காஞ்சிபுரம் ரோமசரேசுவரர் கோயில்

காஞ்சிபுரம் ரோமசரேசுவரர் கோயில் (ரோமசரேசம்) என்றறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மிகவும் பழமையான திருக்கோயிலாக அறியப்பட்ட இக்கோயில் குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

காஞ்சிபுரம் ரோமசரேசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் ரோமசரேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ரோமசரேஸ்வரர்.

இறைவர், வழிபட்டோர்

  • இறைவர்: ரோமசரேஸ்வரர்.
  • வழிபட்டோர்: ரோமச முனிவர்

தல வரலாறு

முற்காலத்தில் இது பெரிய கோயிலாக இருந்திருக்க வேண்டும்; தற்போது மூலவர் - ரோமசரேசுவரர் மட்டுமே சிவலிங்க மூர்த்தமாக உள்ளார்.[2]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரத்தின் கிழக்கு பகுதியான மாமல்லன்நகர், சத்யா நகர் - பெரியார் நகர் இவைகளைக் கடந்து, தொடர்வண்டி பாதையை கடந்து சென்று இக்கோயிலை அடையலாம். மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் தென்கிழக்கு திசையில், சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருக்கச்சிநெறிக்காரைக்காடு கோயிலுக்கு செல்லும் பாதையில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.