அடிஸ் அபாபா

அடிஸ் அபாபா (Addis Ababa) எத்தியோப்பியாவினதும் ஆப்பிரிக்க ஒன்றியத்தினதும் தலைநகரம் ஆகும். ஆப்பிரிக்க ஒன்றியத்தின் முன்னோடி அமைப்பான ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பின் தலைநகரமாகவும் இதுவே இருந்தது. 1886 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நகரம், எத்தியோப்பியாவின் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2007 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி அடிசு அபாபாவின் மக்கள்தொகை 3,384,569 ஆகும். இது ஒரு நகரமாகவும் அதே வேளையில் ஒரு மாநிலமாகவும் விளங்குகிறது. ஆப்பிரிக்க வரலாற்றில் இதன் ராசதந்திர மற்றும் அரசியல் முக்கியத்துவம் காரணமாக இது ஆப்பிரிக்காவின் தலைநகரம் எனவும் அழைக்கப்படுவது உண்டு[1]. 80 க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும், அதே எண்ணிக்கை கொண்ட தேசிய இனத்தவர் வாழும் எத்தியோப்பியாவின் பல பகுதிகளிலுமிருந்தும் மக்கள் வந்து இந்நகரத்தில் குடியேறியுள்ளனர். அடிசு அபாபா கடல் மட்டத்தில் இருந்து 7,546 அடிகள் (2300 மீட்டர்கள்) உயரத்தில் உள்ளது.

  1. "United Nations Economic Commission for Africa". UNECA. பார்த்த நாள் 5 May 2012.
አዲስ አበባ
அடிஸ் அபாபா
Addis Ababa

எத்தியோப்பியாவில் அடிஸ் அபாபாவின் அமைவு
தோற்றம்அடிஸ் அபாபா
அரசு
  மாநகராட்சித் தலைவர்பெர்ஹனு தெரெசா
பரப்பளவு
  நகரம்530.14
  நிலம்530.14
ஏற்றம்2,355
மக்கள்தொகை (2007)
  நகரம்36,27,934
  அடர்த்தி5,607.96
  நகர்ப்புறம்29,93,719
  பெருநகர்29,73,004
நேர வலயம்கிழக்கு ஆப்பிரிக்கா நேர வலயம் (ஒசநே+3)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.