டெக்னீசியம்(VII) ஆக்சைடு

டெக்னீசியம்(VII) ஆக்சைடு (Technetium(VII) oxide) என்பது Tc2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். மஞ்சள் நிறத்துடன் எளிதில் ஆவியாகக் கூடிய இச்சேர்மத்தை இரும உலோக ஆக்சைடிற்கு ஒர் அரிய உதாரணமாகக் குறிப்பிடலாம். ருத்தேனியம் நான்காக்சைடு (RuO4), ஆசுமியம் நான்காக்சைடு (OsO4), மற்றும் நிலைப்புத் தன்மையற்ற மாங்கனீசு(VII) ஆக்சைடு (Mn2O7) ஆகியனவை பிற உதாரணங்களாகும். மத்திய சமச்சீர் மூலை – பங்கிட்ட இரு – நான்முக வடிவ கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இவ்வடிவில் விளிம்பாகவும் பாலமாகவும் உள்ள Tc-O பிணைப்புகள் முறையே 167 பை.மீ மற்றும் 184 பை.மீ அளவுகளில் உள்ளன. Tc-O-Tc பிணைப்புகளின் பிணைப்புக் கோணம் 180 0 ஆகும்[1].

டெக்னீசியம்(VII) ஆக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டெக்னீசியம்(VII) ஆக்சைடு
வேறு பெயர்கள்
டெக்னீசியம் ஏழாக்சைடு
இனங்காட்டிகள்
12165-21-8 N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 22227441
பண்புகள்
Tc2O7
வாய்ப்பாட்டு எடை 307.810 கி/மோல்
தோற்றம் வெளிர் மஞ்சள் திண்மம்
அடர்த்தி 3.5 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 310.6 °C (591.1 °F; 583.8 K)
HTcO4 ஆக நீராற்பகுப்பு அடைகிறது.
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய் சதுரம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் கதிரியியக்கத் தன்மை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

டெக்னீசியத்தை 450 முதல் 500 0 செ வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் டெக்னீசியம் ஆக்சிசனேற்றம் அடைந்து டெக்னீசியம்(VII) ஆக்சைடு உருவாகிறது[2].

2 Tc + 3.5 O2 → Tc2O7

பெர்டெக்னிக் அமிலத்தின் நீரிலி வடிவமான இது சோடியம் பெர்டெக்னேட்டு தயாரிப்பதற்கான முன்னோடி சேர்மமாகவும் இருக்கிறது.

Tc2O7 + 2 NaOH → 2 NaTcO4 + H2O

மேற்கோள்கள்

  1. Krebs, B. (1969). "Technetium(VII)-oxid: Ein Übergangsmetalloxid mit Molekülstruktur im festen Zustand". Angewandte Chemie 81 (9): 328–329. doi:10.1002/ange.19690810905.
  2. Herrell, A. Y.; Busey, R. H.; Gayer, K. H. (1977). Technetium(VII) Oxide, in Inorganic Syntheses. XVII. பக். 155–158. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-07-044327-0.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.