இருபுரோமின் மூவாக்சைடு
இருபுரோமின் மூவாக்சைடு (Dibromine trioxide) என்பது Br2O3.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். புரோமின் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் ஆரஞ்சு நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது[1]. Br-O-BrO2 என்ற புரோமின் – புரோமேட்டு கட்டமைப்புடன் காணப்படும் இருபுரோமின் மூவாக்சைடு -40 ° செல்சியசு வெப்பநிலைக்கு கீழ் நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. வளைந்த மூலக்கூற்று அமைப்பின் Br-O-Br பிணைப்பின் பிணைப்புக் கோணம் 111.2° மற்றும் Br-O-BrO2 பிணைப்பின் பிணைப்பு நீளம்1.85Å. என்ற அளவுகளிலும் உள்ளன[2].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டைபுரோமின் டிரையாக்சைடு | |
வேறு பெயர்கள்
புரோமின் மூவாக்சைடு | |
இனங்காட்டிகள் | |
53809-75-9 ![]() | |
பண்புகள் | |
Br2O5 | |
வாய்ப்பாட்டு எடை | 207.806 கி/மோல் |
தோற்றம் | ஆரஞ்சுநிற ஊசிகள் |
உருகுநிலை | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | புரோமின் ஈராக்சைடு புரோமின் முப்புளோரைடு புரோமின் பென்டாபுளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | ஆக்சிசன் இருபுளோரைடு இருகுளோரின் ஓராக்சைடு குளோரின் ஈராக்சைடு அயோடின் ஈராக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() | |
Infobox references | |
வினைகள்
தாழ் வெப்பநிலையில்[1][2] இருகுளோரோ மீத்தேனில் உள்ள புரோமினுடன் ஓசோன் சேர்த்து வினைபுரியச் செய்வதால் இருபுரோமின் மூவாக்சைடைத் தயாரிக்கலாம். காரக் கரைசல்களில் இது விகிதச்சமமாதலின்றி Br− மற்றும் BrO−3 ஆகப் பிரிகிறது.[2]
மேற்கோள்கள்
- Henderson, K. M. Mackay; R. A. Mackay; W. (2002). Introduction to modern inorganic chemistry (6th ). Cheltenham: Nelson Thornes. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780748764204.
- Wiberg, Egon (2001). Wiberg, Nils. ed. Inorganic chemistry (1st ). San Diego, Calif.: Academic Press. பக். 464. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780123526519.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.