எசுப்பானியா தேசிய காற்பந்து அணி

எசுப்பானியத் தேசிய கால்பந்து அணி (எசுப்பானியம்: Selección de fútbol de España) பன்னாட்டு கால்பந்துப் போட்டிகளில் எசுப்பானியாவின் சார்பாக விளையாடும் அணி ஆகும். இதனை எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகித்து வருகிறது. தற்போதைய பயிற்றுனராக வின்சென்ட் டெல் பாஸ்க் இருக்கிறார். இந்த எசுப்பானிய அணியை பொதுவழக்கில் La Roja ("சிவப்பு"), La Furia Roja ("சிவப்பு வெறி"), La Furia Española ("எசுப்பானிய வெறி") எனக் குறிப்பிடுகின்றனர்.[3][4] 1904இல் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் உறுப்பினராக இணைந்தது. இதுவரை நடைபெற்ற 19 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் பதின்மூன்றிலும் 14 ஐரோப்பியப் போட்டிகளில் ஒன்பதிலும் பங்கேற்றுள்ளது. மூத்த மற்றும் இளைய அணிகள் மொத்தம் 73 பன்னாட்டு கோப்பைகளை வென்றுள்ளன.

எசுப்பானியா
அடைபெயர்
  • La Furia Roja (சிவப்பு வெறி)[1][2]
  • La Furia (வெறியர்கள்)
  • La Furia Española (எசுப்பானிய வெறி)
  • La Roja (சிவப்பு)
கூட்டமைப்புரியல் பெடரேசியோன் எசுப்பானோலா டெ புட்பால் (RFEF)
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா)
தலைமைப் பயிற்சியாளர்வின்சென்ட் டெல் பாஸ்க்
அணித் தலைவர்ஐக்கர் காசில்லாசு
Most capsஐக்கர் காசில்லாசு (152)
அதிகபட்ச கோல் அடித்தவர்டேவிட் வில்லா (56)
பீஃபா குறியீடுESP
பீஃபா தரவரிசை1
அதிகபட்ச பிஃபா தரவரிசை1 (சூலை 2008 – சூன் 2009, அக்டோபர் 2009 – மார்ச் 2010, சூலை 2010 – சூலை 2011, அக்டோபர் 2011 – நடப்பு)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை25 (மார்ச் 1998)
எலோ தரவரிசை2
அதிகபட்ச எலோ1 (செப் 1920 – மே 1924, செப் – திச 1925, சூன் 2002, சூன் 2008 – சூன் 2009, சூலை 2010- சூன் 2013, செப்டம்பர் 2013)
குறைந்தபட்ச எலோ20 (சூன் 1969, சூன் 1981, நவம்பர் 1991)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 எசுப்பானியா 1–0 டென்மார்க் 
(பிரசெல்சு, பெல்ஜியம்; 28 ஆகத்து 1920)
பெருத்த வெற்றி
 எசுப்பானியா 13–0 பல்கேரியா 
(மத்ரித், எசுப்பானியா; 21 மே 1933)
பெருத்த தோல்வி
 இத்தாலி 7–1 எசுப்பானியா 
(ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து; 4 சூன் 1928)
 இங்கிலாந்து 7–1 எசுப்பானியா 
(இலண்டன், இங்கிலாந்து; 9 திசம்பர் 1931)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்14 (முதற்தடவையாக 1934 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள், 2010
ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி
பங்கேற்புகள்9 (முதற்தடவையாக 1964 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள், 1964, 2008 மற்றும் 2012
கோடை ஒலிம்பிக்சு
பங்கேற்புகள்10 (முதற்தடவையாக 1920 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள், 1992
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 2009 இல்)
சிறந்த முடிவுஇரண்டாமிடம், 2013 பிபா கூட்டமைப்பு கோப்பைப் போட்டி

எசுப்பானியா 2010 உலகக்கோப்பை மற்றும் யூரோ 2012 கோப்பைகளை வென்று உலகக்கோப்பை மற்றும் ஐரோப்பியக் கோப்பைகளின் நடப்பு வாகையாளராவர். உலக எலோ தரவரிசையில் இரண்டாமிடத்தில் உள்ளனர்.[5] பிபா உலகத் தரவரிசையில் முதலாமிடத்தில் உள்ளனர். மேலும் யூரோ 2008இல் வென்றமையால் தொடர்ந்து மூன்று பன்னாட்டுக் கோப்பைகளை வென்ற ஒரே தேசிய அணியாக விளங்குகின்றனர். 29 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடையாத அணியாக உள்ளனர். இவற்றால் காற்பந்து விமரிசகர்களும், வல்லுனர்களும் முன்னாள் விளையாட்டாளர்களும் தற்போதைய எசுப்பானிய அணியை எக்காலத்திலும் உலகக் கால்பந்து வரலாற்றிலேயே மிகச்சிறந்த அணியாக மதிப்பிடுகின்றனர்.[6][7][8][9][10]

மேற்சான்றுகள்

  1. BBC (17 சூன் 2010). ""La Roja" from Miguel, Spain". பார்த்த நாள் 30 சூன் 2010.
  2. "La Roja lean to the left". பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (16 சூன் 2009). பார்த்த நாள் 4 சனவரி 2012.
  3. "La red social de aficionados de la Selección Española". Juegalaroja.com. பார்த்த நாள் 2012-06-24.
  4. "Otro junio de ilusión: todos con la Roja". Notas de fútbol (8 சூன் 2009). பார்த்த நாள் 4 சனவரி 2012. (எசுப்பானியம்)
  5. "World Football Elo Ratings". Eloratings.net (2013-10-16). பார்த்த நாள் 2013-10-25.
  6. Pitt-Brooke, Jack (3 சூலை 2012). "The greatest team of all time: Brazil 1970 v Spain 2012". The Independent (London: The Independent). http://www.independent.co.uk/sport/football/news-and-comment/the-greatest-team-of-all-time-brazil-1970-v-spain-2012-7905980.html?. பார்த்த நாள்: 1 சூலை 2013.
  7. "Euro 2012: Are Spain the best team of all time?". BBC Sport. BBC. பார்த்த நாள் 14 சூலை 2012.
  8. Klinsmann, Jurgen. "Klinsmann: Spain win over Italy would make them team of century". BBC. பார்த்த நாள் 14 சூலை 2012.
  9. Carlisle, Jeff. "Why this Spain side is all-time best". ESPN. பார்த்த நாள் 14 சூலை 2012.
  10. "Spain vs. Italy: Euro 2012 Final Not Enough to Crown Spain Best Ever". Bleacher Report. பார்த்த நாள் 30 சூன் 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.