் சங்கம் 21.9 1921 அன்று அனைத்துலக அறிவுசார் ஒத்துழைப்புக்காக ஆணைக்குழு ஒன்றை உருவாக்கத் தீர்மானம் எடுத்தது. அதன் விளைவே யுனெஸ்கோவின் தோற்றமும் அதன் அதிகாரமும் ஆகும். 4.1.1922 அன்றுஅறிவுசார் ஒத்துழைப்புக்காக அனைத்துலக குழு (சிஐசிஐ) ஒன்று தோற்றுவிக்கப்பட்டது9.8.1925 அன்று பாரிஸில் அறிவார்ந்த ஒத்துழைப்புக்கானஅனைத்துலக நிறுவனம் (ஐஐசிஐ) விளைவே நிறுவப்பட்டது இது சிஐசிஐன் செயலாக்க நிறுவனமாக செயல்பட நிறுவப்பட்டது.18.12.1925 அனைத்துலக கல்வி அலுவலகம் ஒரு அரசு சார நிறுவனமாக, அனைத்துலக முன்னேற்றத்திற்காக தன் பணியைத் தொடங்கியது. இந்த முன்னோடி நிறுவனங்களின் செயல்பாடுகள் இரண்டாம் உலகப்போரின் விளைவால் மிகவும் தடைபட்டது.

அட்லாண்டிக் அதிகாரப்பத்திரத்தில் கையெழுத்திட்ட ஐக்கிய நாடுகளின் அறிவிப்பிற்குப் பின்னர் ஒப்பந்தத்தின் மூலம் ஓன்றிணைந்த கல்வி அமைச்சர்களின் மாநாடு தனது கூட்டங்களை 16.11.1942 அன்று லன்டனில் ஆரம்பித்தது அது 5.12.1945வரை தொடர்ந்தது. மாஸ்கோ அறிவிப்பில் அனைத்துலக அமைப்பு அமைய வேண்டியதின் அவசியத்தை சைன,ஐக்கிய அமெரிக்க நாடு, ஐக்கிய அரசாங்கம், ஸோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளின் அனுமதியோடு தெரிவிக்கப்பட்டது. சிஏஎம் இ ன் உத்தேச திட்டத்தினாலும், அனைத்துலக அமைப்புக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு பரிந்துரைக்கு இணங்கவும் சான் பிரான்ஸிஸ்கோவில் ஏப்ரல் – ஜூன் 1945ல் நடந்த மாநாடு கல்வி, ப்ண்பாட்டு அமைப்பு (இசிஓ) அமைக்க 1-16 நவம்பர்1945 லண்டனில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதில் 44 நாடுகள் கலந்து கொண்டன.

இசிஓ மாநாட்டில்,37 நாடுகள் கையெழுத்திட்டு,யுனெஸ்கோவின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கான ஆயத்த ஆணைக் குழுவும் நிறுவப்பட்டது. 16-11-1945 முதல் 04-11-1946 வரை ஆயத்த ஆணைக்குழு பணியாற்றியது.04-11-1946 அன்று யுனெஸ்கோவின் அரசியலமைப்பு,உறுப்பு நாட்டின் இருபதாவது ஓப்புதலோடும் நிதியோடும் நடமுறைக்கு வந்தது. 19 நவம்பர் – 10 டிசம்பர் 1946 வரை நடந்த முதல் பொது மாநாட்டில் டாக்டர் ஜூலியன் ஹக்ஸ்லி (Dr. Julian Huxley) பொது இயக்குனராகத் தேர்ந்து எடுக்கப்பட்டர்நிர்வாகக் குழுவில் தனி நபர் தகுதியில் எவரும் உறுப்பினராக முடியாது என்றும்,உறுப்பு நாடுகளின் அரசியல் பிரநிதிகள் தாம் கலந்து கொள்ள முடியுமென,யுனெஸ்கோவின் அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. பனிப் போர்,குடியேற்ற நாடுகளின் விடுதலை,மற்றும் சோவியத் ஒன்றியம் கலக்கப்பட்ட போதும் உறுப்பு நாடுகள் ஒன்றாக இணைந்து பணிபுரிந்து ,யுனெஸ்கோவின் ஆணை அறிக்கையை நிறைவேற்றப் பாடுபட்டனர்1950 முதல் 19788 வரை இன வெறிக்கு எதிராக யுனெஸ்கோ பாடுபட்டது.1956ல்தென் ஆப்ரிக்க குடியரசு,தங்களது நாட்டின் இனப் பிரச்சினையில் யுனெஸ்கோ தலையிடுகிறது என்று கூறி அதிலிருந்து விலகிக் கொண்டது. 1994ல். நெல்சன் மண்டேலா தலைமையில் தென் ஆப்ரிக்கா மீண்டும் யுனெஸ்கோவுடன் இணைந்தது.2015க்குள் அனைத்து உறுப்பு நாடுகளும் அடிப்படைக் கல்வியை தங்களது நாட்டில் உள்ள அனைவருக்கும் வழங்கியிருக்க வேண்டும் என்று டகார் (செனகல்) ல் நடைபெற்ற அனைத்துலகக் கல்வி மாமன்றம் கேட்டுக் கொண்டது. 1968ம் ஆண்டு யுனெஸ்கோ மாநாட்டின் விளைவால்"மனிதன் மற்றும் உயிர்க்கோளத் திட்டம் உருவானது. 1989ல் உலகளாவிய வலைத்தளம் தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் செய்தி மற்றும் தகவல் திட்டத் தேவை உணரப்பட்டு அதற்கான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

