இரிடியம் டெட்ராகுளோரைடு

இரிடியம் டெட்ராகுளோரைடு (Iridium tetrachloride) என்பது (Cl4Ir) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரும்பாலும் இச்சேர்மம் IrCl4(H2O)n என்ற பொது வாய்ப்பாட்டில் குறிக்கப்படுகிறது. படிகவடிவமற்ற திண்மமாக அடர் பழுப்பு நிறத்துடன் நீரில் கரையக்கூடியதாக இச்சேர்மம் காணப்படுகிறது. அமோனியம் எக்சாகுளோரோ இரிடேட்டு ((NH4)2IrCl6) என்ற சேர்மம் இரிடியம் டெட்ராகுளோரைடின் நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு வழிப்பொருளாகக் கருதப்படுகிறது[1]. வளையயெக்சனோன்களின் இடமாற்ற ஐதரசனேற்றத்திற்கு உதவும் என்பெசுட்டு வினையூக்கி போன்ற வினையூக்கிகள் தயாரிக்க இச்சேர்மத்தைப் பயன்படுத்துகிறார்கள்[2].

இரிடியம் டெட்ராகுளோரைடு
இனங்காட்டிகள்
10025-97-5
ChemSpider 11252181
EC number 233-048-8
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24815
UNII PCG7KVC21I
பண்புகள்
Cl4Ir
வாய்ப்பாட்டு எடை 334.02 g·mol−1
தோற்றம் படிகவடிவமற்ற பழுப்பு நிறத் திண்மம்
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள்

  1. Thomas R. B. Mitchell (2001). "Iridium(IV) Chloride". e-EROS Encyclopedia of Reagents for Organic Synthesis. doi:10.1002/047084289X.ri050.
  2. E. L. Eliel, T. W. Doyle, R. O. Hutchins, E. C. Gilbert (1970). "cis-4-tert-Butylecyclohexanol". Org. Synth. 50: 13. doi:10.15227/orgsyn.050.0013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.