சென்னை பூங்கா தொடருந்து நிலையம்
பூங்கா தொடருந்து நிலையம் அல்லது சென்னை பூங்கா தொடருந்து நிலையம் (Chennai Park railway station, நிலையக் குறியீடு:MPK) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஓர் தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது சென்னையின் புறநகர்ப் பகுதியான பூங்கா நகர் அருகில் அமைந்துள்ளது. இது சென்னைக் கடற்கரை நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தின் வடக்கு பகுதியில் சென்னை மத்திய இரயில் நிலையமும் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையும் அமைந்துள்ளது.
சென்னை பூங்கா | |
---|---|
சென்னை புறநகர் இரயில் நிலையம் மற்றும் தென்னக இரயில்வே நிலையம் | |
![]() சென்னை பூங்கா தொடருந்து நிலையம் | |
இடம் | தேசிய நெடுஞ்சாலை 4, பெரியமேடு, சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
அமைவு | 13°4′49″N 80°16′22″E |
உரிமம் | இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே |
தடங்கள் |
|
நடைமேடை | 3 |
இருப்புப் பாதைகள் | 3 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | MPK |
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே |
வரலாறு | |
முந்தைய பெயர் | தென்னக இரயில்வே |
போக்குவரத்து | |
பயணிகள் () | 440,000/நாள் ஒன்றுக்கு (2012 ஆம் ஆண்டு நிலவரப்படி) |
அமைவிடம் | |
![]() ![]() சென்னை பூங்கா சென்னை வரைபடத்தில் உள்ள இடம் ![]() ![]() சென்னை பூங்கா தமிழக வரைபடத்தில் உள்ள இடம் ![]() ![]() சென்னை பூங்கா இந்திய வரைபடத்தில் உள்ள இடம் |
வரலாறு

இந்த நிலையம் சென்னை நகரின் முதல் புறநகர் வழித்தடமான சென்னைக் கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. 1928இல் தொடங்கி மார்ச் 1931இல் இருப்புப்பாதை பணிகள் நிறைவடைந்தவுடன், புறநகர் இரயில் சேவைகள் 11 மே 1931 அன்று சென்னைக் கடற்கரைக்கும் - தாம்பரத்திற்கும் இடையில் தொடங்கப்பட்டன. இது நவம்பர் 15, 1931இல் மின்மயமாக்கப்பட்டது.[1]
போக்குவரத்து
2012 நிலவரப்படி, இந்த நிலையம் ஒரு நாளைக்கு சுமார் 440,000 பயணிகளை கையாளுகிறது.