நடவடிக்கைகள்

யுனெஸ்கோ தனது நடவடிக்கைகளை அதன் ஐந்து திட்டப் பரப்பாகிய கல்வி,இயற்கை அறிவியல், சமூக மற்றும் மனித அறிவியல், கலாச்சாரம், தொடர்பாடல் மற்றும் தகவல் மூலம் நடைமுறைப்படுத்துகிறது.

கல்வி: யுனெஸ்கோ அனைத்து கல்வி வாய்ப்புகளை கற்றல் சங்கங்கள் உருவாக்குவதில் அனைத்துலக தலைமை வழங்குகிறது; இந்த அமைப்பு தேசிய கல்வி தலைமை மற்றும் அனைவருக்கும் தரமான கல்வி வழங்க நாடுகளின் திறனை வலுப்படுத்த ஒப்பீட்டு கல்வியில் ஆராய்ச்சியை ஆதரித்தல், நிபுணத்துவம் வழங்குதல் மற்றும் கூட்டணியை வலுப்படுத்துதல்ஆகியவற்றை செய்கிறது. இது கீழ்கண்டவற்றை உள்ளடக்குகிறது.

  • மாறுபட்ட துறை தலைப்புகளில் எட்டு சிறப்பு நிறுவனங்கள்.
  • யுனெஸ்கோ நாற்காலிகள், 644 யுனெஸ்கோ நாற்காலிகளைக் கொண்ட ஒரு அனைத்துலக வலையமைப்பு. இது 126 நாடுகளில் 770 நிறுவனங்கள் மீது ஈடுபடுகிறது.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு.
  • வயது வந்தோர் கல்வி குறித்த அனைத்துலக மாநாடு (CONFINTEA) ஒன்றை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்கிறது.
  • அனைத்து உலக கண்காணிப்பு அறிக்கை கல்வி வெளியீடு.
  • யுனெஸ்கோ ASPNet (தொடர்புடைய பள்ளிகளின் திட்ட வலையமைப்பு), 170 நாடுகளில் 8,000 பள்ளிகளின் அனைத்துலக வலையமைப்பு.

யுனெஸ்கோ உயர் கல்வி நிறுவனங்களை அங்கீகரிப்பது இல்லை.

