பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்

பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (ஐயுபிஏசி அல்லது ஒலிப்பு: "ஐயூபேக்", IUPAC, ஒலிப்பு: /aɪjuːpæk/)(International Union of Pure and Applied Chemistry, IUPAC) என்பது வேதியியல் அறிவு வளர்ச்சிக்காகவும் வேதியியல் சீர்தரங்கள் நிறுவி வரையறுக்கவும் 1919 இல் நிறுவப்பட்ட அரசு சாராத ஓர் அமைப்பு. இந் நிறுவனம் இதற்கு முன் இருந்த அனைத்துலக பயன்பாட்டு வேதியியல் பேராயம் (International Congress of Applied Chemistry ) என்னும் நிறுவனத்தின் வழித்தோன்றலாக உருவானது. வேதிப்பொருள்களுக்கு பொருத்தமான பெயர்கள் சூட்டவும், பெயர்களைச் சீர்தரப் படுத்தவும் உரிமையும் அதிகாரமும் பெற்ற நிறுவனம். இந்நிறுவனத்தின் கலைச்சொல் பயன்பாட்டுக் கிளை (IUPAC nomenclature) இப்பணியைச் செய்கின்றது. ஐயுபிஏசி நிறுவனம் அனைத்துலக அறிவியல் குழுமத்தின்(International Council for Science, ICSU) ஓர் உறுப்பு நிறுவனம்.

ஐயுபிஏசி சின்னம் (IUPAC logo)

ஐயுபிஏசி-யின் வெளியீடுகள் இணையத்தின் வழி கிடைக்கின்றது. எடுத்துக்காட்டாக பச்சைப் புத்தகம் (கிரீன் புக், "Green Book") எனப்படும் இயற்பியல் வேதியியலின் அளவுகள், அலகுகள், குறியீடுகள் என்னும் வெளியீட்டை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தங்கப் புத்தகம் எனப்பொருள் படும் "கோல்டு புக்" என்னும் வேதியியல் கலைச்சொல்லியல் தொகுப்பு (Compendium of Chemical Terminology) வெளியீட்டில் உள்ள தகவல்களைத் இணையவழி தேடும் வசதி கொண்டது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.