நெல்லை அதிவிரைவு வண்டி
நெல்லை அதிவிரைவுத் தொடருந்து அல்லது நெல்லை அதிவிரைவு வண்டி (ஆங்கிலம்:Nellai Superfast Express) இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலத்தினைச் சார்ந்த ஒரு விரைவுவண்டி. இது திருநெல்வேலிக்கும் சென்னைக்கும் இடையே தினமும் இரு வழியிலும் இயக்கப்படுகின்றது.[1][2]

_Route_map.jpg)
பெயர்க் காரணம்
திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் கோவிலின் அடையாளமாக இந்நகரம் ’நெல்லை’ என்றும் அழைக்கப்படுகிறது. எனவே நெல்லையிருந்து கிளம்பும்/வந்தடையும் இத்தொடருந்து "நெல்லை விரைவுத்தொடருந்து" என்ற பெயரிடப்பட்டுள்ளது.
குறியீடு
பழைய எண்கள்
- 119/120
- 6119/6120
- 2631/2632
புதிய எண்
- 12631/12632
குறியீட்டின் படி, 12631 பெயரிடப்பட்ட தொடருந்து சென்னையிலிருந்து 20.10 மணிக்குப் புறப்பட்டு திருநெல்வேலியை மறுநாள் காலை 07.10 மணிக்கு அடைகின்றது. மறுமார்க்கத்தில் 12632 எனப் பெயரிடப்பட்ட தொடருந்து திருநெல்வேலியிலிருந்து 19.25 மணிக்கு புறப்பட்டு சென்னையை மறுநாள் காலை 06.55 மணிக்கு அடைகின்றது. இது இந்தியாவின் பழமையான பயணிகள் தொடருந்து ஆகும். இது 653 கி.மீ தொலைவினை 12 மணி பயணநேரத்திற்குள் கடக்கின்றது. இந்தத் தொடருந்தின் முக்கியமான நிறுத்தங்கள் மதுரை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் ஆகும். இது 24 பெட்டிகளைக் கொண்டுள்ளது. இந்தத் தொடருந்து RPM WAP7 எனும் எஞ்சினால் இயக்கப்படுகின்றது..
பெட்டிகளின் தொகுப்பு
சென்னையிலிருந்து (12631) திருநெல்வேலிக்கு புறப்படும் வண்டியின் பயணப்பெட்டிகளின் அமைப்பு பின்வருமாறு இருக்கும். இதுவே திருநெல்வேலியிலிருந்து (12632) சென்னைக்கு புறப்படும் வண்டியின் பயணப்பெட்டியின் அமைப்பு தலைகீழாக மாறிவரும்.
Loco | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | SLR | GEN | GEN | S12 | S11 | S10 | S9 | S8 | S7 | S6 | S5 | S4 | S3 | S2 | S1 | B6 | B5 | B4 | B3 | B2 | B1 | A1 | GEN | SLR |
கால அட்டவணை
- /==/ மின்சாரமயமாக்கப்பட்ட இரட்டை அகல இரயில்பாதை
- %==/ மின்சாரமயமாக்கப்பட்ட ஒற்றை அகல இரயில்பாதை -> மின்சாரமயமாக்கப்படும் இரட்டை அகல இரயில்பாதை வேலை நடந்துகொண்டிருக்கிறது;
- %==% மின்சாரமயமாக்கப்படும் இரட்டை அகல இரயில்பாதை வேலை நடந்துகொண்டிருக்கிறது
- /--/ மின்சாரமயக்கப்பட்ட ஒற்றை அகல் இரயில்பாதை
'சென்னை எழும்பூர் - திருநெல்வேலி (12631) '
குறியீடு | தண்டவாளம் | நிலையம் | தொலைவு (கி.மீ) | வந்தடையும் நேரம் | புறப்படும் நேரம் | வருகை நாள் | மாநிலம் | பிரிவு | மண்டலம் |
---|---|---|---|---|---|---|---|---|---|
MS | /==/ | சென்னை எழும்பூர் | 0 | - | 20:10 | தினமும் | தமிழ்நாடு | MAS | தெற்கு ரயில்வே |
TBM | /==/ | தாம்பரம் | 25 | 20:33 | 20:35 | தினமும் | தமிழ்நாடு | MAS | தெற்கு ரயில்வே |
CGL | /==/ | செங்கல்பட்டு | 56 | 21:03 | 21:05 | தினமும் | தமிழ்நாடு | MAS | தெற்கு ரயில்வே |
MLMR | /==/ | மேல்மருவத்தூர் | 91 | 21:33 | 21:35 | தினமும் | தினமும் | MAS | தெற்கு ரயில்வே |
TMV | /==/ | திண்டிவனம் | 121 | 22:03 | 22:05 | தினமும் | தினமும் | MAS | தெற்கு ரயில்வே |
VM | /==/ | விழுப்புரம் சந்திப்பு | 158 | 22:40 | 22:45 | தினமும் | தமிழ்நாடு | TPJ | தெற்கு ரயில்வே |