  • யுனெஸ்கோ பொது "அறிக்கைகள்" வெளியிடுவதன் மூலம் பொதுமக்களுக்கு கற்றுத்தருகிறது.
  • செவில்லி வன்முறை அறிக்கை:மனிதர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையில் உயிரியல்ரீதியாக ஏதுவான நிலையில் உள்ளனர் என்பதை மறுக்க 1989 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அறிக்கை.
  • திட்டங்களையும் கலாச்சார மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் யுனெஸ்கோ அறிவிக்கிறது. உதாரணம்:
  • புவிப்பூங்காக்களின் அனைத்துலக வலையமைப்பு.
  • உயிர்க்கோள இருப்புக்கள் (மனிதன் மற்றும் உயிர்க்கோளம் (MAB) திட்டத்தின் மூலம்).
  • இலக்கிய நகரம்; 2007 ல், இந்த தலைப்பு கொடுக்கப்பட்ட முதல் நகரம் எடின்பரோ, ஸ்காட்லாந்தின் முதல் சுற்றும் நூலகம் இங்கு இருந்தது. 2008 இல், அயோவா நகர், அயோவா இலக்கிய நகரம் ஆனது.
  • அழியும் மொழிகள் மற்றும் மொழி வேறுபாடு திட்டங்கள்.
  • மனிதகுலத்தின் வாய்வழி மற்றும் புலனாகா பாரம்பரியத்தை சேர்ந்த தலைசிறந்த படைப்புகள்.
  • உலகின் நினைவு என்ற அனைத்துலக பதிவேடு.
  • அனைத்துலக ஹைட்ராலஜிகல் திட்டம் (IHP) மூலம் நீர் வள மேலாண்மை.
  • உலக பாரம்பரிய தளங்கள்.
  • படங்கள் மற்றும் வார்த்தைகளால் கருத்துக்களின் சுதந்திரமான ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம்:
  • கருத்து சுதந்திரதை ஊக்குவித்தல்,அனைத்துலக தொடர்பாடல் மேம்பாட்டு திட்டம் மற்றும் தொடர்பாடல் மற்றும் தகவல் திட்டம் மூலமாக பத்திரிகை சுதந்திரம் மற்றும் தகவல்களை அணுகல்.
  • அனைவருக்கும் தகவல் திட்டம் (IFAP) மூலமாக ICTs க்கு உலகளாவிய அணுகலை ஊக்குவித்தல்.
  • ஊடகங்களில் பல்பதவியாண்மையையும் கலாச்சார பன்முகத்தன்மையையும் ஊக்குவித்தல்.
  • கீழ்வருவனவற்றைப் போன்ற நிகழ்வுகளை ஊகுவித்தல்:
  • திட்டங்களை நிறுவுதலும் நிதி உதவிகளும்:
  • புலம்பெயர்வு அருங்காட்சியகங்கள் முனைப்பு: குடியேறிய மக்கள்தொகை கொண்ட கலாச்சார உரையாடல்களை அருங்காட்சியகங்கள் அமைத்து ஊக்குவித்தல்.
  • யுனெஸ்கோ – CEPES, உயர்கல்வி ஐரோப்பிய மையம்: ஐரோப்பா அத்துடன் கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் உயர்கல்விக்கான அனைத்துலக ஒத்துழைப்பை ஊக்குவிக்க ஒரு பரவலாக்கப்பட்ட அலுவலகமாக, புக்கரெஸ்ட், ருமேனியா 1972 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஐரோப்பாவில் உயர்கல்வி அதன் அதிகாரப்பூர்வ பத்திரிகை ஆகும்.
  • இலவச மென்பொருள் பட்டியல்: 1998 முதல் யுனெஸ்கோ மற்றும் கட்டற்ற மென்பொருள் இயக்கம் கூட்டாக இந்த திட்டத்திற்கு நிதியளித்த நிலையில் இலவச மென்பொருலட்கள் பட்டியலிடப்படுகின்றன.
  • சிறந்த பள்ளி சுகாதாரம் மீது வளங்களால் கவனம் செலுத்துதல் (FRESH).
  • OANA, ஆசியா பசிபிக் செய்தி நிறுவனங்களின் அமைப்பு.
  • அறிவியல் அனைத்துலக குழு.
  • யுனெஸ்கோ நல்லெண்ண தூதர்கள்.
  • மூலிகை தாவரங்கள் மற்றும் மசாலா பொருள்கள் மீது ஆசிய ஆய்வரங்கு, ஆசியாவில் நடைபெற்ற அறிவியல் ரீதியான மாநாடுகளின் தொடர்.

அதிகாரபூர்வமான யுனெஸ்கோவின் அரசு சாரா நிறுவனங்கள்

யுனெஸ்கோ 322 அனைத்துலக அரசு சாரா நிறுவனங்களுடன் உத்தியோகபூர்வ உறவுகளை அனுபவிக்கிறது. அனைவருக்கும் தரம் வாய்ந்த கல்வி, வாழ்நாள் முழுவதும் கல்வி, செய்தித் தொடர்பு மூலமாக அறிவார்ந்த சமூகத்தை ஏற்படுத்துதல் ஆகியவை யுனெஸ்கோவின் ஏனைய முன்னுரிமைகளாகும்

  • அனைத்துலக இளங்கலை (IB)
  • அனைத்துலக தன்னார்வ தொண்டு சேவை ஒருங்கிணைப்பு குழு (CCIVS)
  • கல்வி அனைத்துலகம் (ஈஐ)
  • பல்கலைக்கழகங்கள் அனைத்துலக சங்கம் (IAU)
  • திரைப்பட, தொலைக்காட்சி மற்றும் Audiovisual தொடர்பாடல் அனைத்துலக கவுன்சில் (IFTC)
  • டயோஜெனெஸ் வெளியிடுகிறது இது தத்துவம் மற்றும் மனித நேய ஆய்வுகள் அனைத்துலக கவுன்சில் (ICPHS)
  • அறிவியல் அனைத்துலக கவுன்சில் (ICSU)
  • நூதனசாலைகள் அனைத்துலக கவுன்சில் (ICOM)
  • விளையாட்டு அறிவியல் மற்றும் உடற்கல்வி அனைத்துலக கவுன்சில் (ICSSPE)
  • சென்னை அனைத்துலக கவுன்சில் (ICA)
  • நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்கள் அனைத்துலக கவுன்சில் (ICOMOS)
  • ஊடகவியலாளர்களின் அனைத்துலக கூட்டமைப்பு (IFJ)
  • நூலக சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலக கூட்டமைப்பு (IFLA)
  • கவிதைகள் சங்கங்கள் அனைத்துலக கூட்டமைப்பு (IFPA)
  • அனைத்துலக இசை கவுன்சில் (ஐஎம்சி)
  • தீவு அபிவிருத்தி அனைத்துலக அறிவியல் கவுன்சில் (தீவம்)
  • அனைத்துலக சமூக அறிவியல் கவுன்சில் (ISSC)
  • அனைத்துலக திரையரங்கு நிறுவனம் (ITI)
  • இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்புக்கான அனைத்துலக ஒன்றியம் (ஐயுசிஎன்)
  • தொழினுட்ப சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலக ஒன்றியம்

