காஞ்சிபுரம் உற்றுக்கேட்ட முத்தீசர் கோயில்

காஞ்சிபுரம் உற்றுக்கேட்ட முத்தீசர் கோயில் என அறியப்படும் இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

காஞ்சிபுரம் உற்றுக்கேட்ட முத்தீசர் கோயில்
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:உற்றுக்கேட்ட முத்தீசர்.

தல வரலாறு

இங்கு வந்து நின்று திருமேற்றளிநாதரை திருஞானசம்பந்தர் பாடியபோது, இறைவனார் அப்பாடல்களில் மயங்கி, அருகாமையிலிருந்து கேட்பதற்காக சற்றமுன்னால் வந்து அங்கிருந்து அப்பாடல்களை உற்றுக்கேட்டு இன்புற்றாராம். இதன் காரணமாகவே இச்சந்நிதி "உற்றுகேட்ட முத்தீசர்" என்று வழங்குகிறது.[2]

தல விளக்கம்

மூலத்திருமேனி திருமேற்றளிக் கோபுரத்தை நோக்கியவாறு கைகளைக் குவித்து வணங்கும் நிலையில் நின்ற கோலத்தில் உள்ளது. உற்சவத் திருமேனி ; வலக்கை சுட்டிய விரலுடன் இடக்கையில் பொற்கிண்ணம் ஏந்திய நிலையில் பக்கத்தில் உள்ளது இத்தெருவின் நடுவில் இடப்பால் ‘உற்றுக்கேட்ட முத்தீசர்’ ஆலயம் உள்ளது. ஞானசம்பந்தர் பாடியபோது சிவபெருமான் அருகில் இருந்து கேட்பதற்காக இங்கு அமர்ந்ததாகவும் - கேட்டதாகவும் வரலாறு. வீதியின் மேற்கோடியில் திருமேற்றளிக் கோயில் உள்ளது.[3]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் பிள்ளையார்பாளையம் திருமேற்றளித் தெருவில் நடுவில் இடப்பால் ‘உற்றுக்கேட்ட முத்தீசர்’ கோவில் தாபிக்கப்பட்டள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் மேற்கு திசையில், காஞ்சிபுரம் திருமேற்றளீசுவரர் கோயிலின் கிழக்கு திசையில் இக்கோவில் அமைந்துள்ளது.[4]

இவற்றையும் காண்க

புற இணைப்புகள்

  1. projectmadurai.org | காஞ்சிப் புராணம் - பகுதி 2 | 27. திருமேற்றளிப் படலம் 992 - 1002
  2. shaivam.org | உற்றுக்கேட்ட முத்தீசர் திருக்கோவில்
  3. tamilvu.org | காஞ்சிப் புராணம் | திருமுறைத்தலங்கள் | திருமேற்றளி: (தளி-கோயில்) | பக்கம்: 31.
  4. shaivam.org | உற்றுக்கேட்ட முத்தீசர் திருக்கோவில்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.