நையோபியம் ஈராக்சைடு

நையோபியம் ஈராக்சைடு ( Niobium dioxide) என்பது NbO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீலக்கருப்பில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மத்தில் NbO1.94-NbO2.09[1] என்ற அளவுகளில் விகிதவியல் அல்லாத ஓர் இயைபுச் சேர்க்கையில் தனிமங்கள் இணைந்துள்ளன. Nb2O5 உடன் ஐதரசன் வாயுவைச் சேர்த்து 800 முதல் 1350 °செ [1]வெப்பநிலையில் வினைபுரிந்து நையோபியம் ஈராக்சைடு உருவாகிறது. Nb2O5 உடன் நையோபியம் தூளைச் சேர்த்து 1100°செ வெப்பநிலையில் வினைபுரியச் செய்து தயாரிப்பது ஒரு மாற்று வழிமுறையாகும்.[2]

நையோபியம் ஈராக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நையோபியம்(IV) ஆக்சைடு, நையோபியம் ஈராக்சைடு
வேறு பெயர்கள்
நையோபியம்(IV) ஆக்சைடு, கொலம்பியம் ஈராக்சைடு
இனங்காட்டிகள்
12034-59-2 Y
EC number 234-809-7
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82839
பண்புகள்
NbO2
வாய்ப்பாட்டு எடை 124.91 கி/மோல்
தோற்றம் நீலக்கருப்பு
உருகுநிலை
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம், tI96
புறவெளித் தொகுதி I41/a, No. 88
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references

அறை வெப்பநிலை மற்றும் உயர் வெப்பநிலைகளில் , நையோபியம் ஈராக்சைடானது குறுகிய Nb-Nb இடைவெளியுள்ள Nb-Nb பிணைப்புகளாலான நாற்கோண, உரூத்தைல் அமைப்புடன் காணப்படுகிறது[3]. குறுகிய Nb-Nb இடைவெளியுள்ள Nb-Nb பிணைப்புகளாலான உரூத்தைல் அமைப்பில் ஒன்றும் சிர்க்கோனியம் ஆக்சைடு கனிமம் பேடெலியைட்டு தொடர்பான அமைப்பில் ஒன்றுமாக உயர் அழுத்த நிலைகளில் இரண்டு வேறுபட்ட அமைப்புகள் அறியப்படுகின்றன.[4]

NbO2 தண்ணீரில் கரையாது. வலிமையான ஆக்சிசன் ஒடுக்கியாகச் செயல்பட்டு கார்பன் டை ஆக்சைடை கார்பனாகவும் , கந்தக டை ஆக்சசைடை கந்தகமாகவும் குறைக்கிறது[1]. நையோபியம் உலோகத்தை தொழிற்சாலைகளில் தயாரிக்கும், செயல்முறையில் Nb2O5 சேர்மத்தை ஐதரசன் ஒடுக்கம் [5]செய்யும் போது நையோபியம் ஈராக்சைடு ஓர் இடைநிலை விளைபொருளாக உருவாகிறது. தொடர்ந்து NbO2 மக்னீசியம் ஆவியுடன் வினைபுரிந்து நையோபியம் உலோகம் உருவாகிறது[6].

மேற்கோள்கள்

  1. Pradyot Patnaik (2002), Handbook of Inorganic Chemicals,McGraw-Hill Professional, ISBN 0-07-049439-8
  2. Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford Science Publications ISBN 0-19-855370-6
  3. Bolzan, A; Fong, Celesta; Kennedy, Brendan J.; Howard, Christopher J. (1994). "A Powder Neutron Diffraction Study of Semiconducting and Metallic Niobium Dioxide". Journal of Solid State Chemistry 113: 9. doi:10.1006/jssc.1994.1334. Bibcode: 1994JSSCh.113....9B.
  4. Patent EP1524252, Sintered bodies based on niobium suboxide, Schnitter C, Wötting G
  5. Method for producing tantallum/niobium metal powders by the reduction of their oxides by gaseous magnesium, US patent 6171363 (2001), Shekhter L.N., Tripp T.B., Lanin L.L. (H. C. Starck, Inc.)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.