இருபுரோமின் ஓராக்சைடு

இருபுரோமின் ஓராக்சைடு (Dibromine monoxide) என்பது Br2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோமின் அயனியும் ஆக்சிசன் அயனியும் சேர்ந்து உருவாகும் இவ்வுப்பு அடர்பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. – 40 0 செல்சியசு வெப்பநிலையில் நிலைப்புத் தன்மையுடன் இருக்கும் இச்சேர்மம் புரோமினேற்ற வினைகளில் பயன்படுத்தப்படுகிறது[1]. தனிமவரிசை அட்டவணையில் ஒரு தொடர் மேலேயுள்ள ஆலசனின் இருகுளோரின் ஓராக்சைடுடன் ஒத்த பண்புகளை இச்சேர்மம் கொண்டுள்ளது. இருபுரோமின் ஓராக்சைடானது C2v மூலக்கூறு சீரொழுங்குடன் வளைந்த மூலக்கூறு அமைப்புடன் காணப்படுகிறது. மூலக்கூறில் உள்ள Br-O பிணைப்புகளின் ]]பிணைப்பு நீளம்]] 1.85Å ஆகவும் Br-O-Br பிணைப்புகளின் பிணைப்புக் கோணம் 112 0 ஆகவும் அமைந்திருக்கிறது.[2][3]

இருபுரோமின் ஓராக்சைடு
Dibromine monoxide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இருபுரோமின் ஓராக்சைடு
வேறு பெயர்கள்
இருபுரோமின் ஆக்சைடு, புரோமின் ஓராக்சைடு
இனங்காட்டிகள்
21308-80-5 Y
பண்புகள்
Br2O
வாய்ப்பாட்டு எடை 175.807 கி/மோல்
தோற்றம் அடர்பழுப்பு நிறத் திண்மம்
உருகுநிலை
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் புரோமின் ஈராக்சைடு
புரோமின் முப்புளோரைடு
புரோமின் ஐம்புளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் ஆக்சிசன் இருபுளோரைடு
இருகுளோரின் ஓராக்சைடு
குளோரின் ஈராக்சைடு
அயோடின் ஈராக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

வினைகள்

புரோமின் ஆவி அல்லது புரோமின் கரைசலை தாழ் வெப்பநிலையில் கார்பன் நாற்குளோரைடு மற்றும் பாதரச(II) ஆக்சைடுடன் சேர்த்துவினைபுரியச் செய்தால் இருபுரோமின் ஓராக்சைடு உருவாகிறது.:[1][3]

2 Br2 + HgOHgBr2·2H2O + Br2O

புரோமின் ஈராக்சைடை வெப்ப இயக்கவியல் சிதைவுக்கு உட்படுத்துவதாலும் அல்லது 1:5 என்ற விகிதத்தில் புரோமின் மற்றும் ஆக்சிசன் வாயுக்களின் கலவையில் மின்சாரத்தைச் செலுத்துவதாலும் இருகுளோரின் ஓராக்சைடைத் தயாரிக்கலாம்.[3]

மேற்கோள்கள்

  1. Levason, William; Ogden, J. Steven; Spicer, Mark D.; Young, Nigel A. (January 1990). "Characterization of dibromine monoxide (Br2O) by bromine K-edge EXAFS and IR spectroscopy". Journal of the American Chemical Society 112 (3): 1019–1022. doi:10.1021/ja00159a019.
  2. Wiberg, Egon (2001). Wiberg, Nils. ed. Inorganic chemistry (1st ). San Diego, Calif.: Academic Press. பக். 464. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780123526519.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.