அனைத்துலக சங்கம் (UIA)

  • செய்திதாள்களின் உலகக் கூட்டமைப்பு (WAN)
  • பொறியியல் நிறுவனங்களின் உலகக் கூட்டமைப்பு (WFEO)
  • யுனெஸ்கோ கிளப், மையங்கள் மற்றும் சங்கங்கள் உலகக் கூட்டமைப்பு (WFUCA)

யுனெஸ்கோவின் நிறுவனங்கள் மற்றும் மையங்கள்

கூட்டு மற்றும் தேசிய அலுவலகங்களுக்கு முக்கியமான ஆதரவளித்து, யுனெஸ்கோவின் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவாக இயங்கும் துறைகளே, யுனெஸ்கோ அமைப்பின் நிறுவனங்கள் ஆகும்.

  • பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் யுனெஸ்கோ மையம்.
  • யுனெஸ்கோ அனைத்துலக கல்வி பணியகம் (IBE); ஜெனீவா (சுவிற்சர்லாந்து). இது கல்விசார் கருத்துகள், முறைகள் மற்றும் கட்டமைப்புகளில் சிறப்புக் கவனம் செலுத்துகிறது. கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்த (ஐபிஈ) தனது நிபுணத்துவத்தை பங்களிப்பு செய்கிறது. பாடத்திட்டங்கள் வடிவமைப்பு, மற்றும் செயற்படுத்துதல் ஆகியவற்றில் புதுமையான அணுகுமுறைகளை அறிமுகப்படுத்துவதும், செயல்முறைத் திறன்களை மேம்படுத்துவதும், கல்வி கொள்கைகள் மற்றும் செயல்முறைகள் மீதான பன்னாட்டுப் பேச்சுவாரத்தைகளுக்கு உதவுவதும் இதன் நோக்கம் ஆகும்.
  • வாழ்நாள் கல்விக்கான யுனெஸ்கோவின் நிறுவனம்-ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கியவர்களுக்கு கல்வி கற்க மாற்று வாய்ப்புகளை ஏற்படுத்துதல், எழுத்தறிவித்தல், முறைசாரா கல்வி ஆகியவற்றின் மீது சிறப்புக் கவனமும், வயது வந்தோர் கல்வி பெற வழிவகுத்து, வாழ்நாள் முழுவதும் கல்வி கற்பதற்கான கொள்கைகள் மற்றும் செயல்முறைகளை மேம்படுத்துவது இதன் நோக்கம் ஆகும்.
  • கல்வித் திட்டத்திற்கான யுனெஸ்கோவின் பன்னாட்டு நிறுவனம் பாரிசிலும் பியுனோஸ் அயர்சிலும் கல்வி முறைகளை திட்டமிடுவதிலும், நிர்வகிப்பதிலும் நாடுகளின் திறனை வலுப்படுத்துவதற்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக இந்நிறுவனம் செயல்படுகிறது.
  • யுனெஸ்கோவின் கல்வியில் தகவல் தொழில் நுட்பத்திற்கான நிறுவனம் (ஐஐடிஈ) மாஸ்கோ (ரசியக் கூட்டமைப்பு) இது கல்வியில் தகவல் பயன்பாடு குறித்த தொழில் நுட்ப உதவியையும்,நிபுணத்துவத்தையும் வழங்கும் சிறப்பு நிறுவனம் ஆகும்.
  • ஆப்பிரிக்காவின் திறன் – வளர்ப்பிற்கான யுனெஸ்கோவின் அனைத்துலக நிறுவனம் – இந்நிறுவனம், தனி நபர் மற்றும் நிறுவனங்களை இலக்காகக் கொண்டு, மின்னணு ஊடகங்களை, வலையமைப்பு மற்றும் கல்விசார் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதன் மூலம் தொழில்நுட்ப முன்னேற்றத்தை அடையும் வாய்ப்பினை வழங்கி, ஆப்பிரிக்காவின் பிராந்திய, தேசிய மற்றும் உள்ளூர் அளவிலான கல்விசார் நிறுவனங்களின் திறனை மேம்படுத்த உழைக்கிறது.
  • லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியில் உயர் கல்விக்கான யுனெஸ்கோ அனைத்துலக நிறுவனம் (IESALC) கேராகஸ் (வெனிசுலா). இது ஒரு வலுவான செயல் திட்டத்தின் மூலம் மூன்றாம் நிலை கல்வியின் மேம்பாட்டிற்காகவும்,மாற்றத்திற்காகவும் பங்களிப்பு செய்கிறது. இப் பகுதியில் உயர்கல்வி (மூன்றாம் நிலைக் கல்வி) யில் மாற்ற மேலாண்மை,மற்றும் மாற்றத்திற்கு ஆதரவு அளித்து, உலகமயமாக்கல் என்ற இந்த காலகட்டத்தில், நீதி, நேர்மை, சுதந்திரம், ஒற்றுமை, ஜனநாயகம், மனித உரிமைகளை மதித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதனின் நிலையான வளர்ச்சியை சாத்தியமாக்கிட முயல்கிறது.
  • தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வி மற்றும் பயிற்சிக்கான யுனெஸ்கோ அனைத்துலக மையம் (UNEVOC); பான் (ஜெர்மனி) நாடுகளில் தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சி (TVET) அமைப்புகளை வலுப்படுத்தி மேம்படுத்த உழைக்கிறது.
  • உயர் கல்விக்கான யுனெஸ்கோ ஐரோப்பிய மையம் (CEPES); புகரெச்ட் (ருமேனியா) இந்நிறுவனம், மத்திய, கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள யுனெஸ்கோவின் உறுப்பு நாடுகளில் உயர் கல்வி துறையில் தொழில் நுட்ப உதவியை வழங்குவதோடு, அவற்றிற்கிடையே ஒத்துழைப்பையும் மேம்படுத்துகிறது.
  • நீர் கல்விக்கான யுனெஸ்கோ-IHE நிறுவனம் (யுனெஸ்கோ – IHE); டெல்ஃப்ட் (நெதர்லாந்து) ஐ. நா. அமைப்பிற்கு உட்பட்ட இந்த ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே நீர் கல்வி வசதி உடையதும் அங்கீகரிக்கப்பட்ட முதுநிலை பட்டம் வழங்கும் அதிகாரம் படைத்ததும் ஆகும்.
  • கருத்தியல் இயற்பியல் அனைத்துலக மையம் (ICTP); ட்ரிஸ்டியிலிருந்து (இத்தாலி) இயற்பியல் மற்றும் கணித அறிவியலில் மேம்பட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளை வளர்ச்சியடையச் செய்வது இதன் நோக்கம் ஆகும். குறிப்பாக வளரும் நாடுகளில் ஆராய்ச்சியை மேற்கொள்வதுடன் உயர்மட்ட திட்டங்களை மேம்படுத்துகிறது.
  • யுனெஸ்கோ புள்ளியியல் நிறுவனம் (யுஐஎஸ்); மாண்ட்ரீல் (கனடா) கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பண்பாடு மற்றும் தொடர்பு ஆகிய துறைகளில் இன்றைய தேதி வரையிலான புள்ளிவிவரங்களை குறிப்பிடத் தக்க வகையில் தொகுத்து வழங்குகிறது.

