இரும்பு(III) புரோமைடு

இரும்பு(III) புரோமைடு(Iron(III) bromide) FeBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செம்-பழுப்பு நிறத்தில் நெடியற்ற சேர்மமாகக் காணப்படும் இரும்பு(III) புரோமைடு, பெர்ரிக் புரோமைடு என்றும் அழைக்கப்படுகிறது. அரோமாட்டிக் சேர்மங்களின் ஆலசனேற்ற வினைகளில் இது இலூயிக் அமில வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், பெர்ரிக் புரோமைடு தண்ணீருடன் வினைபுரிந்து அமிலக் கரைசல்களைக் கொடுக்கிறது.

இரும்பு(III) புரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(III) புரோமைடு
வேறு பெயர்கள்
பெர்ரிக் புரோமைடு
இரும்பு முப்புரோமைடு
முப்புரோமோயிரும்பு
இனங்காட்டிகள்
10031-26-2 Y
ChemSpider 23830 N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 25554
UNII 9RDO128EH7 N
பண்புகள்
FeBr3
வாய்ப்பாட்டு எடை 295.56 கி மோல்−1
தோற்றம் பழுப்பு நிறத் திண்மம்
மணம் நெடியற்ரது
அடர்த்தி 4.50 கி செ.மீ−3
உருகுநிலை
கட்டமைப்பு
படிக அமைப்பு முக்கோணம், hR24
புறவெளித் தொகுதி R-3, No. 148
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் அரிக்கும்
R-சொற்றொடர்கள் R36/37/38
S-சொற்றொடர்கள் S26 S37/39
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

கட்டமைப்பும் பண்புகளும்

இரும்பு(III) புரோமைடு ஆறு ஒருங்கிணைவு எண்முக இரும்பு மையங்கள்[1] தோற்றம் கொண்ட பல்பகுதிய மூலக்கூற்று கட்டமைப்புடன் உருவாகிறது. எனினும் விலை மலிவாகவே வணிக சந்தையில் கிடைக்கிறது.

புரோமினை இரும்புடன் சேர்த்து சூடுபடுத்துவதால் இரும்பு(III) புரோமைடு தயாரிக்க முடியும்:

2 Fe + 3 Br2 → 2 FeBr3

200 பாகை செ வெப்பநிலைக்கு மேல் இரும்பு(III) புரோமைடு சிதைவடைந்து இரும்பு(II) புரோமைடு|இரும்பு(II) புரோமைடாக]] மாறுகிறது.

2FeBr3 2FeBr2 + Br2

குளோரினின் உயர் ஆக்சிசனேற்றும் பண்பை பிரதிபலிக்கின்ற வகையில் இரும்பு(III) குளோரைடு அதிக நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. ஆனால் இரும்பு(III) அயோடைடு அயனிகளை ஆக்சிசனேற்றம் செய்வதால் FeI3 நிலைப்புத்தன்மையற்று காணப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. ISBN 0-12-352651-5.

இவற்றையும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.