நைட்ரசன் முப்புரோமைடு

நைட்ரசன் முப்புரோமைடு (Nitrogen tribromide) என்பது NBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தூய்மையான நிலையில் – 100 0 செல்சியசு வெப்பநிலையிலும் இது வெடிக்கும் இயல்புடையது ஆகும். 1975 ஆம் ஆண்டு வரையில் இச்சேர்மம் தனித்துப் பிரித்தெடுக்கப்படாமல் இருந்தது[1] . ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் எளிதில் ஆவியாகும் தன்மை கொண்ட திண்மநிலையில் உள்ள இச்சேர்மம் முதன்முதலில் பிசுமும்மெத்திசிலில்புரோமமைன் உடன் BrCl சேர்மத்தை -870 செல்சியசு வெப்பநிலையில் புரோமினேற்றம் செய்து நைட்ரசன் முப்புரோமைடு தயாரிக்கப்படுகிறது.

(Me3Si)2NBr + 2 BrCl → NBr3 + 2 Me
3
SiCl
நைட்ரசன் முப்புரோமைடு
நைதரசன் முப்புரோமைடு மூலக்கூறு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நைதரசன் ட்ரைபுரோமைடு
இனங்காட்டிகள்
15162-90-0
ChemSpider 20480821
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3082084
பண்புகள்
Br3N
வாய்ப்பாட்டு எடை 253.72 g·mol−1
தோற்றம் ஆழ்ந்த செந்திணமம்
உருகுநிலை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இருகுளோரோமீத்தேனில் உள்ள அமோனியாவுடன் இது -87 0 செல்சியசு வெப்பநிலையில் உடனடியாக வினைபுரிந்து NBrH2 என்ற சேர்மத்தைத் தருகிறது.

மேற்கோள்கள்

  1. N. N. Greenwood and A. Earnshaw, "Chemistry of the Elements", 2006 Butterworth-Heinemann
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.