யுனெஸ்கோ பரிசுகள் அதிகரப் பட்டியல்

யுனெஸ்கோ தற்போது கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் அமைதிக்காக 22 பரிசுகள் வழங்குகிறது

  • ஃபெளிக்ஸ் – ஹிப்ஹோப் – பாய்க்னி அமைதி விருது
  • அறிவியலில் பெண்களுக்கு எல்'ஒரியல் யுனெஸ்கோ விருது
  • யுனெஸ்கோ – செஜாங் மன்னர் எழுத்தறிவுவிருது
  • யுனெஸ்கோ – கன்ஃப்யூசியஸ் எழுத்தறிவு விருது
  • யுனெஸ்கோ எமிர் ஜாபர் அல் அஹமது அல் ஜபர் அல் ஜாபார் விருது பரிசு – அறிவுசர் குறைபாடு உள்ளவர்களுக்கு தரமிகுந்த கல்வியை வழங்க
  • யுனெஸ்கோ – அரசர் ஹமது பின் இஸால் அல்-ஹலிஃபா விருது – செய்தி மற்றும் தகவல் தொழில் நுட்பத்தைக் கல்வியில் பயன்படுத்துதலுக்காக.
  • யுனெஸ்கோ – ஹம்தான் பின் ரஷித் அல் மக்தூம் விருது – ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்த அளிக்கும் பயிற்சிக்காக
  • யுனெஸ்கோ கலிங்கா விருது – அறிவியலைப் பிரபலமாக்க
  • யுனெஸ்கோ இன்ஸ்டிடூட் பாஸ்டர் பதக்கம் – மனித நலத்திற்கு பலனளிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அறிவியல் அறிவு வள்ர்ச்சிக்கு
  • யுனெஸ்கோ – சுல்தன் கபூஸ் விருது – சுற்றுச்சூழல் பாதுகாத்தலுக்கு
  • உலகளாவிய நீர் பரிசு மனிதனல் உருவாக்கப்பட்ட ஆறுகள் – வறண்ட பகுதிகளில் நீராதார்த்தைப் பெறுக்க யுனெஸ்கோவால் வழங்கப்படுகிறது (இப்பரிசின் பெயர் பரிசீலனையில் உள்ளது)
  • மைக்கேல் பாடிஸ் விருது – உயிர்க்கோளப் பாதுகாப்பு மேலாண்மைக்காக
  • யுனெஸ்கோ விருது – சமதானக் கல்விக்காக
  • யுனெஸ்கோ மதன் ஜீட் சிங் விருது – சகிப்புத்தன்மை மற்றும் அஹிம்சையை மேம்படுத்துதலுக்காக.
  • யுனெஸ்கோ பில்போவ் விருது – பண்பாடு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலுக்காக
  • யுனெஸ்கோ – உலகளாவிய ஜொஸெ மாற்டி விருது
  • யுனெஸ்கோ அவிசென்ன விருது – அறிவியல் நெறிமுறைகளுக்காக
  • யுனெஸ்கோ ஜுஅன் பொஸ்ச் விருது – சமூக அறிவியல் ஆராய்ச்சியை லத்தீன், அமெரிக்க மற்றும் கரீபியன்: பகுதிகளில் ஊக்குவிக்க
  • ஷார்ஜாஹ் விருது – அரபு கலச்சாரத்திற்காக
  • ஐபிடிசி-யுனெஸ்கோ விருது – கிராமப்புற தகவல் தொடர்புக்கு
  • யுனெஸ்கோ குல்லெர்மொ கனொ உலக பத்திரிகைத்துறை விருது
  • யுனெஸ்கோ – ஜிக்ஜி உலக நினைவு விருது

யுனெஸ்கோ உறுப்பு நாடுகள்

193 உறுப்பு நாடுகளையும் 1955ல் ஐக்கிய நாடுகளின் அஞ்சலக நிர்வாகம், யுனெஸ்கோவைப் பெருமைப்படுத்தும்விதமாக இந்த பரிசு அஞ்சல் தலைகளை வெளியிட்டது ஏழு இணை உறுப்பினர்களையும், இரண்டு பார்வையாளர்களையும் கொண்டது. சில உறுப்பு நாடுகள் சுவாதீனமற்றவை. தங்களைச் சார்ந்துள்ள பகுதிகளில் இருந்து கூடுதல் தேசிய அமைப்பு குழுக்களைக் கொண்ட உறுப்பினர்களும் உள்ளனர்.

அஞ்சல் தலைகள்

யுனெஸ்கோ அஞ்சல் தலைகளைப் பல நாடுகள் வெளியிட்டுள்ளன. யுனெஸ்கோ அமைப்பின் முத்திரையும், இதன் தலைமை அலுவல அமைப்பும் ஒரே கருவை அடிப்படையாகக் கொண்டுள்ளன. 1955ல் ஐக்கிய நாடுகளின் அஞ்சலக நிர்வகம், யுனெஸ்கோவைப் பெருமைப்படுத்தும் விதமாக அஞ்சல் தலைகளை வெளியிட்டது யுனெஸ்கோ தனியாக அஞ்சல் தலைகள் எதுவும் அஞ்சலக பயன்பாட்டிற்கு வெளியிடவில்லை. தனது செயல்பாட்டிற்காக 1955–1966 வரை தொடர்ச்சியான 41 பரிசு அஞ்சல் தலைகளை வெளியிட்டுப் பணம் திரட்டியது. இவை பல்வேறு நாடுகளின் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டு நியூ யார்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள யுஎன்பிஎ முகப்பு மேஜையில் வைத்து விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஐக்கிய நாடுகள் வசம் இவை இருப்பு இல்லை எனினும், சிறப்பு அஞ்சல் தலை விற்பனையாளர்களிடம் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன.

