ஆல்ஃபா துகள்

ஆல்ஃபா துகள் அல்லது கதிர் (Alpha particle or ray), இயற்கை அல்லது செயற்கைக் கதிரியக்கத்தின் போது வெளிப்படுகின்றன. இந்நிகழ்வு பொதுவாக அணு நிறை கூடிய தனிமங்களில் நிகழ்கிறது. α துகள்கள் ஈலியத்தின் கருக்களாகும். எனவே இதில் இரு புரோத்தன்களும் இரு நியூத்திரன்களும் காணப்படும். சில செயற்கைக் கதிரியக்கத் தனிமங்கள் மிகக்குறைந்த அல்லது மிக அதிக அரை வாழ்வுடன் காணப்படுகின்றன. இச்செயற்கை கதிர் தனிமங்களின் அணுஎண் 60 க்கும் 85 க்கும் இடைப்பட்டதாகவும் உள்ளன. α துகளை வெளியிட்டபின் தாய்தனிமத்தின் அணு எண்ணில் 2 உம் அணுநிறையில் 4 உம் குறைந்து, புதிய சேய் தனிமம் கிடைக்கிறது. α உமிழ்ச்சியினைத் தொடர்ந்து காமாக் கதிர்கள் வெளிப்படுகின்றன.

ஆல்ஃபா துகள்
பொதிவு2 புரோத்தன்கள், 2 நியூத்திரன்கள்
புள்ளியியல்போசானியம்
குறியீடுα, α2+, He2+
திணிவு6.64465675(29)×10−27 kg[1]

4.001506179125(62) u

3.727379240(82) GeV/c2
மின்னூட்டம்2 e
சுழற்சி0[2]

ஒரு குறிப்பிட்ட ஐசோடோப்பிலிருந்து வெளிப்படும் எல்லா α துகள்களும் ஒரே ஆற்றலுடன் காணப்படுகின்றன. எனவே வளியிலோ, பிற ஊடகங்களிலோ அவைகளின் செல்தொலைவு (Range ) ஒன்றுபோல் இருக்கும். இச்செல்தொலைவு அவைகளின் ஆற்றலைப் பொறுத்திருக்கிறது.ஆல்ஃபா கதிர்கள் என்பன ஐட்ரஜனைப் போல் நான்கு மடங்கு நிறையும் ஐட்ரஜனைப் போல் இரு மடங்கு நேர்மின்னூட்டமும் கொண்ட துகள்களின் ஓட்டமாகும்.ஆல்ஃபா துகள்கள் எலக்ட்ரான்களை இழந்த ஈலியம் அணுக்களாகும்.

என்ற சமன்பாட்டால் கொடுக்கப்படுகிறது.

இங்கு b என்பது மாறிலியாகும். கதிர் தனிமத்தினைப் பொறுத்து அவைகளின் வேகம் 1.45 முதல் 2.2* 107 மீட்டர் வரையில் காணப்படுகிறது. சில ஒளிரும் பொருட்களில் மோதும்போது ஒளித்தெறிப்புகளை (Scintilations ) தோற்றுவிக்கின்றன.

அல்ஃபா கதிர் ஒரு தாளாலும்,
பீட்டா கதிர் அலுமினியத் தகட்டாலும் தடுத்து நிறுத்தப்படுகிறது.

ஊடகம் ஒன்றின் வழிசெல்லும் போது, அயனியாக்கம் நிகழ்கிறது. இக்கதிர்கள் மிகவும் குறைந்த ஊடுருவற்திறன் கொண்டன. ஒரு சாதாரண தாள் அதனைத் தடுத்து நிறுத்திவிடும் அவைகளில் காணப்படும் மின்னூட்டம் காரணமாக இப்படிப்பட்ட துகள்கள் காந்த மின் பலங்களில் விலக்கமுறுகின்றன.

மேற்கோள்கள்

  • B.A.R.C./D.R.P/TC 3.
  1. "CODATA Value: Alpha particle mass". NIST. பார்த்த நாள் 2011-09-15.
  2. Krane, Kenneth S. (1988). Introductory Nuclear Physics. யோன் வில்லி அன் சன்ஸ். பக். 246–269. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-471-80553-X.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.