அருகிய மொழி

அருகிய மொழி (Endangered Language) என்பது பயன்பாட்டில் இருந்து அருகி அல்லது வழக்கிழந்து அழிந்து போகும் நிலையில் இருக்கும் மொழி ஆகும். மொழி இறப்பின் ஊடாக அந்த மொழியைப் பேசுபவர்கள் அனைவரும் இல்லாமல் போனால், அந்த மொழி அழிந்த மொழியாக கருதப்படும். ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலகில் தற்போது 6000 மொழிகள் உள்ளன என்றும், 2100 ஆண்டளவில் இதில் 5400 மொழிகள் அழிந்து விடும் என்றும் என்றும் எச்சரித்துள்ளது.

அருகிய தன்மையின் ஐந்து நிலைகள்

மொழி இறப்பு, பராமரிப்பு: கோட்பாடு, நடைமுறை மற்றும் விபரிப்பு அணுகுமுறைகள் என்ற நூல் அருகிய மொழியின் நிலைகளை பின்வருமாறு வரிசைப்படுத்துகிறது.[1]

  • அருகிய மொழியாவதற்கான வாய்ப்பு (potentially endangered): சிறுவர்கள் வேற்று மொழியை தேர்ந்து கற்கிறார்கள், அருகிய மொழியை முறையாகக் கற்கவில்லை.
  • அருகிய மொழி (endangered): மொழியைப் பேசுபவர்கள் இளையவர்கள், குழந்தைகள் யாரும் அல்லது மிகச் சிலரே பேசுகிறார்கள்.
  • ஆபத்தான அருகிய நிலை (seriously endangered): மொழியைப் பேசுபவர்கள் இடைப்பட்ட வயது வந்தவர்கள், இளையவர்கள், குழந்தைகள் யாரும் பேசுவதில்லை.
  • இறக்கு நிலை (terminally endangered): மொழியைப் பேசுபவர்கள் முதியோர்கள் மட்டுமே.
  • இறந்த மொழி (dead): மொழியை யாரும் பேசுவதில்லை.

மேற்கோள்கள்

  1. மார்க் யேன்சு. (2003). மொழி இறப்பு, பராமரிப்பு: கோட்பாடு, நடைமுறை மற்றும் விபரண அணுகுமுறைகள். பிலிடெல்பியா: யோன் பெஞ்சமின்சு பதிப்பகம்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.