பொது நிர்வாக இயக்குநர்கள்

  • ஜூலியன் ஹக்ஸ்லி (Julian Huxley) (1946–1948)
  • ஜைம் டோரஸ் போடெட் (Jaime Torres Bodet) (1948–1952)
  • ஜான் வில்கின்சன் டெய்லர் (John Wilkinson Taylor) (நடிப்பு 1952–1953)
  • லூதர் எவன்ஸ் (Luther Evans) (1953–1958)
  • விட்டொரினொ வெரொனெஸ் (Vittorino Veronese) (1958–1961)
  • ரெனே மஹே (René Maheu) (1961–1974; நடிப்பு 1961)
  • ஆமடொவ்-மஹ்டர்ம்'பொவ் (Amadou-Mahtar M'Bow) (1974–1987)
  • பெட்ரிகோ மேயர் சகோஸா (Federico Mayor Zaragoza) (1987–1999)
  • கொசிரொ மட்ஸூரா (Koïchiro Matsuura) (1999–2009)
  • இரினா பொகொவா (Irina Bokova) (2009–)

யுனெஸ்கோ அலுவலகங்கள்

யுனெஸ்கோ உலகின் பல பகுதிகளிலும் தன் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.இதன் தலைமையகம் ஃப்ரான்ஸில் உள்ள பாரிஸில் உள்ளது.

தேசிய அதிகாரிகள், மற்றும் பிற கூட்டாளிகள் ஆலோசனையுடன் யுனெஸ்கோ தன் களப்பணி அலுவலகங்கள் மூலமாக பல உத்திகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறது. யுனெஸ்கோவின் களப்பணி அலுவலகங்கள், செயல்பாடு, மற்றும் புவியியல் பரப்பு, அடிப்படையில் நான்கு முதன்மை அலுவலக பிரிவுகளாக வகைப்படுத்தபட்டுள்ளன. அவை கூட்டு அலுவலகங்கள், தேசிய அலுவலகங்கள், பிராந்திய அலுவலகங்கள் மற்றும் தொடர்பு அலுவலகங்கள் ஆகும்.

யுனெஸ்கோவின் களப்பணியில் மைய அங்கமாக, பல நாடுகளை உள்ளடக்கிய கூட்டு அலுவலகங்கள் திகழ்கின்றன. இதை சுற்றிலும் ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய அலுவலகங்களும், பிராந்திய அலுவலகங்களும் இயங்குகின்றன.

யுனெஸ்கோ செயலகத்தை வழி நடத்தும் முக்கிய பிரதிநிதியாக 148 நாடுகளை உள்ளடக்கிய, 27 கூட்டு அலுவலகங்கள் இயங்குகின்றன. இவை தவிர, ஒரு உறுப்பு நாட்டிற்கு சேவை செய்ய ஒரு தேசிய அலுவலகம் என்ற ரீதியில் 21 தேசிய அலுவலகங்கள் உள்ளன.

9 அதிக மக்கள் தொகை நாடுகளில் சச்சரவுக்குப் பிந்திய சூழ்நிலைகளில் அல்லது மாறுதல் நிலையில் உள்ள நாடுகளுக்கு கூட்டு அலுவலகத்திலிருந்து விதிவிலக்கு உண்டு

வட்டாரவாரியான யுனெஸ்கோவின் களப்பணி அலுவலகங்கள்

கீழ்க்கண்ட புவியமைப்பு அடிப்படையில் உறுப்பு நாடுகள் மற்றும் இணை உறுப்பினர்களுக்கு சேவை செய்வதற்காக இயங்கும் யுனெஸ்கோவின் களப்பணி அலுவலகங்களின் பட்டியல்-

ஆப்ரிக்கா

அரபு நாடுகள்

ஆசியா மற்றும் பசிபிக்

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்

தேர்தல்

7.9.2009 முதல் 23.9.2009 வரை பொது இயக்குனர் பதவியைப் புதுப்பிக்க பாரிசில் தேர்தல் நடந்தது.8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 58 நாடுகள் ஓட்டளித்தன. நிர்வக சபை 7.9.2009 முதல் 23.9.2009 வரை தொடர்ந்தது 17ம் தேதி ஓட்டளிப்பது ஆரம்பமானது. ஈரினா பொகொவா யுனெஸ்கோவின் புதிய பொது இயக்குனர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சர்ச்சை மற்றும் சீர்திருத்தம்

ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சிங்கப்பூர் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளுக்கும் யுனெஸ்கோவுக்குமான உறவில் யுனெஸ்கோ சர்ச்சையின் மையமாக இருந்தது. 1970 மற்றும் 1980ல் புதிய உலகத் தகவல் தொடர்பு ஆணை ஊடகங்களை சனநாயகத் தன்மைக்கு உட்படுத்தி தகவல்களைப் பெறுதல், சமத்துவ உரிமை ஆகியவை பத்திரிகை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் என்பதால் மாக் பிரைட் அறிக்கையின் அழைப்பிற்கு மேற்கூறிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன

உள் சீர்திருத்தம்

கடந்த 10 ஆண்டுகளில் யுனெஸ்கோவில் நடமுறைப்படுத்தப்பட்ட குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள்,அதன் நிலைப்பாட்டில் மாறுதலைக் கொண்டுவந்தது. உலக அளவில் 2000 ஊழியர்கள் இருந்தனர். இயக்குநர்கள் 200லிருந்து 100 ஆகக் குறைக்கப்பட்டனர். யுனெஸ்கோவின் களப் பிரிவுகளும் பாதியாகக் குறைக்கப்பட்டன.

