வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள்

ஐக்கிய நாடுகளில் வீட்டோ அதிகாரம் (United Nations Security Council veto power) எனப்படுவது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் சீனா, பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் தற்பொழுது ரஷ்யா, ஐக்கிய இராச்சியம் (இங்கிலாந்து), ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் கொண்டுள்ள சிறப்பு அதிகாரம் ஆகும். இரண்டாம் உலகப்போரின் வெற்றிக்கு இந்த 5 நாடுகளின் பங்கு வெளியுலகுக்கு தெரிய வந்ததால் ஐநா அமைக்கப்பட்ட 1946 ஆம் ஆண்டு முதல் வீட்டோ (தடுத்து நிறுத்தும்) அதிகாரம் பெற்ற நாடுகள் என்ற சிறப்பை இந்நாடுகள் பெறுகின்றன. இந்த அதிகாரத்தை ஐ நா பாதுகாப்பு சபையின் பச்சை அறிக்கை[1] (The green papers of U N Security Council) தெளிவுபட அறிவித்துள்ளது. இதன் படி பாதுகாப்பு சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் (இதர உறுப்பு நாடுகள்) ஆதரவு பெற்றிருந்தாலும் இந்த 5 நாடுகளின் ஏவரேனும் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தால் அந்த தீர்மானம் தோல்வியடையும் என்று ஐ நா சட்ட பிரிவு 27 ல் வரையறுத்துள்ளது.

ஐ நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகளின் தேசியக் கொடிகள்:

மேற்கோள்கள்

  1. "ஐ நா பச்சை அறிக்கை", ஐ நா பச்சை அறிக்கை, ஐ நா பாதுகாப்பு சபை, http://www.thegreenpapers.com/ww/UNSecurityCouncil.phtml, பார்த்த நாள்: 2009-02-05
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.