காஞ்சிபுரம் வெள்ளக் கம்பர் கோயில்

காஞ்சிபுரம் வெள்ளக் கம்பர் கோயில் (வெள்ளக்கம்பம்) என அழைக்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மேலும், பிரமன் வழிபட்ட இம்மூர்த்தியார் தனிச்சந்நிதியில், இச்சிவலிங்கம் மூர்த்தம் மட்டுமே உள்ளதாக அறியப்படும் இக்கோயில் குறிப்புகள்; காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

காஞ்சிபுரம் வெள்ளக்கம்பம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் வெள்ளக்கம்பம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வெள்ளக் கம்பர்.

விழிப்பட்டோர்

  • பிரமன்.
  • காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் முதல் பிரகாரத்தில் ஏகாம்பரநாதருக்கு வலப்பக்கம் வெள்ளக்கம்பர், இடப்பக்கம் கள்ளக்கம்பர், ஈசானத்தில் நல்லகம்பர், என வீற்றிருக்கிறார்கள்.
  • சிவபெருமான் கச்சி மயானத்தின் கண் சைவ வேள்வி செய்து முடித்தபின்னர் சிவ சகி லலிதாதேவி என்னும் திருநாமம் கொண்டு வெளிப்பட்டு யாவும் படைக்கத் தொடங்கியபொழுது அவரது மூக்கண்ணிலும் தோன்றிய மும்மூர்த்திகளுள் ஒருவர் வெள்ளக்கம்பராவர்.
  • பிரமனால் பூசிக்கப்பட்டவர் வெள்ளக்கம்பர்.
  • திருமாலால் பூசிக்கப்பட்டவர் கள்ளக்கம்பர்.
  • ருத்திரரால் பூசிக்கப்பட்டவர் நல்ல கம்பர்.[2]

தல விளக்கம்

  • வெள்ளக் கம்பர்: பிரமன் வெள்ளை (தூய) உள்ளத்தோடும் பூசனை புரிந்தமையின், இப்பெயரைத் தாங்கினர். பிறவியாம் அழுக்குடம்பு போய்த் தூயராவர். இவர் மூல இலிங்கத்திற்கு வலப்புறத்தே கிழக்கு நோக்கி வீற்றிருக்கின்றனர். (திருவே. 86)
  • கள்ளக் கம்பர்: திருமால் உயிர்களை மயக்குறுத்த வழிபட்டமையின் அப்பெயர் ஏற்றனர். இவரை வணங்குவோர் மாலாரின் மயக்குட்படார். அம்மையார் வழிபட்ட மூலஇலிங்கத்திற்கு வடக்கில் உள்ளது இத்தலம். (திருவே. 87)
  • நல்ல கம்பர்: உருத்திரர் வழிபட்டு போற்ற ஒன்றி நின்றனர். அவரை அன்பொடும் வழிபடுவோர் ஒன்றி ஒன்றா நிலையை எய்துவர். திருவேகம்பர் திருமுன்பு நிலாத்துண்டப் பெருமாளுக்கு அயலே மேற்கு நோக்கி வீற்றிருப்பர். (திருவே. 88)[3]

தல பதிகம்

  • பாடல்: (வெள்ளக் கம்பர்)
வாலிய சிந்தையான் மலர்ப்பொ குட்டணை
மேலவன் வழிபடும் வெள்ளக் கம்பனை
ஆலிய அன்பினால் அருச்சித் தேத்துவார்
தோலுடற் பொறைகழீ இத் தூய ராகுவார்.
  • பொழிப்புரை:
தூய சிந்தையொடும் பிரமன் வழிபடும் வெள்ளக் கம்பரைத் தழைத்த
அன்பொடும் அருச்சித்துப் போற்றுவோர் உடற்பாரம் தவிர்ந்து (பிறவி நீங்கி)
தூயராவர்.
கள்ளமில்லாத வெள்ளை உள்ளத்தொடும் பூசிக்கப் பெற்றமையின்
வெள்ளக் கம்பர் ஆயினர்.[4]

அமைவிடம்

இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியில் உள்ள திருவேகம்பத்தில் அறுபத்துமூவர் (63) மூலத்திருமேனிகள் உள்ள வரிசைக்கு எதிர்புறத்தில் சற்றுத் தள்ளி தனிக்சந்நிதியில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ மைல் தூரமுள்ள காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் திருவேகம்பத்தில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[5]

போக்குவரத்து

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.