சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்
சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் (Chennai Egmore railway station, நிலையக் குறியீடு: MS) இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடர்வண்டி (இரயில்) நிலையங்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின், சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த இரயில் நிலையம் இந்தியாவின் தெற்கு இரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த இரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களுள் ஒன்றாக திகழ்கின்றது.[1]
சென்னை எழும்பூர் மதராசு எழும்பூர் | |
---|---|
விரைவுப் போக்குவரத்து, இலகு தொடருந்து, புறநகர் இரயில் நிலையம் | |
![]() சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தின் முகப்பு பகுதி | |
வேறு பெயர்கள் | எழும்பூர் |
இடம் | எழும்பூர், சென்னை |
அமைவு | 13.0780°N 80.2616°E |
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய ரயில்வே |
தடங்கள் |
|
நடைமேடை | 11 |
இருப்புப் பாதைகள் | 11 |
இணைப்புக்கள் |
|
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் |
தரிப்பிடம் | உள்ளது |
மாற்றுத்திறனாளி அனுகல் | ![]() |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | MS |
இந்திய இரயில்வே வலயம் | தென்னக இரயில்வே |
ரயில்வே கோட்டம் | சென்னை |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1905 |
முந்தைய பெயர் | தென்னக இரயில்வே |
போக்குவரத்து | |
பயணிகள் () | 3,00,000 நாள் ஒன்றுக்கு |
சேவைகள் | |
50 விரைவுத் தொடருந்து/ 1 நாளைக்கு 400 புறநகர் தொடருந்து/1 நாளைக்கு 50 DEMU சேவைகள்/1 நாளைக்கு | |
அமைவிடம் | |
![]() ![]() சென்னை எழும்பூர் மதராசு எழும்பூர் சென்னை வரைபடத்தில் உள்ள இடம் ![]() ![]() சென்னை எழும்பூர் மதராசு எழும்பூர் தமிழக வரைபடத்தில் உள்ள இடம் ![]() ![]() சென்னை எழும்பூர் மதராசு எழும்பூர் இந்திய வரைபடத்தில் உள்ள இடம் |
வரலாறு

இந்த இரயில் நிலையம் ஒரு கோட்டையாக இருந்து வந்துள்ளது. இதற்கு பெயர் 'எழும்பூர் ரெடோ' ஆகும். இது சாந்தோமில் உள்ள லீட்ஸ் கோட்டை போன்றுள்ளதாக அறியப்படுகிறது. பிரிட்டிசாரால் வெடிபொருட்கள் சேமிக்க பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.[2]
இடம்
இந்த இரயில் நிலையம் கட்டிடமானது 2.5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் 1.7 ஏக்கர் டாக்டர் பால் ஆண்டி இருந்து பெறப்பட்டதாகும். இவர் முதலில் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் தான் 1.7 ஏக்கர் சொத்தினை சிரமேற்கொண்டு வளர்த்ததின் காரணமாக தர மறுத்துள்ளார். பின்னர் தென் இந்திய ரெயில்வே நிறுவனம் 1,00,000 ரூபாய் கொடுத்து வாங்கியது.
கட்டுமானம்
இந்தோ-சாராசனிக் பாணியில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இராபர்ட் சிஸ்ஹோம் (Robert Chisholm) என்ற ஆங்கிலேயர் கட்டிடத்திற்கான வரைபடத்தை வடிவமைத்துக் கொடுத்தாக அறியப்படுகிறது. பெங்களூரைச் சேர்ந்த தி சாமிநாத பிள்ளை என்பவரால் 1905இல் செப்டம்பர் மாதம் கட்டுமானம் தொடங்கப்பட்டது. கட்டுவதற்காக சுமார் 1.7 மில்லியன் செலவிடப்பட்டது.[2] சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் அதிகாரப்பூர்வமாக 1908 சூன் 11 ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.[3][4]
தொடக்கம்
முதலில் இதற்கு கிளைவ் என்பவரின் பெயர் சூட்டப்பட இருந்தது. எனினும், பொதுமக்கள் கடுமையாக எதிர்த்த காரணத்தால் எழும்பூர் தொடருந்து நிலையம் என பெயரிடப்பட்டது. நிலையம் திறக்கப்படும் போது அங்கு மின்சார இணைப்பு இல்லாமல் இருந்தனால் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுத்தப்பட்டது. 1951 ஆம் ஆண்டு தென்னக இரயில்வே உருவாகிய பிறகு சென்னையின் முக்கிய மீட்டர் கேஜ் முனையமாக எழும்பூர் தொடருந்து நிலையம் மாறியது.
