பொலோனியம் இருபுரோமைடு

பொலோனியம் இருபுரோமைடு (Polonium dibromide) என்பது PoBr2 என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். அறை வெப்பநிலையில் இது கருஞ்சிவப்பும் பழுப்பும் கலந்த நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது.[1][2] 110 பாகை செல்சியசு வெப்பநிலையில் சற்றே 30μ அளவுக்குச் சிதைவடைந்து பதங்கமாகிறது. மேலும் 270 முதல் 280 பாகை செல்சியசு வெப்பநிலைகளில் நைதரசன் வளிமத்துடன் சேர்த்து உருக்கும்போது முழுவதுமாகச் சிதைவடைகிறது.

பொலோனியம் இருபுரோமைடு
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
பொலோனியம் இருபுரோமைடு
இனங்காட்டிகள்
66794-54-5
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
PoBr2
வாய்ப்பாட்டு எடை 369.791 கி மோல்−1
தோற்றம் கருஞ்சிவப்பும் பழுப்பும் கலந்த படிகத் திண்மம் [1][2]
உருகுநிலை
கரைதிறன் ஐதரோபுரோமிக்கமிலம், கீட்டோன் ஆகியவற்றில் கரையும். [2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு

  • பொலோனியம் நாற்புரோமைட்டை 200 பாகை செல்சியசில் வெற்றிடத்தில் வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தினால் பொலோனியம் இருபுரோமைடு பெறப்படும்.[2]
  • தாழ் வெப்பநிலைகளில் ஐதரசன் சல்பைட்டை உபயோகித்து பொலோனிய நாற்புரோமைட்டிலிருந்து ஆலசனை நீக்குவதாலும் பொலோனியம் இருபுரோமைட்டைத் தயாரிக்கவியலும். ஆனாலும் இம்முறையில் தயாரிக்கப்படும் பொலோனியம் இருபுரோமைடு தூய்மை குறைந்த நிலையிலுள்ளது. விளையும் பொருளை நன்றாகச் சூடுபடுத்தினாலும் மாசு நீக்க முடிவதில்லை.[1][2]

வினைகள்

பொலோனியம் இருகுளோரைட்டுக் கரைசல்கள் தயாரிக்கப்படுவது போலவே பொலோனியம் இருபுரோமைடு ஐதரோபுரோமிக்கமிலம், கீட்டோன்களில் கருஞ்சிவப்புக் கரைசல்களைத் தருகிறது. பின்னர் இவை விரைவாகப் பொலோனியமாக ஒட்சியேற்றமடைகின்றன. திண்மப் பொலோனியம் இருபுரோமைடு, அமோனியாவுடன் வினை புரிந்து விரைவாகப் பொலோனிய மாழையாக ஒடுக்கமடைகிறது.[2]

மேற்கோள்கள்

  1. Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 594, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-352651-5
  2. Bagnall, K. W. (1962). "The Chemistry of Polonium". Advances in Inorganic Chemistry and Radiochemistry. New York: Academic Press. பக். 197–230. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-023604-6. http://www.google.com/books?id=8qePsa3V8GQC. பார்த்த நாள்: June 14, 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.