பமாக்கோ
பமாக்கோ (Bamako) மாலி நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 1,690,471 மக்கள் வசிக்கின்றனர். நைஜர் ஆற்றின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த நாடு, ஆப்பிரிக்க நாடுகளில் விரைவாக வளர்ந்து வரும் நாடாக மதிப்பிடப்பட்டுள்ளதோடு, உலகளவில் ஆறாவது வளர்ந்து வரும் நாடாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்டிற்கு 'பமாக்கோ' என்று பெயர், பம்பாரா என்ற வார்த்தையில் இருந்து உருவானதேயாகும். பம்பாரா என்ற வார்த்தை 'முதலை ஆறு' என்று பொருள். மாலி நாட்டின் நிர்வாக மையமாக பமாக்கோ விளங்குகிறது. பமாக்கோவின் ஆற்று துறைமுகம், நாட்டின் பெரிய வர்த்தக மற்றும் மாநாட்டு மியாம் அருகிலும் அமைந்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் ஏழாவது பெரிய நகர்ப்புற மையமாக பமாக்கோ விளங்கி வருகிறது.
பமாக்கோ Bamako | |
---|---|
தலைநகரமும் வட்டாரமும் | |
![]() பமாக்கோவின் தோற்றம் | |
![]() நைல் ஆற்றில் பமாக்கோ | |
Country | ![]() |
பிராந்தியம் | பமாக்கோ தலைநகர் மாவட்டம் |
வட்டாரம் | பமாக்கோ |
அரசு | |
• வகை | தலைநகர் மாவட்டம் |
• மாவட்ட முதல்வர் | அடமா சங்காரே[1] |
பரப்பளவு | |
• தலைநகரமும் வட்டாரமும் | 245.0 |
• Metro | 17,141.61 |
ஏற்றம்[2] | 350 |
மக்கள்தொகை (1 ஏப்ரல் 2009)(Census, provisional) | |
• தலைநகரமும் வட்டாரமும் | 18,09,106 |
• அடர்த்தி | 7,384.11 |
• பெருநகர் | 27,57,234 |
• பெருநகர் அடர்த்தி | 160.85 |
View of Bamako from Space
மேற்கோள்கள்
- "Coupe du Maire du District : Le Stade reçoit son trophée". L'Essor, 24 September 2008
- Population of Bamako, Mali
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.