பாண்டியன் அதிவிரைவுத் தொடருந்து

பாண்டியன் அதிவிரைவு வண்டி, இந்திய இரயில்வேயின் ஒரு மண்டலமான தெற்கு இரயில்வேயால் மதுரை சந்திப்பு மற்றும் சென்னை எழும்பூர் இடையே திருச்சிராப்பள்ளி வழியாக இயக்கப்படும் ஒரு அதிவிரைவுத் தொடருந்து ஆகும் (மறுதலையாகவும்).

பாண்டியன் அதிவிரைவுத் தொடருந்து
மதுரை சந்திப்பில்
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு வண்டி
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு
நடத்துனர்(கள்)தென்னக இரயில்வே
வழி
தொடக்கம்சென்னை எழும்பூர்
இடைநிறுத்தங்கள்10
முடிவுமதுரை சந்திப்பு
ஓடும் தூரம்497 km (309 mi)
சராசரி பயண நேரம்9 மணிநேரம்
சேவைகளின் காலஅளவுதினசரி
தொடருந்தின் இலக்கம்12637/12638
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)முதல் வகுப்பு AC, இரண்டாம் வகுப்பு AC, மூன்றாம் வகுப்பு AC, படுக்கைப் வகுப்பு, முன்பதிவற்ற வகுப்பு
இருக்கை வசதிஆம்
படுக்கை வசதிஆம்
காணும் வசதிகள்பெரிய காலதர்கள்
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்60 km/h (37 mph) நிறுத்தங்களுடன் சராசரி
வழிகாட்டுக் குறிப்புப் படம்

அறிமுகம்

மதுரையைத் தலைமையிடமாக கொண்ட பாண்டியர்கள் பெயரால் இத்தொடருந்து அழைக்கப்படுகிறது. செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், திருச்சி மற்றும் திண்டுக்கல் முதலிய நகரங்கள் வழியே 497 கி.மீ. பயணிக்கிறது. இதன் அதிகபட்ச வேகம் 110 கி.மீ/மணி. இது தெற்கு இரயில்வேயின் குறிப்பிடத்தக்க வண்டிகளுள் ஒன்றாகும். இது ராக்போர்ட் விரைவுத்தொடருந்துடன் பெட்டிகளைப் பகிர்ந்து கொள்கிறது. இத் தொடருந்து மதுரை பணிமனையில் பராமரிக்கப்படுகிறது.

மதுரை சந்திப்பில் நிற்கும் பாண்டியன் விரைவுத் தொடருந்து

கால அட்டவணை

வண்டி எண் 12637 சென்னை எழும்பூரிலிருந்து 21.20 மணிக்குப் புறப்பட்டு மதுரை சந்திப்பை 6.15 மணிக்கு அடைகிறது. மறுமார்க்கமாக வண்டி எண் 12638 மதுரை சந்திப்பிலிருந்து 20.35 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூரை 05.35 மணிக்கு அடைகிறது.[1][2]

பெட்டிகள் அமைப்பு முறை

2014 இலிருந்து முதல் வகுப்பு பெட்டி நீக்கப்பட்டது.

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
SLRURS12S11S10S9S8S7S6S5S4S3S2S1B4 (used to be FC)B3B2B1A2A1HA1H1GSSLR

வண்டியின் வேகம்

இது தென்னக இரயில்வேயின் அதிவேக வண்டிகளுள் ஒன்றாகும். முழுவதும் மின்சார என்ஜினால் இயக்கப்படும் இதன் சராசரி வேகம் 54 கி.மீ/மணி மற்றும் அதிகபட்ச வேகம் 110 கி.மீ/மணி

உசாத்துணைகள்

  1. Indian Rail info - Train 12637 http://indiarailinfo.com/train/1227
  2. Indian Rail info - Train 12638 http://indiarailinfo.com/train/1228
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.