நாங்கள் ஒருவரே (ஒலே ஒலா)

"நாங்கள் ஒருவரே (ஒலே ஒலா)" (We Are One (Ole Ola)) 2014இல் ஓர் காதல், ஓர் தாளம் - 2014 பிஃபா உலகக் கோப்பை அலுவல்முறை இசைத்தொகுப்பிற்காக (One Love, One Rhythm – The 2014 FIFA World Cup Official Album) கூபாவின் அமெரிக்க ராப்பிசை கலைஞர் பிட்புல் பதிவு செய்த பாடலாகும். இதில் விருந்தினராகக் குரல்கொடுக்க அமெரிக்கப் பாடகி செனிபர் லோபசும் பிரேசிலிய பாடகி கிளாடியா லீட்டும் பங்கேற்றனர். இந்தப் பாடலை எழுதுவதில் பிட்புல், தாமசு டிரோல்சென், லோபசு, லீட்டு, டான்னி முர்சியா, சியா புர்லெர், லூகாசு "டா. லூக்" கோட்வால்டு, என்றி "சர்குட்" வால்ட்டர் மற்றும் ரெட் ஒன் இணைந்துள்ளனர். தயாரிப்பை கோட்வால்டு, வால்ட்டர், மற்றும் டிரோல்சென் கவனித்துக் கொண்டனர்.[1] விசிறிகளிடமிருந்து நேர்மறையான கருத்துக்களைப் பெற்றுள்ள இந்தப் பாடலை சில பிரேசிலியர்கள் இதில் பிரேசிலிய உணர்வு வெளிப்படவில்லை எதிர்மறையாகவும் விமர்சித்துள்ளனர். "வீ ஆர் ஒன்" பாடல் வணிகநோக்கில் சுமாரான வெற்றியைப் பெற்றுள்ளது; இத்தாலி, எசுப்பானியா, செருமனி, பிரான்சு மற்றும் ஆத்திரியாவில் முதல் 20 பாடல்களில் ஒன்றாக வந்துள்ளது.

"வீ ஆர் ஒன் (ஒலே ஒலா)"
Single by பிட்புல், ஜெனிஃபர் லோபஸ் மற்றும் கிளாடியா லீட்டு
from the album ஒன் லவ், ஒன் ரிதம்
Releasedஏப்ரல் 8, 2014 (2014-04-08)
Formatகுறுவட்டு
Genreநடன போப்பிசை, இலத்தீன இசை
Length3:43
LabelMr. 305, போலோ கிரவுண்ட்சு, ஆர்சிஏ
பிட்புல் chronology
  • "வைல்டு வைல்டு லவ்"
  • (2014)
  • "வீ ஆர் ஒன் (ஒலே ஒலா)"
  • (2014)
  • "கேன்ட் கெட் எனஃப்"
  • (2014)

மேற்சான்றுகள்

  1. "We Are One (Ole, Ola) - Jennifer Lopez & Cláudia Leitte" (Danish). DR. பார்த்த நாள் 11 April 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.