சிறுசேரி

சிறுசேரி (Siruseri) தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, சென்னையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள, ஓர் புறநகர்ப் பகுதியாகும். சென்னையிலிருந்து தெற்கே 30 கிமீ தொலைவில் ராஜீவ் காந்தி சாலையில் அமைந்துள்ளது. இச்சாலையில் நாவலூருக்கும் கேளம்பாக்கத்திற்கும் இடையே இச்சிற்றூர் அமைந்துள்ளது.

சிறுசேரி
  சுற்றுப் பகுதி  
சிறுசேரி சிப்காட்டிலிலுள்ள அலுவலகக் கட்டிடங்கள்
சிறுசேரி சிப்காட்டிலிலுள்ள அலுவலகக் கட்டிடங்கள்
சிறுசேரி
இருப்பிடம்: சிறுசேரி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°50′06″N 80°12′00″E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
வட்டம் செங்கல்பட்டு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் ப. பொன்னையா, இ. ஆ. ப. [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

ராஜீவ் காந்தி சாலையை அண்மித்து உருவாகியுள்ள சென்னையின் தகவல் தொழினுட்ப தாழ்வாரத்தின் கடைசி முனையாக சிறுசேரி அமைந்துள்ளது. இராசீவ் காந்தி சாலையை இதுவரை மட்டுமே ஆறுவழி தடச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

சிறுசேரி தகவல்தொழினுட்பப் பூங்கா

சிறுசேரியில் உள்ள பாடூர் பகுதியில் சிப்காட் ஐடி பார்க் அமைக்கப்பட்டுள்ளது. சிப்காட் சிறுசேரி சிற்றூரில் 1,000 ஏக்கர்கள் (4 km2) பரப்பு நிலப்பகுதியில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா ஒன்றினை அமைத்துள்ளது.இது ஆசியாவிலேயே மிகப் பெரிய தகவல் தொழினுட்ப பூங்காவாக விளங்குகிறது. இங்கு தங்கள் வளாகங்களை கட்டிக்கொள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நிலம் அளிக்கப்படுகிறது. இங்கு வணிகமயமாக்கலுக்குத் தேவையான அனைத்துக் கட்டுமான வசதிகளும் மாநில அரசின் முனைப்பால் கட்டமைக்கப்படுகின்றன: தனியான மின்வழங்கு துணைநிலையம், தனியான தொலைபேசி இணைப்பகம், உயர்வேக அகன்ற பட்டை தரவுத் தொடர்பு, பன்னாட்டுத்தர விரைவுச்சாலைகள், ஐந்து விண்மீன் தங்குவிடுதிகள் ஆகியன. பல நிறுவனங்கள் இங்கு நிலத்தை வாங்கியுள்ளபோதும் சில நிறுவனங்களே தற்போது தங்கள் வளாகங்களைக் கட்டிக் கொண்டுள்ளன.

கல்வி நிறுவனங்கள்

குடியிருப்புக்கள்

100 ஏக்கர்கள் (0.4 km2) பரப்பளவில் 6000 குடியிருப்பு அடுக்ககங்களைக் கொண்ட பன்னாட்டுத்தர குடியிருப்பு நகர்ப்புரத்தை கட்டமைக்க சிங்கப்பூர் ரியால்ட்டி நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் சில சட்டச் சிக்கல்களால் இது விடப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளில் இங்கு அடுக்ககங்கள் விரைவாக கட்டப்பட்டு வருகின்றன. சீனிவாசநகர் அவற்றில் ஒன்றாகும். செல்வமிக்க வெளிநாடுவாழ இந்தியர்கள் இந்தக் குடியிருப்பு வானளாவிகளில் முதலீடு செய்துள்ளனர். பத்மா சேசாத்திரி பள்ளி இங்கு ஒரு கிளையை துவக்கி உள்ளது. விரைவான வளர்ச்சியால் இங்கு நிலத்தின் விலை மிக உயர்ந்தநிலையை எட்டி உள்ளது.

போக்குவரத்து

சிறுசேரியின் முதன்மை பேருந்து நிலையம் ராஜீவ் காந்தி சாலையில் சிப்காட் தகவல்தொழினுட்ப பூங்காவினை ஒட்டி, பாடூருக்கும் எகாட்டூருக்கும் இடையே உள்ளது. இங்கு நிற்கும் பேருந்துகளாவன:

பள்ளிகள்

சுசில்ஹரி பன்னாட்டு தங்கிக்கற்கை பள்ளி கேளம்பாக்கம்- வண்டலூர் சாலையில் உள்ளது. இங்குள்ள ஒரே அரசுப் பள்ளி பேரூராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆகும். பஞ்சாப் சங்கத்தினரால் பத்மா ஆதர்ச உயர்நிலைப் பள்ளி வாணியஞ்சாவடியில் கட்டப்பட்டுள்ளது.

மேற்சான்றுகள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.

வெளி இணைப்புகள்



This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.