கோபால்ட்(II,III) ஆக்சைடு

கோபால்ட்(II,III) ஆக்சைடு (Cobalt(II,III) oxide) என்பது Co3O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். நன்கு வரையறுக்கப்பட்ட இரண்டு கோபால்ட் ஆக்சைடுகளின் ஒரு வடிவமாக இது விளங்குகிறது. கருப்பு நிறத்துடன் எதிர் இரும்புக்காந்தப் பண்புடன் திண்மமாக கோபால்ட்(II,III) ஆக்சைடு காணப்படுகிறது. கலப்பு இணைதிறன் பெற்ற இச்சேர்மத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு சில சமயங்களில் CoIICoIII2O4 என்றும் சிலசமயங்களில் CoO•Co2O3 என்றும் எழுதப்படுகிறது.[2]

கோபால்ட்(II,III) ஆக்சைடு
Cobalt(II,III) oxide[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட்(II) டைகோபால்ட்(III) ஆக்சைடு
வேறு பெயர்கள்
கோபால்ட் ஆக்சைடு, கோபால்ட்(II,III) ஆக்சைடு, கோபால்டோசிக் ஆக்சைடு, முக்கோபால்ட் நான்காக்சைடு
இனங்காட்டிகள்
1308-06-1 Y
ChemSpider 9826389 Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11651651
வே.ந.வி.ப எண் GG2500000
பண்புகள்
Co3O4

CoO.Co2O3

வாய்ப்பாட்டு எடை 240.80 கி/மோல்
தோற்றம் கருப்பு நிறத் திண்மம்
அடர்த்தி 6.11 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 900 °C (1,650 °F; 1,170 K) (சிதைவடைகிறது)
கரையாது
கரைதிறன் அமிலங்கள் மற்றும் காரங்களில் கரைகிறது
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

அமைப்பு

ஆக்சைடு அயனிகளின் கனசதுர நெருக்கப் பொதிவு கட்டமைப்பின் , நான்முக இடைவெளிகளில் Co2+ அயனிகளும் , எண்முக இடைவெளிகளில் Co3+ அயனிகளும் கொண்டுள்ள சாதாரண சிபினல் கட்டமைப்பை Co3O4 ஏற்றுள்ளது.[2]

Co(II) இன் நான்முக ஒருங்கிணைப்பு வடிவியல் Co(III) இன் உருத்திரிந்த எண்முக
ஒருங்கிணைப்பு வடிவியல்
ஆக்சிசனின் உருத்திரிந்த
நான்முக ஒருங்கிணைப்பு வடிவியல்

தொகுப்பு முறைத் தயாரிப்பு

கோபால்ட்(II) ஆக்சைடு 600 முதல் 700 0 செல்சியசு[3] வெப்பநிலைக்குச் சூடுபடுத்தும் போது Co3O4 சேர்மமாக மாறுகிறது. 900 0 செல்சியசு வெப்பநிலைக்கு மேல் கோபால்ட்(II) ஆக்சைடு நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. இவ்வினையின் சமநிலை வினை இங்குத் தரப்பட்டுள்ளது.

2 Co3O4 6 CoO + O2

ஆய்வு

இச்சேர்மத்தைப் பயன்படுத்தி செயற்கை முறையில் ஒளிச்சேர்க்கை செயல்முறை நிகழ்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பாதுகாப்பு

கோபால்ட் சேர்மங்கள் அளவு அதிகாகும் போது நிலைத்த நச்சாகின்றன.[4]

மேற்கோள்கள்

  1. Sigma-Aldrich product page
  2. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பக். 1118. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419.
  3. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பக். 1118. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419.
  4. MSDS
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.