அடிடாசு நிறுவனம்

அடிடாசு ஏஜி (Adidas AG) செருமனியின் பவேரியாவில் எர்சோகெநோராக்கிலிருந்து இயங்கும் விளையாட்டு காலணிகள், உடை மற்றும் துணைப்பொருட்களை வடிவமைத்து தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனமாகும். இது அடிடாசு குழுமத்தின் சார்புவைப்பு நிறுவனமாகும். அடிடாசு குழுமத்தில் ரீபொக் விளையாட்டுடை நிறுவனம், (அவற்றின் ஆஷ்வொர்த் உடைகள், ராக்போர்ட் நிறுவனங்கள் உட்பட) டெய்லர்மேடு-அடிடாசு குழிப்பந்து நிறுவனம், பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகத்தில் 9.1% பங்குகள் உள்ளன. விளையாட்டு காலணிகளைத் தவிர பைகள், சட்டைகள், கடிகாரங்கள், கண்கண்ணாடிகள் மற்றும் பிற விளையாட்டு, உடை தொடர்புடைய பொருட்களை அடிடாசு தயாரிக்கிறது. செருமனியிலும் ஐரோப்பாவிலும் விளையாட்டு உடைகளைத் தயாரிக்கும் மிகப் பெரிய நிறுவனமாக அடிடாசு உள்ளது; உலகில் இது நைக்கிற்கு அடுத்து இரண்டாவது பெரிய நிறுவனமாக விளங்குகிறது.[3]

அடிடாசு ஏஜி
வகைஏஜி (பொதுபங்கீட்டு நிறுவனம்)
நிறுவுகை1924இல் கெப்ரூடர் தாசுலர் ஷூபாப்ரிக் ஆக
(1949இல் பதிவு செய்யப்பட்டது)[1]
நிறுவனர்(கள்)அடோல்ஃப் தாஸ்லர்
தலைமையகம்எர்சோகெநோராக், செருமனி
சேவை வழங்கும் பகுதிஉலகெங்கும்
முக்கிய நபர்கள்இகோர் லான்டோ (தலைவர்)
எர்பெர்ட் ஹெய்னர் (முதன்மை செயல் அதிகாரி)
தொழில்துறைஉடை, ஒய்யாரத் துணைப்பொருட்கள்
உற்பத்திகள்காலணி, விளையாட்டுடை, விளையாட்டுக் கருவிகள், ஒப்பனைப் பொருட்கள்
வருமானம்14.49 பில்லியன் (2013)[2]
இயக்க வருமானம்€1.202 பில்லியன் (2013)[2]
இலாபம்€787 மில்லியன் (2013)[2]
மொத்தச் சொத்துகள்€11.59 பில்லியன் (2013)[2]
மொத்த பங்குத்தொகை€5.489 பில்லியன் (2013)[2]
பணியாளர்50,728 (2013)[2]
இணையத்தளம்www.adidas-group.com
பிலிப்பீன்சின் மணிலா பெருநகரில் போனிபேசியோ குளோபல் நகரத்தில் அடிடாசு கடை.

அடிடாசை 1948இல் அடோல்ஃப் டாஸ்லர் நிறுவினார். முன்னதாக இவரும் அண்ணன் ருடோல்ஃப் டாஸ்லரும் இணைந்து நடத்தி வந்த கெப்ரூடர் தாசுலர் ஷூபாப்ரிக்கை பிரித்துக் கொண்டனர். அடோல்ஃப் அடிடாசை ஆரம்பித்த அதேவேளையில் ருடோல்ஃப் புமா காலணி தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார் 1949இல் பதிவு செய்யப்பட்ட இவ்விரு நிறுவனங்களும் போட்டி நிறுவனங்களாக வளர்ந்தன. இவை இரண்டுமே செருமனியின் எர்சோகெநோராக்கிலிருந்து இயங்குகின்றன.

இந்நிறுவனத்தின் உடைகளிலும் காலணிகளிலும் மூன்று இணைகோடுகள் வழமையாக இடம் பெற்றிருக்கும்; இதுவே அடிடாசின் தற்போதைய அலுவல்முறை சின்னமாக உள்ளது.[4][5] 2012இல் அடிடாசின் வருமானம் 14.88 பில்லியனாக இருந்தது.[2]

மேற்சான்றுகள்

  1. "Adidas Group History". adidas-group.com. பார்த்த நாள் 7 மே 2014.
  2. "Annual Report 2012". adidas. பார்த்த நாள் 10 மார்ச் 2013.
  3. "Adidas, Deutsche Telekom, Infineon: German Equity Preview". Bloomberg L.P.. 16 சனவரி 2008. http://www.bloomberg.com/apps/news?pid=20601100&sid=ah3ZhaeNWMdM&refer=germany. பார்த்த நாள்: 26 சனவரி 2008.
  4. Smit, Barbara (2007). Pitch Invasion, Adidas, Puma and the making of modern sport. Penguin. பக். 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-14-102368-6.
  5. Chadwick, Simon; Arthur, Dave (2007). International cases in the business of sport. Butterworth-Heinemann. பக். 438. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7506-8543-3.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.