1998ல் உச்சகட்டமாக 1287 களப்பணி அலுவலகங்கள் இருந்தன. இன்று 93 அலுவலங்கள் மட்டுமே உள்ளன. இணை மேலாண்மை அமைப்பு, அமைச்சரவை அந்தஸ்துள்ள முக்கிய ஆலோசனை நிலைகள் ஒழிக்கப்பட்டன. 1998–2009க்கு இடையில் 245 ஒப்பந்த ஊழியர்கள் வெளியேறியதால் சுமார் 12 மில்லியன் டாலர் ஊழியர் செலவுப் பற்றாக்குறை நீங்கியது. உயர் பதவிகள் பாதியாக்கப்பட்டன. பல பதவிகளை அதற்குக் கீழ் நிலைக்கு கொண்டு வந்ததன் மூலம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மிக அதிகமான ஊழியர் செலவு குறைக்கப்பட்டது.

பயிற்சி அளித்தல்,களப்பணியில் திறந்த வெளி போட்டித் தேர்வின் மூலம் ஊழியரைத் தேர்ந்து எடுத்தல்,ஊழியர்களின் சாதனை பற்றிய மதிப்பீடு, மேலாளர்களுக்கு சுழற்சி,ஆகியவற்றை அமுலுக்குக் கொண்டு வந்து,ஊழியர் தரம் மேம்படுத்தப்பட்டது. வரவு செலவு மற்றும் திட்டமிடுவதில் வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டது. திட்ட மதிப்பீட்டிலிருந்து கற்றுக் கொண்ட படிப்பினை மூலம் ஓட்டு மொத்த சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. யுனெஸ்கொ அமைப்பின் செயல் திறனை மேம்படுத்த உட்புற மேற்பார்வை சேவை (ஐஓஎஸ்) 2001ல் நிறுவப்பட்டது.

யுனெஸ்கோவின் அலுவலகங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு,நிர்வாகம் சீரிய முறையில் நடை பெறுகிறதா என்பதை (ஐஓஎஸ்) தொடர்ந்து தணிக்கை செய்யும். (ஐஓஎஸ்), யுனெஸ்கோவின் செயல்பாடுகள், மற்றும் திட்டங்களின் பயன் பற்றி மதிப்பீடு செய்யாது.மேற்கு நாடுகளைத் தாக்க பொது உடமைவாதிகள் மற்றும் மூன்றாம் உலக சர்வாதிகாரிகளின் தளமாக யுனெஸ்கோ செயல்படுகிறது என்று உணரப்பட்டது.

இசுரேல்

1949ல் யுனெஸ்கோவில் இசுரேல் இணைந்தது. ஜெருசலேமில் உள்ள டெம்பில் மவுண்ட்டில் ஏற்படுத்தப்பட்ட அகழ்வாரய்ச்சியில் விளைந்த சேதத்தைக் காரணம் காட்டி இஸ்ரேலை, யுனெஸ்கோ விலக்கியது.

யுனெஸ்கொ தனது 1974 மற்றும் 1975 ஆகிய ஆண்டுகளின் அறிக்கைகள் மூலம், தான் இசுரேலை விலக்கியது சரியே என்றது. இஸ்ரேலுக்கு ஆதரவாக, ஐக்கிய நாடுகள் 40 மில்லியன் டாலர் நிதியை நிறுத்தி விடுவதாக பயமுறுத்தியதால், 1977ல் இஸ்ரேலின் உறுப்பினர் தகுதி புதுப்பிக்கப்பட்டது.

யுனெஸ்கோவின் நிர்வாக வாரியம் அக்டோபர் 2010ல் மேற்குக் கரையில் உள்ள பெத்லகேம் நகரில் அமைந்துள்ள ரேச்சல் கல்லறையை பிலால் பின் ரபாஹ் மசூதியாக அங்கீகரித்து வாக்களித்தது. முக்ரபி கேட் பாலத்தை இடித்து புதியதாகக் கட்ட இசுரேல் முடிவெடுத்தது. இதனை 28/06/2011ல் கூடிய யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு கண்டித்தது.

"பண்பாட்டுப் பன்முகத்தன்மை" என்ற கருத்தை பல நடுநிலை அமைப்புகளாலும், யுனெஸ்கோவுக்கு உள்ளேயும் எதிரொலித்தாலும், ஐக்கிய நாடுகளும், ஆஸ்திரேலியாவும், இஸ்ரேலும் ஏற்றுக்கொள்ளவில்லை.

அடிக்குறிப்புகள்

  1. "UNESCO Constitution". Portal.unesco.org. பார்த்த நாள் 2010-04-23.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.