செருமேனியம் ஓராக்சைடு

செருமேனியம் ஓராக்சைடு (Germanium monoxide) என்பது , GeO மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செருமேனியம் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தின் தனிச்சிறப்புகள் நன்கு விவரிக்கப்படவில்லை[1]. செருமேனியம் ஈராக்சைடுடன் செருமேனியம் உலோகத்தை 1000 0 செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினால் மஞ்சள் நிறப் பதங்கமாக செருமேனியம் ஓராக்சைடு உருவாகிறது. மஞ்சள் பதங்கத்தை 650 0 செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினால் பழுப்பு நிறம் கொண்ட செருமேனியம் ஓராக்சைடாக மாறுகிறது[1]. ஈரியல்பு ஆக்சைடான இது அமிலங்களில் கரைந்து செருமேனியம்(II) உப்புகளையும் காரங்களில் கரைந்து Ge(OH)3− அயனிகள் கொண்ட மூவைதராக்சோசெருமேனேட்டுகள் அல்லது செருமேனைட்டுகள் உருவாகின்றன.[2]

செருமேனியம் ஓராக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
செருமேனியம்(II) ஆக்சைடு
வேறு பெயர்கள்
செருமேனசு ஆக்சைடு
செருமேனசு அமிலம்
இனங்காட்டிகள்
20619-16-3 Y
பப்கெம் 6327639
பண்புகள்
GeO
வாய்ப்பாட்டு எடை 88.6394 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

வேதிப்பண்புகள்

செருமேனியம் ஆக்சைடு Ge மற்றும் GeO2 ஆகச் சிதைவடைகிறது.[3]

மேற்கோள்கள்

  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419.
  2. Egon Wiberg, Arnold Frederick Holleman (2001) Inorganic Chemistry, Elsevier ISBN 0-12-352651-5
  3. Shriver and Atkins. Inorganic Chemistry (5th Edition). W. H. Freeman and Company, New York, 2010, pp 365.

இவற்றையும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.