இலங்கை கொழும்பு ரயில்கள்
எழும்பூரில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கும் ரயில்கள் இயக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது. கொழும்பு செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்லும் எழும்பூர் – தனுஷ்கோடி போட் மெயில், அவர்களை தனுஷ்கோடியில் இறக்கிவிட்டுவிடும். பின்னர் அவர்கள் அங்கிருந்து படகு மூலம் இலங்கையின் தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தலைமன்னாரில் இருந்து கொழும்பு செல்ல ஒரு இரயில் தயாராக காத்திருக்கும். 1964ஆம் ஆண்டு வீசிய புயலில் தனுஷ்கோடி இருப்புப் பாதை முற்றிலுமாக அழிந்துபோனதால், அத்துடன் இந்த இரயில் சேவை நிறுத்தப்பட்டது.[5]
இரயில்கள்
சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் இரயில்கள்
- சென்னை எழும்பூர் - திருநெல்வேலி - நெல்லை விரைவுத் தொடருந்து - அதிவிரைவு - விழுப்புரம் மற்றும் திருச்சி வழியாக (இரவு இரயில்)
- சென்னை எழும்பூர் - மதுரை - வைகை விரைவுத் தொடருந்து - அதிவிரைவு - விழுப்புரம் மற்றும் திருச்சி வழியாக (நாள் இரயில்)
- சென்னை எழும்பூர் - மதுரை - பாண்டியன் விரைவுத் தொடருந்து - அதிவிரைவு - விழுப்புரம் மற்றும் திருச்சி வழியாக (இரவு இரயில்)
- சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி - கன்னியாகுமரி விரைவுத் தொடருந்து - அதிவிரைவு - விழுப்புரம், திருச்சி மற்றும் மதுரை வழியாக (இரவு இரயில்)
- சென்னை எழும்பூர் - தூத்துக்குடி - முத்து நகர் விரைவுத் தொடருந்து - அதிவிரைவு -விழுப்புரம், திருச்சி மற்றும் மதுரை வழியாக (இரவு இரயில்)
- சென்னை எழும்பூர் - நாகர்கோவில் - அதிவிரைவு எக்ஸ்பிரஸ் -விழுப்புரம், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி வழியாக வாராந்திர விரைவுத் தொடருந்து (இரவு இரயில்)
- சென்னை எழும்பூர் - காரைக்குடி - பல்லவன் அதிவிரைவுத் தொடருந்து - அதிவிரைவு - விழுப்புரம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை வழியாக (தினசரி)
- சென்னை எழும்பூர் - திருச்சி மலைக்கோட்டை விரைவுத் தொடருந்து - விழுப்புரம், விருத்தாசலம் மற்றும் அரியலூர் வழியாக (இரவு இரயில்)
- சென்னை எழும்பூர் - செங்கோட்டை - பொதிகை விரைவுத் தொடருந்து - அதிவிரைவு - விழுப்புரம், திருச்சி மற்றும் மதுரை வழியாக (இரவு ரயில்)
- சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் - அனந்தபுரி விரைவுத் தொடருந்து - விழுப்புரம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் வழியாக (இரவு இரயில்)
- சென்னை எழும்பூர் - திப்ருகர் - தாம்பரம் - திப்ருகர் விரைவுத் தொடருந்து - சென்னைக் கடற்கரை வாராந்திர விரைவுத் தொடருந்து (நாள்/இரவு இரயில்)
- சென்னை எழும்பூர் - குவகாத்தி - குவகாத்தி விரைவுத் தொடருந்து- சென்னைக் கடற்கரை வழியாக வாராந்திர விரைவுத் தொடருந்து (நாள்/இரவு இரயில்)
- சென்னை எழும்பூர் - கயா - கயா - சென்னை எழும்பூர் விரைவுத் தொடருந்து - சென்னைக் கடற்கரை வழியாக வாராந்திர அதிவிரைவு தொடருந்து (நாள்/இரவு இரயில்)
- சென்னை எழும்பூர் - மங்களூர் - மங்களூர் விரைவு தொடருந்து - விழுப்புரம், திருச்சி, கோயம்புத்தூர் வழியாக (நாள்/இரவு இரயில்)
- சென்னை எழும்பூர் - காச்சிகுடா - காச்சிகுடா செங்கல்பட்டு விரைவுத் தொடருந்து - சென்னைக் கடற்கரை, ரேணிகுண்டா, துவ்வாடா மற்றும் தோனு வழியாக (நாள்/இரவு ரயில்)
- சென்னை எழும்பூர் - ஜோத்பூர் - சென்னைக் கடற்கரை வழியாக வாராந்திர எக்ஸ்பிரஸ் (நாள்/இரவு இரயில்)