VRI | /==/ | விருதாச்சலம் சந்திப்பு | 213 | 23:20 | 23:22 | தினமும் | தமிழ்நாடு | TPJ | தெற்கு ரயில்வே |
TPJ | /==/ | திருச்சி சந்திப்பு | 337 | 02:05 | 02:10 | தினமும் | தமிழ்நாடு | TPJ | தெற்கு ரயில்வே |
DG | /==/ | திண்டுக்கல் சந்திப்பு | 431 | 03:28 | 03:30 | தினமும் | தமிழ்நாடு | MDU | தெற்கு ரயில்வே |
SDN | /==/ | சோழவந்தான் | 472 | 04:04 | 04:05 | தினமும் | தமிழ்நாடு | MDU | தெற்கு ரயில்வே |
MDU | /==/ | மதுரை சந்திப்பு | 493 | 04:35 | 04:40 | தினமும் | தமிழ்நாடு | MDU | தெற்கு ரயில்வே |
VPT | %==% | விருதுநகர் சந்திப்பு | 536 | 05:18 | 05:20 | தினமும் | தமிழ்நாடு | MDU | தெற்கு ரயில்வே |
SRT | %==% | சாத்தூர் | 564 | 05:43 | 05:45 | தினமும் | தமிழ்நாடு | MDU | தெற்கு ரயில்வே |
CWP | %==% | கோவில்பட்டி | 585 | 06:05 | 06:07 | தினமும் | தமிழ்நாடு | MDU | தெற்கு ரயில்வே |
TEN | %==% | திருநெல்வேலி சந்திப்பு | 650 | 08:00 | - | தினமும் | தமிழ்நாடு | MDU | தெற்கு ரயில்வே |
'திருநெல்வேலி - சென்னை எழும்பூர் (12632) '
குறியீடு | தண்டவாளம் | நிலையம் | தொலைவு (கி.மீ) | வந்தடையும் நேரம் | புறப்படும் நேரம் | வருகை நாள் | மாநிலம் | பிரிவு | மண்டலம் |
---|---|---|---|---|---|---|---|---|---|
TEN | %==% | திருநெல்வேலி சந்திப்பு | 0 | - | 19:25 | தினமும் | தமிழ்நாடு | MDU | தென்னக இரயில்வே |
CVP | %==% | கோவில்பட்டி | 65 | 20:23 | 20:25 | தினமும் | தமிழ்நாடு | MDU | தெற்கு ரயில்வே |
SRT | %==% | சாத்தூர் | 86 | 20:43 | 20:45 | தினமும் | தமிழ்நாடு | MDU | தெற்கு ரயில்வே |
VPT | %==% | விருதுநகர் சந்திப்பு | 113 | 21:23 | 21:25 | தினமும் | தமிழ்நாடு | MDU | தெற்கு ரயில்வே |
MDU | /==/ | மதுரை சந்திப்பு | 157 | 22:05 | 22:10 | தினமும் | தமிழ்நாடு | MDU | தெற்கு ரயில்வே |
SDN | /==/ | சோழவந்தான் | 178 | 22:29 | 22:30 | தினமும் | தமிழ்நாடு | MDU | தெற்கு ரயில்வே |
DG | /==/ | திண்டுக்கல் சந்திப்பு | 219 | 23:13 | 23:15 | தினமும் | தமிழ்நாடு | MDU | தெற்கு ரயில்வே |
TPJ | /==/ | திருச்சி சந்திப்பு | 313 | 01:00 | 01:05 | தினமும் | தமிழ்நாடு | TPJ | தெற்கு ரயில்வே |
VRI | /==/ | விருதாச்சலம் சந்திப்பு | 437 | 02:43 | 02:45 | தினமும் | தமிழ்நாடு | TPJ | தெற்கு ரயில்வே |
VM | /==/ | விழுப்புரம் சந்திப்பு | 491 | 03:53 | 03:55 | தினமும் | தமிழ்நாடு | TPJ | தெற்கு ரயில்வே |
TMV | /==/ | திண்டிவனம் | 527 | 04:39 | 04:40 | தினமும் | தமிழ்நாடு | MAS | தெற்கு ரயில்வே |
MLMR | /==/ | மேல்மருவத்தூர் | 556 | 05:04 | 05:05 | தினமும் | தமிழ்நாடு | MAS | தெற்கு ரயில்வே |
CGL | /==/ | செங்கல்பட்டு | 594 | 05:38 | 05:40 | தினமும் | தமிழ்நாடு | MAS | தெற்கு ரயில்வே |
TPM | /==/ | தாம்பரம் | 625 | 06:08 | 06:10 | தினமும் | தமிழ்நாடு | MAS | தெற்கு ரயில்வே |
MBM | /==/ | மாம்பலம் | 643 | 06:29 | 06:30 | தினமும் | தமிழ்நாடு | MAS | தெற்கு ரயில்வே |
MS | /==/ | சென்னை எழும்பூர் | 650 | 07:10 | - | தினமும் | தமிழ்நாடு | MAS | தெற்கு ரயில்வே |
மேற்கோள்கள்
- "12632/Nellai Superfast Express". பார்த்த நாள் 24 சூலை 2015.
- http://indiarailinfo.com/train/nellai-superfast-express-12631-ms-to-ten/1181/779/797