காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில்

காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் (இறவாத்தானம்) என்று அறியப்படும் இக்கோயில், மூலவர் அறை (கருவறை), அர்த்த மண்டபம், 16 தூண்களை கொண்ட மகாமண்டபம், புறப் பிரகாரம் என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. மேலும், பல்லவர்கள் காலத்தியதாக அறியப்படும் இது காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சிப் புராணத்தில் காணப்படுகிறது.[1][2]

காஞ்சிபுரம் இறவாத்தானம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் இறவாத்தானம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:இறவாதீசுவரர்.
தீர்த்தம்:ஞானதீர்த்தம் (வெள்ளைகுளம்).

வழிபட்டோர்

  • வழிபட்டோர்: மார்கண்டேயர், சுவேதன் மற்றும் சாலங்காயன முனிவரின் பேரன்.

தல வரலாறு

மார்கண்டேயர், சுவேதன் மற்றும் சாலங்காயன முனிவரின் பேரன் முதலியோர்கள் பிரமனின் அறியுரைப்படி காஞ்சி நகரத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு இறப்பு நிலையைக் கடந்துள்ளனர் என்பது தல வரலாறாக உள்ளது.

  • மார்கண்டேயர் இத்தலத்தின் இறைவனை வணங்கி வழிபட்டு சிரஞ்சீவி தன்மையை பெற்றான்.
  • சுவேதன் தனது மரணம் நெருங்கியதை அறிந்து, முனிவர்கள் வழிபாடு செய்த இவ்விறைவனை தானும் வழிபட்டு மரணத்தை வென்றான்.
  • சாலங்காயன முனிவரின் பேரனும் இத்தலமடைந்து இவ்விறைவனை மனமார வணங்கி வழிபட்டு தனது இறப்பை கடந்ததோடு அல்லாமல் சிவனுடைய கண்களுக்கு தலைவனுமானான் என்பது தல வரலாறாக உள்ளது.[3]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. சிவகாஞ்சி என்றழைக்கப்படும், பெரிய காஞ்சிபுரத்தின் தெற்கு பிராந்தியமான கம்மாளத் தெரு (ஜவஹர்லால் தெரு) கடைகோடியில், பச்சை வண்ணர் கோயில் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. இது, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து காஞ்சிபுரத்தை இணைக்கும் புறச்சாலையிலும், காஞ்சிபுரம் புதிய ரயில்நிலையம் செல்லும் பிரதானசாலையிலும், மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 74 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து தெற்கே 1 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[4]

மேற்கோள்கள்

  1. காஞ்சிப் புராணம் - Project Madurai, 50. இறவாத்தானப்படலம் (1661-1668)
  2. http://dinaithal.com/politics/struggles/9660-iravattanam.html இறவாத்தானம்
  3. http://www.maalaimalar.com/2013/12/26105359/temple-history.html அருள்மிகு இறவாத்தானம் திருக்கோவில்
  4. http://www.shaivam.org/siddhanta/sp/spt_kp_iravathanam.htm சிவம் ஒஆர்ஜி|காஞ்சி சிவத் தலங்கள்

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.