இணைதிறன்

இணைதிறன் அல்லது இயைனி அல்லது வலுவளவு (Valence) என்பது ஒற்றை இணைப்பு கொள்ளக்கூடிய எத்தனை அணுக்கள் ஓர் அணுவுடன் இணையக் கூடும் என்பதன் அளவு ஆகும். ஒற்றை இணைப்பு கொள்ளக்கூடிய அணுக்கள் என்பன முன்னர் ஐதரசன் அல்லது குளோரின் அணுக்களாகக் கருதப்பட்டன.

ஒவ்வொரு அணுவும் தனியாக இருப்பதைக் காட்டிலும் மற்றொரு அணுவுடன் இணைந்து மூலக்கூறாகவே காணப்படுகின்றது.

ஐயூபாக் வரையறை

ஒரு தனிமத்தின் இணைதிறன் என்பது அத்தனிமத்தின் ஒரு அணுவுடனோ அல்லது அத்தனிமத்தின் ஓர் அணு மாற்றீடாக இணையும் ஒரு பகுதியுடனோ இணையும் ஓரிணைதிறன் அணுக்களின் (முன்னதாக, இது ஐதரசன் அல்லது குளோரின் அணுக்களாகக் கருதப்பட்டன) பெரும எண்ணிக்கை ஆகும். [The maximum number of univalent atoms (originally hydrogen or chlorine atoms) that may combine with an atom of the element under consideration, or with a fragment, or for which an atom of this element can be substituted].[1]

எளிய விளக்கம்

ஒரு அணுவின் இணைதிறன் (இயைனி) என்பது அந்த அணு உள்ள மூலக்கூறுகளில் உள்ள மற்ற அணுக்களுடன் அது பகிர்ந்து கொள்ளக்கூடிய அல்லது ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய வேதிப்பிணைப்புகளின் எண்ணிக்கையே ஆகும். எடுத்துக்காட்டாக நீர் மற்றும் மீத்தேன் ஆகியவற்றை கொள்ளலாம்:

H-O-H (நீர்)

மேற்கண்ட நீர் மூலக்கூறில் ஐதரசனின் இணைதிறன் ஒன்று ஏனெனில் ஒவ்வொரு ஐதரசன் அணுவும் ஒரேயொரு பிணைப்புதான் கொண்டுள்ளது. ஆனால் ஆக்சிசனின் இணைதிறன் அல்லது இயைனி இரண்டு ஆகும் ஏனெனில் ஆகிசன் அணு இரண்டு பிணைப்புகள் கொண்டுள்ளன. படத்தில் உள்ள மீத்தேன் மூலக்கூற்றில் கரிம அணு நான்கு ஐதரச அணுக்களுடன் பிணைப்பு கொண்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு ஐதர அணுவும் ஒரேயொரு பிணைப்புதான் கொண்டுள்ளது. எனவே கரிம அணுவின் இணைதிறன் அல்லது இயைனி நான்கு ஆகும், ஆனால் ஐதரசனின் இணைதிறன் ஒன்று.

நோக்குதவி

  1. IUPAC Goldbook
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.