உலக உணவுத் திட்டம்
உலக உணவுத் திட்டம் (World Food Programme; WFP) என்பது பட்டினியைப் போக்க பாடுபடும் உலக அளவிலுள்ள ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மிகப்பெரும் மனிதநேயமிக்க அமைப்பாகும்[1].

வரலாறு
1962 இல் ஈரான் நாட்டில் ஏற்பட்ட பூமிஅதிர்ச்சி, அதைத் தொடர்ந்து அக்டோபரில் தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட புயல், புதிய சுதந்திரம் பெற்ற அல்ஜீரியாவில் ஏற்ற 5 மில்லியனிற்கும் மேற்பட்ட அகதிகள் போன்ற பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு 1963 ஆம் ஆண்டு பரீட்சாத்தகரமாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்திட்டமானது 3 ஆண்டுகளிற்கு ஆரம்பிக்கப் பட்டது. இதன் வெற்றிகரமான திட்டங்களைத் தொடர்ந்து சுனாமி பேரழிவு வரை அதன் பணிகள் தொடர்கின்றன. ஒவ்வொரு வருடமும் 90 மில்லியன் வறுமைக்கோட்டில் கீழ் இருக்கும் 56 மில்லியன் பட்டினியில் வாடிவதங்கும் சிறுவர்கள் இருக்கும் 80 இற்கும் மேற்பட்ட உலகின் வறிய நாடுகளில் இவ்வமைப்பானது உதவி வழங்கிவருகின்றது. இவ்வமைப்பானது உணவானது ஓர் மனிதனின் அடிப்படை என்கின்ற தத்துவத்தில் இயங்கிவருகின்றது.
இலங்கையில் அதன் பணி

ஆரம்பத்தில் கொழும்பில் 1968 இல் அலுவலகம் ஒன்றை அமைத்தனர் அதைத் தொடர்ந்து வவுனியாவிலும் அதன் பின்னர் கிளிநொச்சியிலும் அலுவலங்கள் அமைக்கப் பட்டன. சுனாமி பேரளிவைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, காலி ஆகியமாவட்டங்களில் தனது பணியை 2005 ஆம் ஆண்டில் ஆரம்பித்து. 2006 ஆம் ஆண்டில் பொலநறுவையிலும் அனுராதபுரத்திலும் அலுவலகங்கள் திறக்கப் பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் யுத்தக் காரணங்களுக்காக முல்லைத்தீவு அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைமுறைப் படுத்தப் படும் திட்டங்கள்
- தாய் சேய் போஷாக்கு
- கல்விக்கான உணவு
- வேலைக்கான உணவு
- பயிற்சிக்கான உணவு
வெளி இணைப்புக்கள்
- உலக உணவுதிட்டத்தின் உத்தியோகபூர்வத் தளம் (ஆங்கில மொழியில்)
- போஷாக்கின்மைப் பிரச்சினை பற்றி உலக உணவுத்திட்ட அலுவலர் செல்வி சச்சிதானந்ததின் செவ்வி பிபிசியில் (தமிழில்)
- உணவுப் படை: கல்விசார்ந்த ஓர் விளையாட்டு (ஆங்கில மொழியில்)