உலக உணவுத் திட்டத்தின் கல்விக்கான உணவு

உலகில் பசியால் வாடும் 300 மில்லியன் சிறுவர்களில் 100 மில்லியன் சிறுவர்கள் ஆரம்பப் பாடசாலைக்குக் கூடச் செல்வதில்லை. இவ்வாறான ஏழைகளிடம் வீட்டில் போதிய உணவோ பாடசாலைகளில் சிற்றுண்டிச் சாலைகளோ இருப்பதில்லை. இவ்வாறாக வெறும் வயிற்றுடன் வரும் சிறார்கள் படிப்பில் கவனம் குறைவதோடு வேறு நடவடிக்கைகளில் இலகுவாகத் திசைதிருப்பப்படுகின்றார்கள். இந்த நிலையானது சிறுவர்கள் படித்து முன்னேறுவதற்குத் தடையாக உள்ளதோடு ஊட்டநலன் குறைபாடுகள் உடல் உள ரீதியாகவும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது.

ஐக்கிய நாடுகள் அவையின் உணவு உதவிகளை வழங்கும் முன்னணி அமைப்பான உலக உணவுத் திட்டம் 40 வருடங்களிற்கு மேலாக உலகில் உள்ள வறுமையால் வருந்துகின்ற சிறார்களில் கல்விக்காக உணவு உதவிகளை வழங்கி வருகின்றது. ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கான சிறார்களை பாடசாலைகளூடாக உணவு உதவிகளை வழங்கி வருகின்றது.

இலங்கையில் இத்திட்டமானது ஆகஸ்டு 2003 ஆம் அளவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கில் உள்ள மாவட்டங்களிலும் அதை அண்டிய மாவட்டங்களிலும் 2003 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி 30% மான மாணவர்கள் ஊட்டநலக் குறைவினாலும், 27% வீதமான மாணவர்கள் Stunning இனாலும் 51% மாணவர்கள் நிறைக்குறைவினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலையில் மதியத்திற்கு முன்னதாக தன்னார்வலர்களினால் சமைத்த உணவுகள் பரிமாறப்படுகின்றது. இத்தன்னார்வலர்களிற்கு ஓர் உதவியா வேலைக்கான உணவு திட்டத்தின் மூலம் உணவு உதவி வழங்கப்படுமெனினும் பண உதவிகள் ஏதும் வழங்கப்படமாட்டாது. இந்நடவடிக்கைகள் யாவும் இலங்கை வலயக் கல்வி அலுவலகங்களூடாகக் கொண்டு நடத்தப்படும்.


கல்விக்கான உணவுப் பங்கீட்டளவு

உணவுப் பொருள் ஒரு நாளில் ஒருவருக்கான அளவு கிராமில்
அரிசி 100
சீனி 10
சோள சோயா மாக்கலவை 100
எண்ணெய் 10
பருப்பு 20
மொத்தம் 240 கிராம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.