- சென்னை எழும்பூர் - புதுச்சேரி - சென்னை எழும்பூர் - புதுச்சேரி விரைவுத் தொடருந்து - விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு வழியாக (தினசரி)
- சென்னை எழும்பூர் - தாதர் -
தாதர் - சென்னை எழும்பூர் விரைவுத் தொடருந்து - கடப்பா மற்றும் புனே வழியாக (நாள்/இரவு இரயில்)
- சென்னை எழும்பூர் - சேலம்/மேட்டூர் அணை - [சென்னை எழும்பூர் - மேட்டூர் அணை விரைவுத் தொடருந்து] - விழுப்புரம் மற்றும் ஆத்தூர் வழியாக (இரவு/இணைப்பு இரயில்)
- சென்னை எழும்பூர் - காக்கிநாடா - சிர்கார் விரைவுத் தொடருந்து -சென்னைக் கடற்கரை மற்றும் விஜயவாடா வழியாக (இரவு இரயில்)
- சென்னை எழும்பூர் - குருவாயூர் / தூத்துக்குடி - குருவாயூர் விரைவுத் தொடருந்து - விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் எர்ணாகுளம் வழியாக (நாள்/இரவு இரயில்)
- சென்னை எழும்பூர் - திருச்சி - சோழன் விரைவுத் தொடருந்து - விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை - தஞ்சாவூர் வழியாக (நாள் இரயில்)
- சென்னை எழும்பூர் - மதுரை - மதுரை டேராடூன் விரைவுத் தொடருந்து - சேலம், திண்டுக்கல் வழியாக வாரம் இருமுறை
- சென்னை எழும்பூர் - இராமேஸ்வரம் படகு போக்குவரத்து - விழுப்புரம், கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் வழியாக (இரவு ரயில்)
- சென்னை எழும்பூர் - இராமேஸ்வரம் சேது விரைவுத் தொடருந்து - விழுப்புரம் - விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி மானாமதுரை வழியாக (இரவு ரயில்)
- சென்னை எழும்பூர் - காரைக்கால்/வேளாங்கண்ணி - கம்பன் விரைவு தொடருந்து - விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகூர் வழியாக (இரவு இரயில்)
- சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் - செந்தூர் விரைவுத் தொடருந்து - விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் திருச்சி வழியாக (இரவு இரயில்)
- சென்னை எழும்பூர் - மன்னார்குடி - மன்னை விரைவுத் தொடருந்து - விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் வழியாக (இரவு இரயில்)
- சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு விரைவுத் தொடருந்து - விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம் வழியாக வாரமிருமுறை (இரவு இரயில்)
- சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் - உழவன் விரைவுத் தொடருந்து - விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம் வழியாக (இரவு இரயில்)
சென்னை எழும்பூர் வழியாக செல்லும் ரயில்கள்
- திருச்சி - ஹவுரா (ஹவுரா விரைவுத் தொடருந்து)
- மதுரை, திருச்சி, விஜயவாடா, புவனேஸ்வர் வழியாக கன்னியாகுமரி - (ஹவுரா கேப் விரைவுத் தொடருந்து)
- திருச்சி, விஜயவாடா, போபால் வழியாக மதுரை - ஹசரத் நிசாமுதீன் (தமிழ்நாடு சம்பர்கிராந்தி அதிவேக விரைவுத் தொடருந்து)
- மதுரை, திருச்சி, விஜயவாடா, போபால் வழியாக கன்னியாகுமரி - ஹசரத் நிசாமுதீன் (திருக்குறள் விரைவுத் தொடருந்து)
- புதுச்சேரி - புவனேஸ்வர் (புதுச்சேரி - புவனேஸ்வர் அதிவிரைவுத் தொடருந்து)
- புதுச்சேரி - புது தில்லி, (புதுச்சேரி - புது டெல்லி அதிவிரைவுத் தொடருந்து)
- காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம் வழியாக இராமேஸ்வரம் - புவனேஸ்வர் (இராமேஸ்வரம் - புவனேஸ்வர் வாராந்திர விரைவுத் தொடருந்து)
- காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் வழியாக இராமேஸ்வரம் - வாரணாசி (இராமேஸ்வரம் - மண்டுவாடி விரைவுத் தொடருந்து)
