அமெரிசியம் டையாக்சைடு

அமெரிசியம் டையாக்சைடு (Americium dioxide) என்பது AmO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் [1]

அமெரிசியம் டையாக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அமெரிசியம்(IV) ஆக்சைடுAmericium(IV) oxide
இனங்காட்டிகள்
12005-67-3 Y
EC number 234-471-0
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 57461988
பண்புகள்
AmO2
வாய்ப்பாட்டு எடை 275.00 g·mol−1
தோற்றம் கருப்பு படிகங்கள்
அடர்த்தி 11.68 கி/செ.மீ3
கட்டமைப்பு
படிக அமைப்பு புளோரைட்டு (கனசதுரம்), cF12
புறவெளித் தொகுதி Fm3, No. 225
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

அமெரிசியத்தின் கருப்பு நிற சேர்மமான இது திண்மநிலையில் புளோரைட்டான கால்சியம் புளோரைடு சேர்மத்தின் கட்டமைப்பை ஏற்கிறது. ஆல்ஃபா துகள்களின் தயாரிப்பு மூலமாக அமெரிசியம் டையாக்சைடு பயன்படுத்தப்படுகிறது.

வரலாற்றுப் பயன்

ஓக் ரிட்ச் தேசிய ஆய்வகத்தால் விவரிக்கப்பட்டுள்ளபடி ஐதரோகுளோரிக் அமிலக் கரைசலில் அமெரிசியத்தின் கரைசலைச் சேர்த்து வீழ்படிவாக்குதல் மூலம் அமெரிசியம் டையாக்சைடைத் தயாரிக்கலாம் [2]. அமெரிசியம் டையாக்சைடுக்கானத் தேவை ஐதரோகுளோரிக் அமிலக் கரைசலில் அமெரிசியத் தனிமத்தை சேமித்து வைப்பதில் உள்ள சிரமத்திலிருந்து உருவாகிறது, ஏனெனில் ஆல்பா கதிர்வீச்சும் ஐதரோகுளோரிக் அமிலமும் காலப்போக்கில் சேர்மத்தின் சேமிப்புக் கொள்கலன்களை சிதைத்து விடுகின்றன. நீர்மநிலையில் சேமிப்பதில் உள்ள சிக்கலைத் தீர்க்க ஓக் ரிட்ச் தேசிய ஆய்வகம் திரவ அமெரிசியம்- அமிலக் கரைசலை வீழ்படிவு நிலை திண்மமாக மாற்றி சேமிக்கும் ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி பரிந்துரைத்தது. இதன் மூலம் அமெரிசியம் டையாக்சைடை பாதுகாப்பான முறையில் கையாளவும் , திறமையாக சேமிக்கவும் முடியும் [2].

