ஈய மிருபுரோமைடு

ஈய மிருபுரோமைடு (Lead(II) bromide) என்பது PbBr2 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். குறிப்பாக ஈயப் பெட்ரோலியம் எரியும்போது ஈய (II) புரோமைடு உருவாகிறது.[3] வெண்மைநிறத் துகள்களாக இது காணப்படுகிறது.

ஈய மிருபுரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஈயம்(II)புரோமைடு
வேறு பெயர்கள்
ஈய மிருபுரோமைடு
இனங்காட்டிகள்
10031-22-8 Y
பப்கெம் 24831
பண்புகள்
PbBr2
வாய்ப்பாட்டு எடை 367.01 g/mol
தோற்றம் வெண்மைநிற துகள்
அடர்த்தி 6.66 g/cm3 [1]
உருகுநிலை
கொதிநிலை 916 °C (1,681 °F; 1,189 K)
0.455 g/100 mL (0 °C)
0.973 g/100 mL (20 °C)[2]
4.41 g/100 mL (100 °C)
கரைதிறன் ஆல்ககாலில் கரையாது;
அமோனியா, காரம், KBr, NaBrஇவற்றில் கரையும்.
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு
ஊறு விளைவிக்கும் (Xn)
சுற்றுச்சூழலுக்கு அபாயமானது (N)
R-சொற்றொடர்கள் R61, R20/22, R33, R62, R50/53
S-சொற்றொடர்கள் S53, S45, S60, S61
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஈயம்(II)புளோரைடு,
ஈயம்(II)குளோரைடு,
ஈயம்(II)அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் தாலியம்(I)புரோமைடு,
வெள்ளீயம்(II)புரோமைடு
பிசுமத் புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references

தயாரிப்பும் பண்புகளும்

ஈயக் கரைசல்களுடன் (உதாரணம்: ஈய (II) நைதரேட்டு) புரோமைடு உப்புகளை வினைப்படுத்துவதன் மூலம் இவ்விரு புரோமைடைத் தயாரிக்கலாம். இந்தச் செயல்முறை, தண்ணீரில் ஈய மிருபுரோமைடின் குறைந்த கரைதிறனை தன்னலப்படுத்துகிறது. சுழி பாகை செல்சியசு வெப்பநிலையில் 100 கிராம் தண்ணீரில் 0.455 கிராம் ஈய மிருபுரோமைடு மட்டும் கரைகிறது. சூடான கொதிக்கும் தண்ணீரில் இதைவிட பத்துமடங்கு அதிகமாகக் கரையும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.[4]

ஈயப் பெட்ரோலியத்தின் பரந்துபட்ட பயன்பாட்டின் காரணத்தினால், சுற்றுப்புற சூழலில் எங்கும் இருக்கக்கூடிய சேர்மமாக ஈயபுரோமைடு விளங்குகிறது. பெட்ரோலியத்தின் எரியும் பண்பை மேம்படுத்த முற்காலத்தில் நான்கீத்தைல் ஈயம் பயன்படுத்தப்பட்டது. ஈய ஆக்சைடுகள் தோன்றி இயந்திரம் மாசடைவதைத் தடுக்க பெட்ரோலியத்துடன் ஏதாவதொரு கரிம புரோமின் சேர்மம் சேர்க்கப்பட்டது. ஈய ஆக்சைடுகளை இச்செயல்பாடு எளிதில் ஆவியாகும் ஈய புரோமைடுகளாக மாற்றுகிறது. பின்னர், இவை இயந்திரத்தில் இருந்து சுற்றுச்சூழலுக்கு வெளியேறுகிறது.[3]

பாதுகாப்பு

ஈயம் கலந்துள்ள மற்ற சேர்மங்களைப் போல ஈய மிருபுரோமைடும், மனிதர்களுக்குப் புற்றுநோயை ஏற்படுத்தும் 2ஏ வகை வேதிப்பொருள் என்று பன்னாட்டு புற்றுநோய் ஆய்வு நிறுவனம் வகைப்படுத்துகிறது. ஈயப் பெட்ரோலியம் எரியும்போது ஈய மிருபுரோமைடு உண்டாகி சூழலில் வெளிவிடப்படுகிறது என்பதே அதிக மாறுபட்ட கருத்துகளுக்கு இடமளிப்பதாக உள்ளது.

மேற்கோள்கள்

  1. Lide, David R., தொகுப்பாசிரியர் (2006). CRC Handbook of Chemistry and Physics (87th ). Boca Raton, FL: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-0487-3.
  2. NIST-data review 1980
  3. Michael J. Dagani, Henry J. Barda, Theodore J. Benya, David C. Sanders "Bromine Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry" Wiley-VCH, Weinheim, 2000.எஆசு:10.1002/14356007.a04_405
  4. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.