பொலோனியம் நாற்குளோரைடு
பொலோனியம் நாற்குளோரைடு (Polonium tetrachloride) என்பது PoCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு [[கனிம வேதியியல் சேர்மமாகும். அறை வெப்பநிலையில் இச்சேர்மம் அடர் மஞ்சள் நிறப் படிகத் திண்மமாகக் காணப்படுகிறது. நீர் உறிஞ்சும் திறன் கொண்ட இச்சேர்மம், செலினியம் நாற்குளோரைடு மற்றும் தெலூரியம் நாற்குளோரைடு போல 200° செ வெப்பநிலைக்கு மேல் பொலோனியம் இருகுளோரைடு மற்றும் அதிகளவு குளோரின் எனச் சிதைவடைகிறது[1].
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
பொலோனியம் நாற்குளோரைடு | |
இனங்காட்டிகள் | |
10026-02-5 | |
ChemSpider | 4896024? |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
SMILES
| |
பண்புகள் | |
PoCl4 | |
வாய்ப்பாட்டு எடை | 350.79 கி/மோல் |
தோற்றம் | அடர் மஞ்சள்நிறப் படிகத் திண்மம் [1] |
உருகுநிலை | |
கொதிநிலை | 390 °C (734 °F; 663 K) |
கரையும், ஆனால் மிகமெதுவாக நீராற்பகுப்பு அடையும் | |
கரைதிறன் | ஐதரோகுளோரிக் அமிலத்தில் மற்றும் தையோனைல் குளோரைடில் நன்றாகக் கரையும், எத்தனால் மற்றும் அசெட்டோன் ஆகியவறில் மிதமாகக் கரையும்,நைட்ரிக் அமிலத்தில் சிதைவடையும். |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Infobox references | |
அமைப்பு
பொலோனியம் நாற்குளோரைடானது ஒற்றைச்சரிவு அல்லது முச்சரிவு படிக அமைப்பில் காணப்படுகிறது.
தோற்றம்
அறை வெப்பநிலையில் பொலோனியம் நாற்குளோரைடு அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. இதனுடைய உருகுநிலையான 300° செல்சியசு வெப்பநிலையில் வைக்கோல் நிற மஞ்சளாகவும் கொதிநிலையான390° செல்சியசு வெப்பநிலையில் நல்ல சிவப்பு நிறமாகவும் மாறுகிறது. இச்சேர்மத்தின் ஆவியானது 500° செல்சியசு வெப்பநிலை வரை பழுப்பு நிறமாகவும் அதற்கு மேல் நீலம் மற்றும் பச்சை நிறத்திற்கும் மாறுகிறது.[1]
தயாரிப்பு
பொலோனியம் நாற்குளோரைடு பினவருமாறு தயாரிக்கப்படுகிறது.
- பொலோனியம் ஈராக்சைடுடன் உலர் ஐதரசன் குளோரைடு, வாயுநிலை தையோனைல் குளோரைடு அல்லது பாசுபரசு ஐங்குளோரைடு சேர்த்து வினைபடுவதால் ஆலசனேற்றம் வினை மூலமாக உண்டாகிறது.
- பொலோனியம் உலோகத்தை ஐதரோ குளோரிக் அமிலத்தில் கரைப்பதால் உருவாகிறது.
- பொலோனியம் உலோகத்தை] கார்பன் நாற்குளோரைடு ஆவியில் உள்ள பொலோனியம் ஈராக்சைடை சூடுபடுத்துவதால் உருவாகிறது.
- பொலோனியம் உலோகத்தை உலர் குளோரின் ஆவியுடன் 200° செல்சியசு [[வெப்பநிலைக்குச் சூடாக்குவதால் உருவாகிறது.
பொலோனியம் வேதியியல்
இரு மோல்கள் முப்பியூட்டைல் பாசுபேட்டுடன் பொலோனியம் நாற்குளோரைடு சேர்ந்தால் அணைவுச் சேர்மம் உருவாகிறது.
செலினியம் நாற்குளோரைடு மற்றும் தெலூரியம் நாற்குளோரைடு போலவே பொலோனியம் நாற்குளோரைடும் PoCl−
5 and PoCl2−
6 ஆலசன் அணைவுச் சேர்மங்களாக உருவ்வகின்றது.[1]
மேற்கோள்கள்
- Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 594, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-352651-5
குளோரைடுகள் | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
HCl | He | ||||||||||||||||||
LiCl | BeCl2 | BCl3 B2Cl4 |
CCl4 | NCl3 ClN3 |
Cl2O ClO2 Cl2O7 |
ClF ClF3 ClF5 |
Ne | ||||||||||||
NaCl | MgCl2 | AlCl AlCl3 |
SiCl4 | P2Cl4 PCl3 PCl5 |
S2Cl2 SCl2 SCl4 |
Cl2 | Ar | ||||||||||||
KCl | CaCl CaCl2 |
ScCl3 | TiCl2 TiCl3 TiCl4 |
VCl2 VCl3 VCl4 VCl5 |
CrCl2 CrCl3 CrCl4 |
MnCl2 | FeCl2 FeCl3 |
CoCl2 CoCl3 |
NiCl2 | CuCl CuCl2 |
ZnCl2 | GaCl2 GaCl3 |
GeCl2 GeCl4 |
AsCl3 AsCl5 |
Se2Cl2 SeCl4 |
BrCl | KrCl | ||
RbCl | SrCl2 | YCl3 | ZrCl3 ZrCl4 |
NbCl4 NbCl5 |
MoCl2 MoCl3 MoCl4 MoCl5 MoCl6 |
TcCl4 | RuCl3 | RhCl3 | PdCl2 | AgCl | CdCl2 | InCl InCl2 InCl3 |
SnCl2 SnCl4 |
SbCl3 SbCl5 |
Te3Cl2 TeCl4 |
ICl ICl3 |
XeCl XeCl2 | ||
CsCl | BaCl2 | HfCl4 | TaCl5 | WCl2 WCl3 WCl4 WCl5 WCl6 |
Re3Cl9 ReCl4 ReCl5 ReCl6 |
OsCl4 | IrCl2 IrCl3 IrCl4 |
PtCl2 PtCl4 |
AuCl AuCl3 |
Hg2Cl2, HgCl2 |
TlCl | PbCl2, PbCl4 |
BiCl3 | PoCl2, PoCl4 |
AtCl | RnCl2 | |||
FrCl | RaCl2 | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Nh | Fl | Mc | Lv | Ts | Og | |||
↓ | |||||||||||||||||||
LaCl3 | CeCl3 | PrCl3 | NdCl2, NdCl3 |
PmCl3 | SmCl2, SmCl3 |
EuCl2, EuCl3 |
GdCl3 | TbCl3 | DyCl2, DyCl3 |
HoCl3 | ErCl3 | TmCl2 TmCl3 |
YbCl2 YbCl3 |
LuCl3 | |||||
AcCl3 | ThCl4 | PaCl5 | UCl3 UCl4 UCl5 UCl6 |
NpCl4 | PuCl3 | AmCl2 AmCl3 |
CmCl3 | BkCl3 | CfCl3 | EsCl3 | Fm | Md | No | LrCl3 |