அமைப்பத்திட்டம்
.jpeg)
எழும்பூர் தொடருந்து நிலையம் 925 மீ தூரத்தில் பிரிக்கப்பட்ட இரண்டு மேம்பாலங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. சுமார் 750 மீ நீளம் கொண்ட இந்த தொடருந்து நிலையத்தில் 11 தளங்கள் உள்ளன. தளம் 1,2,3 குறைந்த நீளம் கொண்ட தளங்கள் ஆகும். இவை சிறிய ரக தொடருந்துகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. முக்கியமான 4ஆம் தளம் எழும்பூர் தொடருந்து நிலையத்தின் மையப்பகுதியில் நீண்டுள்ளது. 5,6,7 ஆம் தளங்கள் நீள ரக தொடருந்துகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
2004 ஆம் ஆண்டில், பூந்தமல்லி ஹை ரோடு பக்கத்தில் நிலையத்தில் இரண்டாவது நுழைவுவாயில் கட்டுமானம் இந்திய ரூபாய் 115.3 மில்லியன் செலவில் தொடங்கியது. 2006 ஆம் ஆண்டு சூன் மாதம் இந்த இரண்டாவது நுழைவுவாயில் திறக்கப்பட்டது.
போக்குவரத்து

2013 வரை, இந்த தொடருந்து நிலையம் தினமும் சுமார் 35 முக்கிய வழிவகை ரயில்கள் மற்றும் 118 புறநகர் ரயில்கள், மற்றும் சுமார் 150,000 மக்களை கையாளுகிறது.[6]
வசதிகள்
பயணத் தொடர்புகள்
வெளியூர்களுக்குச் செல்லும் ரயில்களும், சென்னையின் தெற்குப்புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும், சென்னை எழும்பூரிலிருந்து செயல்படுகின்றன. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு இரயில்கள் இங்கிருந்து செல்கின்றன. சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்கல்பட்டு ஆகியவற்றிற்குச் செல்லும் புறநகர் ரயில்களும் இங்கிருந்து செல்கின்றன.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மாநகரப் பேருந்து நிறுத்தங்கள், ஆட்டோ ரிக்சா, டாக்ஸி மற்றும் கால் டாக்ஸி போன்ற வாடகை வண்டிகளின் சேவைகள் உள்ளது. சீருந்து, இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் இருக்கின்றன.
உணவு மற்றும் இதர வசதிகள்
மேலும் உணவகங்கள், கட்டணக் கழிப்பிடங்கள், உதவி மையங்கள், வலைதள மையம், தங்கும் விடுதி, புத்தகக் கடைகள் என பல வசதிகளும் உள்ளன.
சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்
உசாத்துனைகள்
- "Madras Miscellany - Whither this National Library?". தி இந்து (September 19, 2010). பார்த்த நாள் February 20, 2010.
- Pain, Paromita (27 Jun 2008). "Heritage tracks". Business Line (Chennai: The Hindu). http://www.thehindubusinessline.in/life/2008/06/27/stories/2008062750030200.htm. பார்த்த நாள்: 8 Nov 2012.
- Muthiah, S. (16 June 2008). "Egmore and the South". The Hindu (Chennai: The Hindu). http://www.hindu.com/mp/2008/06/16/stories/2008061650520500.htm. பார்த்த நாள்: 29 Dec 2011.
- Muthiah, S. (9 May 2010). "The railway of the Deep South". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/arts/history-and-culture/article425584.ece. பார்த்த நாள்: 28 Dec 2011.
- http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/one-hundred-years-of-tireless-travel-still-chugging-with-charm/article1272754.ece
- Venugopal, Vasudha (5 February 2013). "Display boards at station fail to show the way". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/news/cities/chennai/display-boards-at-station-fail-to-show-the-way/article4379567.ece. பார்த்த நாள்: 11 Feb 2013.