தொகுப்பு முறை

ஓக் ரிட்ச் தேசிய ஆய்வகம் அமெரிசியம் டையாக்சைடு தொகுத்தல் முறையை இவ்வாறு விவரிக்கிறது. ஐதரோகுளோரிக் அமிலக் கரைசலில் அமெரிசியத்தைச் சேர்த்து அமெரிசியக் கரைசலைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அமோனியம் ஐதராக்சைடைப் பயன்படுத்தி நடுநிலையாக்கம் செய்தல் வேண்டும் [2]. இந்நடுநிலையாக்க வினைக்குப் பின்னர் உருவாகும் புதிய கரைசலுடன் நிறைவுற்ற ஆக்சாலிக் அமிலக் கரைசலைச் சேர்க்க வேண்டும். இதன் விளைவாக பெரிய அமெரிசியம் ஆக்சலேட்டு படிகங்கள் வளரத் தொடங்கும். முழுமையான வீழ்படிவாக்கம் நிறைவு பெற்றவுடன் மீண்டும் ஒரு முறை ஆக்சாலிக் அமிலத்தைச் சேர்த்து அவ்வீழ்படிவை குழம்பாக்கிக் கொள்ள வேண்டும். அமெரிசியம் ஆக்சலேட்டு மற்றும் ஆக்சாலிக் அமிலம் கலந்த குழம்பு அடுத்ததாக நன்கு கிளரப்பட்டு அமெரிசியன் ஆக்சலேட் வடிகட்டப்படுகிறது. இதை தண்ணீரில் நன்றாக கழுவி ஊடாக காற்று ஓட அனுமதிப்பதன் மூலம் ஓரளவு உலர்த்தப்படுகிறது. வடிகட்டப்பட்ட அமெரிசியம் ஆக்சலேட்டு தூசி நிறைந்த ரோசா நிறம் கொண்ட தோற்றத்தைக் கொண்டுள்ளது என்று ஓக் ரிட்ச் தேசிய ஆய்வக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அமெரிசியம் ஆக்சலேட்டு வீழ்படிவு பிளாட்டினத்துடன் சேர்க்கப்பட்டு காற்று அல்லது ஆக்சிசனில் உயர்வெப்பநிலைக்கு சூடுபடுத்தப்படுகிறது, பின்னர் ஓர் உலையில் வைத்து இவ்வீழ்படிவை உலர்த்தும்போது 350 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடையத் தொடங்குகிறது. இச்சிதைவு ஏற்படத் தொடங்கும் போது ஆக்சலேட்டு உப்பானது தேவையான கருப்பு நிற அமெரிசிய டை ஆக்சைடாக மாறுகிறது. புதிதாக உருவாகும் அமெரிசியம் டை ஆக்சைடில் ஆக்சலேட் இல்லை என்பதை உறுதிப்படுத்த, உலையின் வெப்பநிலையை 800 ° செல்சியசு அளவிற்கு அதிகரித்து மெதுவாக அறை வெப்பநிலைக்கு குளிர்விக்க அனுமதிக்கப்படுகிறது.

அமெரிசியம்-அலுமினியம் கலப்புலோகங்கள்

கூடுதலாக ஒரு பாய்மமாக்கும் முகவருடன் [3] அமெரிசியம் டையாக்சைடையும் அலுமினியத்தையும் சேர்த்து உருக்குவதன் மூலம் அமெரிசியம்-அலுமினியம் கலப்புலோகங்கள் உருவாக்க முடியும். இவ்வாறு உருவாக்கப்பட்ட கலப்புலோகங்களை யுரேனியம் கடந்த நியூக்ளைடுகளை உருவாக்க நியூட்ரான் கதிர்வீச்சுக்கு உட்படுத்தலாம்.யுரேனியத்தின் அணு எண்ணைக்காட்டிலும் அதிக அணு எண் கொண்ட தனிமங்கள் யுரேனியம் கடந்த தனிமங்கள் எனப்படும் [4]. இவை வேதியல் நச்சு விவரப் பட்டியலில் இடம்பிடிக்கின்றன. நியூக்ளைடுகள் என்பவை கதிர்வீச்சை வெளிப்படுத்தக்கூடிய தனிமங்கள் மற்றும் அவற்றின் ஓரிடத்தான்களைக் குறிக்கின்றன. இவை முழுமையாக மற்றொரு ஓரிடத்தானாகவோ தனிமநிலை ஓரிடத்தானாகவோ கதிரியக்கம் வழியாக மாற்றமடைகின்றன [5].

மேற்கோள்கள்

  1. Greenwood, N. N. & Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd ). Pergamon Press. பக். 1267. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-08-022057-6.
  2. "Preparation of Americium Dioxide by Thermal Decomposition of Americium Oxalate in Air". Oak Ridge National Laboratory (December 1960). பார்த்த நாள் 2 May 2013.
  3. "Preparation of Americium-Aluminium Alloys". KERNFORSCHUNG GMBH GES FUER (January 1974). மூல முகவரியிலிருந்து 2013-06-29 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் May 3, 2013.
  4. "Transuranic". Oxford Dictionary, 2013. பார்த்த நாள் May 5, 2013.
  5. "Toxicological profile for americium". U.S. Department of Health and Human Services (April 2004). பார்த்த நாள் 15 January 2011.

.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.