நந்தனம்
நந்தனம் (Nandanam) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள ஓர் சுற்றுப் பகுதியாகும். மக்கள் நெருக்கடி மிக்க இப்பகுதியில் பல வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. அதே நேரத்தில் அமைதியான குடியிருப்புப் பகுதியாகவும் விளங்குகிறது. இங்குள்ள நந்தனம் கலைக் கல்லூரி 1901ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தொன்மையான கல்வி நிறுவனமாகும். உடற்பயிற்சிக் கல்லூரியும் குழிப்பந்து விளையாட்டு வளாகமும் இப்பகுதியின் அடையாளங்களாக விளங்குகின்றன.
நந்தனம் | |
---|---|
![]() அடையாறு ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள நந்தனத்தின் வான்வழிக் காட்சி. தென்கரையில் கோட்டூர்புரம் உள்ளது. | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
பெருநகர்ப் பகுதி | சென்னை |
மண்டலம் | கோடம்பாக்கம் |
வார்டு | 116 |
வட்டம் | மாம்பலம்-கிண்டி |
Languages | |
• Official | தமிழ் |
நேர வலயம் | இ.சீ.நே (ஒசநே+5:30) |
மக்களவைத் தொகுதி | மத்திய சென்னை |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | ஆயிரம் விளக்கு |
வரலாறு
1836 முதல் 1850 வரையில் தலைமை நீதிபதி ஜான் கேம்பியர் என்பவருக்கு உரிமையான கேம்பியரின் தோட்டம் என்ற பகுதியே தற்போதைய நந்தவனமாக உருவெடுத்துள்ளது. 1950களில் இப்பகுதியில் வீட்டுவசதி வாரியத்தினால் குடியிருப்புப் பகுதிகள் மேம்படுத்தப்பட்டபோது அப்போதைய தமிழக முதலமைச்சர் சி. இராசகோபாலாச்சாரியரால் நந்தனம் என்றப் பெயர் வழங்கப்பட்டது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.