காஞ்சிபுரம் ஆயிரத்தெட்டு சிவலிங்கம்

காஞ்சிபுரம் ஆயிரத்தெட்டு சிவலிங்கம் (சகசரலிங்கம் - ஏகம்பம்) என போற்றும் இது, காஞ்சிபுரத்திலுள்ள காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலின் 2-ம் (மாவடிப்) பிராகாரத்தில் வாயு மூலையில் அமைந்துள்ளது. மேலும், ஆயிரத்தெட்டு இலிங்கங்களைக் தன்னகத்தேகொண்ட பேருருவலிங்கமாக அறியப்படும் இச்சிவலிங்கம் பற்றிய குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

காஞ்சிபுரம் சஹஸ்ரலிங்கம் - ஏகம்பம்
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் சஹஸ்ரலிங்கம் - ஏகம்பம்
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சஹஸ்ரலிங்கேசுவரர்.

லிங்க சிறப்பு

இராமன் மற்றும் இராவணனை கொன்ற தோசம் போக்குவதற்கு பூசை செய்த சிவலிங்கமாகும்.[2]

அமைவிடம்

இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியின்காஞ்சி திருவேகம்பத்தின் மாவடிப் பிரகாரத்தில் உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் திருவேகம்பத்தை அடையலாம்.[3]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.