காஞ்சிபுரம் வன்மீகநாதர் கோயில்

காஞ்சிபுரம் வன்மீகநாதர் கோயில் (வன்மீகநாதேசம்) என்று அறியப்படும் இக்கோயில், காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் (கோயில் அல்லாத சிவலிங்கம்) ஒன்றாகும். மேலும், இந்திரன் புற்றினிடத்தில் எழும் வரத்தைப் பெற்றுவழிபட்டமையால், இப்பெருமான் வன்மீகநாதர் வன்மீகம் (கரையான் (புற்று) என்று வழங்கப்பட்ட இத்தலக் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

காஞ்சிபுரம் வன்மீகநாதேசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் வன்மீகநாதேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வன்மீகநாதர்.

தல வரலாறு

இத்தல (கோயில் அல்லாத சிவலிங்கம்) வரலாறு கூறுவது யாதெனில், ஒரு சமயம் தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி பெரும் புகழ் வேண்டி யாகம் செய்தனர். யாகத்தில் புகழானது பெரும் பளிங்கு மலையாக உண்டாகி நின்றது. அதை தான் ஒருவரேயாக திருமால் கவர்ந்து சென்றார். தன்னை எதிர்த்தவர்களையெல்லாம் வென்று, வில்லைக் கழுத்தில் ஊன்றியவாறே நின்று கொண்டிருந்தார். இந்திரன் காஞ்சிக்கு வந்து சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டு, இறைவன் பணித்தவாறு புற்றின் இடையில் 'கரையான்' உரு கொண்டு எழுந்து சென்று, திருமால் கழுத்தில் ஊன்றிருந்த வில்லின் நாணை அரித்தான், இதனால் வில்லானது திடீரென நிமிர, திருமாலின் தலையறுந்து வீழ்ந்தது. தேவர்கள் அனைவரும் புகழையடைந்தனர். இந்திரன் இறைவனை மீண்டும் வழிபட்டு திருமாலை உயிர்ப்பித்து தருமாறு வேண்டி நிற்க, இறைவனும் அவ்வாறே செய்தருளினார் என்பது இத்தல வரலாறாக உள்ளது.[2]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்கு பகுதியான சாலாபோகம் தெருவில் சென்று வயல் வெளியில் இக்கோயில் அல்லாத (சிவலிங்கம்) அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கில் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அல்லாத (சிவலிங்கம்) தாபிக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.