ஓல்மியம்(III) குளோரைடு

ஓல்மியம்(III) குளோரைடு (Holmium(III) chloride) என்பது HoCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்டு ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது பொதுவான உப்பாக இருந்தாலும் பிரதானமாக ஆய்வுச் செயல்முறைகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஓல்மியம் ஆக்சைடு போலவே ஓல்மியம்(III) குளோரைடும் நிறம் மாறும் பண்பை வெளிப்படுத்துகிறது. சாதாரண ஒளியில் மஞ்சளாகவும் ஒளிரும் ஒளியில் பிரகாசமான இளஞ்சிவப்பு நிறத்திலும் காணப்படுகிறது.

ஓல்மியம்(III) குளோரைடு
Holmium(III) chloride
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஓல்மியம் முக்குளோரைடு
ஓல்மியம் குளோரைடு
இனங்காட்டிகள்
10138-62-2 Y
14914-84-2 (hexahydrate) N
பப்கெம் 24992
பண்புகள்
HoCl3
வாய்ப்பாட்டு எடை 271.289 கி/மோல்
தோற்றம் மஞ்சள் நிறப்படிகங்கள்
நீருறிஞ்சும்
அடர்த்தி 3.7 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 1,500 °C (2,730 °F; 1,770 K) (சிதைவடையும்)
கரைகிறது
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவு, mS16
புறவெளித் தொகுதி C12/m1, No. 12
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஓல்மியம்(III) ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் டிசிபுரோசியம்(III) குளோரைடு, எர்பியம்(III) குளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

தயாரிப்பு

ஓல்மியம் மற்றும் குளோரின் தனிமங்கள் இணைவதால் ஓல்மியம்(III) குளோரைடு உருவாகிறது என்றாலும் ஓல்மியம் ஆக்சைடு மற்றும் அமோனியம் குளோரைடு கலந்த கலவையை 200 முதல் 250 0 செ வெப்பநிலைக்கு சூடுபடுத்தி ஓல்மியம்(III) குளோரைடு தயாரிக்கும் முறையே பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.:[1]

Ho2O3 + 6 NH4Cl → 2 HoCl3 + 6 NH3 + 2 H2O

அமைப்பு

ஓல்மியம்(III) குளோரைட திடநிலையில் YCl3 அடுக்கு படிகவமைப்பில் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

  1. Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY.
  2. Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford. ISBN 0-19-855370-6
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.