மலைக்கோட்டை விரைவுவண்டி

மலைக்கோட்டை விரைவு ரயில் அல்லது மலைக்கோட்டை விரைவு வண்டி (Rockfort Express) ஓரிரவு ரயில் சேவையாகும். ஒரே நாள் இரவில் இச்சேவை தனது இலக்கினை அடைந்துவிடும். இது திருச்சி முதல் சென்னை எழும்பூர் வரை செயல்படுகிறது. இது தனது முதல் சேவையினை 1972 ஆம் ஆண்டு தொடங்கியது. [1]

மலைக்கோட்டை விரைவு ரயில் (திருச்சி - சென்னை எழும்பூர்) வழித்தடம்

16178 என்ற வண்டி எண்ணுடன் திருச்சிராப்பள்ளி சந்திப்பில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வரையிலும், 16177 என்ற வண்டி எண்ணுடன் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரையிலும் மலைக்கோட்டை விரைவு ரயில் செயல்படுகிறது.

பின்புல விவரங்கள்

12 ஆம் நூற்றாண்டில் திருச்சியின் முக்கிய இடமான மலைக்கோட்டை கோவிலினைச் சிறப்பிக்கும் பொருட்டு இந்த ரயில்சேவைக்கு இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சென்னையின் எழும்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி சந்திப்பிற்கு இடையே இச்சேவை செயல்பட்டது. பின்னர் இதன் ஒரு பகுதிச் சேவையாக தஞ்சாவூர் சந்திப்பு வரை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் (6117A/6178A) என்ற பெயருடன் செயல்படத் தொடங்கியது. இச்சேவை கும்பகோணத்தில் மகாமகத் திருவிழா நடக்கும் காலகட்டத்தில் மேலும் நீட்டிக்கப்பட்டு கும்பகோணம் வரை செயல்பட்டது. இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகள் 2013 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் இந்த ரயில்சேவை திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை மட்டுமே செயல்படத் தொடங்கியது.[2]

வழிப்பாதையும் நிறுத்தங்களுக்கான நேரமும்

எண் நிலையத்தின்

பெயர் (குறியீடு)

வரும்

நேரம்

புறப்படும்

நேரம்

நிற்கும்

நேரம் (நிமிடங்கள்)

கடந்த

தொலைவு

நாள் பாதை
1 திருச்சிராப்பள்ளி

(TPJ)

தொடக்கம் 22:25 0 0 கி.மீ 1 1
2 பொன்மலை

தங்கப் பாறை (GOC)

22:32 22:33 1 நிமி 3 கி.மீ 1 1
3 திருச்சிராப்பள்ளி

நகரம் (TPTN)

22:42 22:43 1 நிமி 9 கி.மீ 1 1
4 ஸ்ரீரங்கம்

(SRGM)

22:49 22:50 1 நிமி 12 கி.மீ 1 1
5 லால்குடி

(LLI)

23:04 23:05 1 நிமி 27 கி.மீ 1 1
6 கல்லக்குடி

(KKPM)

23:19 23:20 1 நிமி 46 கி.மீ 1 1
7 அரியலூர்

(ALU)

23:44 23:45 1 நிமி 70 கி.மீ 1 1
8 பெண்ணாடம்

(PNDM)

00:17 00:18 1 நிமி 105 கி.மீ 2 1
9 விருத்தாச்சலம்

சந்திப்பு (VRI)

00:38 00:40 2 நிமி 123 கி.மீ 2 1
10 விழுப்புரம்

சந்திப்பு (VM)

01:53 01:55 2 நிமி 178 கி.மீ 2 1
11 திண்டிவனம்

(TMV)

02:38 02:40 2 நிமி 215 கி.மீ 2 1
12 செங்கல்பட்டு

(CGL)

03:48 03:50 2 நிமி 281 கி.மீ 2 1
13 தாம்பரம்

(TBM)

04:18 04:20 2 நிமி 312 கி.மீ 2 1
14 மாம்பலம்

(MBM)

04:39 04:40 1 நிமி 329 கி.மீ 2 1
15 சென்னை

எழும்பூர் (MS)

05:15 முடிவு 0 336 கி.மீ 2 1

வண்டி எண் 16178

இது திருச்சிராப்பள்ளி சந்திப்பில் இருந்து, சென்னை எழும்பூர் வரை செயல்படுகிறது. 6 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்கள் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 13 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 49 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 337 கிலோ மீட்டர் தொலைவினை 6 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் கடக்கிறது. திருச்சி மற்றும் சென்னை எழும்பூருக்கு இடைப்பட்ட 72 ரயில் நிறுத்தங்களில் 13 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்தில் சராசரியாக மூன்று நிமிடங்கள் தாமதத்தினைக் கொண்டுள்ளது. இதன் ரயில் பெட்டிகளின் அடுக்கு விவரங்கள் பின்வருமாறு.[3]

L – SLR – UR – H1 – HA1 – A1 – A2 – B1 – B2 – B3 – B4 – S1 – S2 – S3 – S4 – S5 – S6 – S7 – S9 – S10 – S11 – UR – UR - SLR

வண்டி எண் 16177

இது சென்னை எழும்பூரில் இருந்து, திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை செயல்படுகிறது. 7 மணி நேரம் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 12 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 48 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 337 கிலோ மீட்டர் தொலைவினை 7 மணி நேரத்தில் கடக்கிறது. இது சென்னை எழும்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளிக்கு இடைப்பட்ட 72 ரயில் நிறுத்தங்களில் 12 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்தில் சராசரியாக ஒரு நிமிடம் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் சராசரியாக மூன்று நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது. இதன் ரயில் பெட்டிகளின் அடுக்கு விவரங்கள் பின்வருமாறு. [4]

L – SLR – UR – S11 – S10 – S9 – S8 – S7 – S6 – S5 – S4 – S3 – S2 – S1 – B4 – B3 – B2 – B1 – A2 – A1 – HA1 – H1 – UR – SLR

குறிப்புகள்

  1. "Old time table of SR - 1977". IR Southern Zone - Discussion. பார்த்த நாள் 24th July 2015.
  2. "Rockfort Express (16178) Stations". cleartrip.com. பார்த்த நாள் 24th july 2015.
  3. "Stations between Tiruchchirappalli Junction and Chennai Egmor". indian rail info. பார்த்த நாள் 24th july 2015.
  4. "Stations between Chennai Egmore and Tiruchchirappalli Junction". indian rail info. பார்த்த நாள் 24th july 2015.

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.