திருவெண்காட்டீசுவரர் கோயில், மதுராந்தகம்

திருவெண்காட்டீசுவரர் கோயில், தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மதுராந்தகத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். திருப்புகழில் இத்தலத்தை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

திருவெண்காட்டீசுவரர் கோயில்
பெயர்
வேறு பெயர்(கள்):சுவேதாரண்யேசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாகாணம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம் மாவட்டம்
அமைவு:மதுராந்தகம்
கோயில் தகவல்கள்
மூலவர்:வெண்காட்டீசுவரர் (சிவன்)

வரலாறு

மதுராந்தகம், முதலாம் பராந்தகச் சோழனால் உருவாக்கப்பட்டது என்பதும், வெண்காட்டீசுவரர் கோயில் கண்டராத்தித்த சோழனால் கட்டப்பட்டது என்பதும் வரலாற்றாய்வாளர்களின் கருத்து. கல்வெட்டுகளில் இவ்வூர் மதுராந்தக சதுர்வேதி மங்கலம், ஜெயம்கொண்ட சோழமண்டலத்து களத்தூர் கோட்டம், தனியூர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வெட்டுகள்

இக்கோயிலில் 27 கல்வெட்டுகள் காணப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்களால் இக்கோயில் கட்டுமானப்பணிகள் நடத்தப்பட்டதையும், கோயிலுக்கு வழங்கப்பட்ட தானங்களைப் பற்றியும் அறியமுடிகிறது. தொடக்ககால கல்வெட்டுகளில் இக்கோயில் ஸ்வேதாரண்யேசுவரர் கோயில் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயில்

இக்கோயிலின் இராஜகோபுரம் ஐந்து நிலைகள் கொண்டுள்ளது. கருவறையில் வெண்காட்டீசுவரர் கிழக்குமுகமாய் உள்ளார். மீனாட்சியம்மைக்குத் தனிச் சன்னிதியுள்ளது. கால பைரவர், உன்மத்த பைரவர், அசிதாங்க பைரவர், சுவர்ண ஆகர்ஷண பைரவர் என நான்கு பைரவர்கள் இங்குள்ளதும் இத்தலத்து ஈசனை வழிபட்டால் தோல் நோய் குணமாகும் என்பதும் இத்தலத்தின் சிறப்புகளாகும். ’மதுராந்தகத்து வடதிருச்சிற்றம்பலம் அமர்ந்த பெருமானே’ எனத் திருப்புகழில் அருண்கிரிநாதர் இக்கோயுலுறை ஈசனைப் பாடியிருக்கிறார்.

மூலவர்வெண்காட்டீசுவரர், சுவேதாரண்யேசுவரர்
உற்சவர்
அம்மன்/தாயார்மீனாட்சி அம்மை
தல விருட்சம்வெண்கொக்கு மந்தாரை
தீர்த்தம்விடகர தீர்த்தம்
ஆகமம்/பூஜை
பழமை1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்

பெயர்க் காரணம்

இந்த ஊரில் நிறைந்திருந்த மந்தாரை மரங்களில் இளைப்பாறிய கொக்குகளால் அந்தப் பகுதியே வெண்காடாகத் தோற்றமளித்ததால் அந்த இடம் வெண்காடு என்றும் அங்கு குடிகொண்ட ஈசன் வெண்காட்டீசுவரர் என்றும் அழைக்கப்பட்டதாக மரபு வரலாறு உள்ளது.

திருவிழாக்கள்

சிவராத்திரி, சித்ரா பௌர்ணமி, ஆருத்ரா தரிசனம், தைப்பூசம், மாசிமகம், பிரதோஷம், நால்வர் குருபூசை ஆகியவை இக்கோயிலில் நடத்தப்படும் முக்கியவிழாக்களாகும்.

அமைவிடம்

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்திலுள்ள மதுராந்தகத்தில் அமைந்துள்ளது. மதுராந்தகம்-சூணாம்பேடு சாலையில் 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.