நையோபியம்(V) புரோமைடு

நையோபியம்(V) புரோமைடு (Niobium(V) bromid) என்பது Nb2Br10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். NbBr5 என்ற அனுபவ வாய்ப்பாட்டிலிருந்து இச்சேர்மம் நையோபியம்(V) புரோமைடு என்ற பெயரைப் பெறுகிறது. டயா காந்தப் பண்பும் ஆரஞ்சு நிறமும் கொண்ட இத்திண்மம் எளிதில் நீராற்பகுக்கப்படுகிறது. இரண்டு NbBr5 அலகுகள் ஒரு சோடி புரோமைடு பாலங்களால் இணைக்கப்பட்டுள்ள விளிம்பு - பகிர்வு ஈரென்முக கட்டமைப்பை நையோபியம்(V) புரோமைடு ஏற்கிறது [1]. Nb மற்றும் Ta தனிமங்களின் பென்டாகுளோரைடுகளும், பென்டா அயோடைடுகளும் இதே மையக்கருத்து கட்டமைப்பை ஏற்கின்றன. நையோபியம் மையங்களுக்கு இடையில் பிணைப்பும் கிடையாது. உயர் வெப்பநிலையில் நையோபியம் உலோகத்துடன் புரோமினை ஒரு மின் உலையில் இட்டு வினைபுரியச் செய்து நையோபியம்(V) புரோமைடைத் தயாரிக்கிறார்கள்[2].

நையோபியம்(V) புரோமைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
நையோபியம் பென்டாபுரோமைடு, நையோபியம் ஐம்புரோமைடு
இனங்காட்டிகள்
13748-45-0 NbBr5 N
17633-68-0 Nb2Br10 N
ChemSpider 19388901 Y
EC number 236-778-5
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83517
பண்புகள்
NbBr5
வாய்ப்பாட்டு எடை 492.430 கி/மோல்
தோற்றம் சிவப்பும் கருப்பும் கலந்த நிறம் crystals
அடர்த்தி 4.417 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 364 °C (687 °F; 637 K)
நீராற்பகுப்பு அடைகிறது
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

புற இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. Hönle, Wolfgang; Furuseth, Sigrid; von Schnering, Hans Georg "Synthesis and crystal structure of ordered, orthorhombic α-NbBr5" Zeitschrift für Naturforschung, B: Chemical Sciences 1990, vol. 45, pp. 952-6. எஆசு:10.1515/znb-1990-0706
  2. Greenwood, N. N.; & Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd Edn.), Oxford:Butterworth-Heinemann. ISBN 0-7506-3365-4.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.