சேது விரைவு வண்டி
சேது விரைவுத் தொடர்வண்டி (Sethu Express) என்பது இந்திய ரயில்வேயின், தெற்கு ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்கும் ஓர் அதிவிரைவுத் தொடர் வண்டியாகும். இது சென்னை எழும்பூர் முதல் ராமேஸ்வரம் வரை இயக்கப்படுகிறது. இது 22 ரயில் பெட்டிகள் கொண்ட ஒரு தினசரி தொடர் வண்டியாகும். இந்த இரயில் சராசரியாக 603 கி. மீ (374 மைல்) தூரத்தை 11 மணி நேரத்தில் கடக்கிறது.
சேது விரைவுத் தொடர்வண்டி | |||
---|---|---|---|
![]() | |||
கண்ணோட்டம் | |||
வகை | விரைவு வண்டி | ||
நிகழ்வு இயலிடம் | தமிழ்நாடு | ||
நடத்துனர்(கள்) | இந்திய இரயில்வே | ||
வழி | |||
தொடக்கம் | சென்னை எழும்பூர் (MS) | ||
இடைநிறுத்தங்கள் | 18 | ||
முடிவு | ராமேஸ்வரம் (RMM) | ||
ஓடும் தூரம் | 603 கி.மீ (375 மைல்) | ||
சராசரி பயண நேரம் | 11 மணி நேரம் | ||
சேவைகளின் காலஅளவு | தினமும் | ||
தொடருந்தின் இலக்கம் | 22661/22662 | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | 2 AC, 3 AC, SL, UR | ||
இருக்கை வசதி | உண்டு | ||
படுக்கை வசதி | உண்டு | ||
காணும் வசதிகள் | பெரிய சாளரம் | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) | ||
வேகம் | 51 km/h (32 mph) | ||
|
சொற்பிறப்பு
18 ஆம் நூற்றாண்டின் தமிழ்நாட்டின், ராமநாதபுரம் "சேதுபதி" சமஸ்தானம் (இளவரசர்) மன்னர் நினைவாக பெயரிடப்பட்டது.

வழித்தடம்
சென்னையிலிருந்து, செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் போன்ற முக்கிய நகரங்கள் வழியாக இராமேஸ்வரம் சென்றடைகிறது, திருச்சிராப்பள்ளி முதல் சென்னை எழும்பூர் வரை RPM / ED WAP4 Electric Loco மூலம் இயக்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மற்றும் இராமேஸ்வரம் இடையே GOC WDP3A / ED WDM3D டீசல் லோகோ மூலம் இயக்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மற்றும் தாம்பரம் இடையே, இந்த ரயில் அதிகபட்சமாக 110 கிமீ/மணிநேரத்தை அடைகிறது.
பெட்டிகளின் விவரம்
மொத்த பெட்டிகளின் எண்ணிக்கை 23
Loco | SLR | UR | UR | S1 | S2 | S3 | S4 | S5 | S6 | S7 | S8 | S9 | S10 | S11 | S12 | B3 | B2 | B1 | A1 | HA1 | UR | UR | SLR |
பெட்டி பகிர்தல்
கொல்லம் மற்றும் சென்னை எழும்பூர் இடையே இயங்கும், அனந்தபுரி விரைவு வண்டியுடன் (RSA) 16723/24 இரயில் பெட்டி பகிர்வு செய்யப்படுகிறது.
மேலும் பார்க்க
- சோழன் விரைவு வண்டி
- பல்லவன் விரைவு வண்டி
- பான்டியன் விரைவு வண்டி
- வைகை விரைவு வண்டி
- படகு விரைவு வண்டி
- மலைக்கோட்டை விரைவு வண்டி
- சிலம்பு விரைவு வண்டி
- ஆனந்தபுரி விரைவு வண்டி
- பொதிகை விரைவு வண்டி
- மங்களூர் விரைவு வண்டி