வனேடியம் ஈராக்சைடு

வனேடியம் ஈராக்சைடு (Vanadium(II) oxide ) என்பது VO என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கனிம சேர்மமாகும். வனேடியத்தின் பல ஆக்சைடுகளில் நீண்ட நிலைப்புத்தன்மை கொண்டு நடுநிலை மின்சுமை கொண்ட ஆக்சைடு இதுவாகும். சோடியம் குளோரைடின் உருத்திரிந்த மூலக்கூறு கட்டமைப்பு வடிவத்தையும் வலுவற்ற V-V உலோகம் – உலோகம் பிணைப்பையும் வனேடியம் ஈராக்சைடு ஏற்றுள்ளது. ஆற்றல் மட்டக் கொள்கை யின்படி கடத்தல் பட்டை பகுதியாக நிரம்பியுள்ள காரணத்தாலும் t2g சுற்றுப் பாதையில் எலக்ட்ரான்களின் உள்ளடங்காத் தன்மையாலும் வனேடியம் ஈராக்சைடு மின்சாரத்தைக் கடத்துகிறது. வனேடியம் ஈராக்சைடு விகிதச் சமமில்லாத ஒரு சேர்மமாகும். இதன் கனிம உட்கூறுகளின் அளவு VO0.8 முதல் VO1.3 வரை மாறுபடுகிறது[1].

வனேடியம் ஈராக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
வனேடியம்(II)ஆக்சைடு
வேறு பெயர்கள்
வனேடியம் ஆக்சைடு
இனங்காட்டிகள்
12035-98-2 N
பப்கெம் 24411
பண்புகள்
VO
வாய்ப்பாட்டு எடை 66.9409 g/mol
தோற்றம் grey solid with metallic lustre
அடர்த்தி 5.758 g/cm3
உருகுநிலை
கொதிநிலை 2,627 °C (4,761 °F; 2,900 K)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.5763
கட்டமைப்பு
படிக அமைப்பு Halite (cubic), cF8
புறவெளித் தொகுதி Fm3m, No. 225
ஒருங்கிணைவு
வடிவியல்
Octahedral (V2+)
Octahedral (O2)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை புகையாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் வனேடியம் ஒற்றை சல்பைடு
வனேடியம் ஒற்றை செலினைடு
வனேடியம் ஒற்றை டெலூரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் நியோபியம்(II)ஆக்சைடு
டாண்டலம்(II) ஆக்சைடு
வனெடியம் ஆக்சைடுகள்
தொடர்புடையவை
வனெடியம்(III) ஆக்சைடு
வனெடியம்(IV)ஆக்சைடு
வனேடியம்(V) ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references

மேற்கோள்கள்

  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பக். 982. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.