யுரேனியம்(III) குளோரைடு
யுரேனியம்(III) குளோரைடு (Uranium(III) chloride) என்பது UCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். யுரேனியம் மற்றும் குளோரின் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. பயன்படுத்தப்பட்ட அணுக்கரு எரிபொருளை மறுசுழற்சி மூலமாக மீண்டும் உபயோகப்படுத்த தயாரிக்கும் செயல்முறையில் யுரேனியம்(III) குளோரைடு பெரும்பாலும் பயன்படுகிறது. யுரேனியம்(IV) குளோரைடில் இருந்து பல்வேறு முறைகளில் யுரேனியம்(III) குளோரைடைத் தயாரிக்க முடியும். எனினும் யுரேனியம்(IV) குளோரைடைவிட, யுரேனியம்(III) குளோரைடு நிலைப்புத்தன்மை குறைந்தது ஆகும்.
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
யுரேனியம்(III) குளோரைடு | |
வேறு பெயர்கள்
யுரேனியம் குளோரைடு யுரேனியம் முக்குளோரைடு ஐப்போரானசு குளோரைடு | |
இனங்காட்டிகள் | |
10025-93-1 | |
ChemSpider | 146484 ![]() |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 167444 |
SMILES
| |
பண்புகள் | |
Cl3U | |
வாய்ப்பாட்டு எடை | 344.38 g·mol−1 |
தோற்றம் | பச்சைநிற படிகத் திண்மம் |
அடர்த்தி | 5.500 கி/செ.மீ3, நீர்மம் |
உருகுநிலை | |
கொதிநிலை | 1,657 °C (3,015 °F; 1,930 K) |
கரையும் | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது |
Autoignition temperature |
எளிதில் தீப்பற்றாது |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
தயாரிப்பு
யுரேனியம் (III) குளோரைடைத் தொகுப்பு முறையில் தயாரிக்க இரண்டு வழிகள் உள்ளன. பின்வரும் செயல்முறைகள் யுரேனியம் (III) குளோரைடு உற்பத்தி செய்வது குறித்து விவரிக்கின்றன.
1.யுரேனியம் நாற்குளோரைடுடன் தனிம யுரேனியத்தைச் NaCl-KCl கலவையுடன் சேர்த்து, 670–710 ° செ வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் யுரேனியம்(III) குளோரைடு உருவாகிறது.
- 3UCl4 + U → 4UCl3[1]
(2) யுரேனியம் நாற்குளோரைடை ஐதரசன் வாயுவுடன் சேர்த்து சூடாக்கியும் யுரேனியம்(III) குளோரைடு தயாரிக்கலாம்.
- 2UCl4 + H2 → 2UCl3 + 2HCl[2]
பண்புகள்
திடநிலை யுரேனியம் (III) குளோரைடு, ஒவ்வொரு யுரேனியம் அணுவும், ஒரு மூவுச்சி முக்கோணப் பட்டகக் கட்டமைப்பில் உள்ளது போல தோராயமாக அதே தூரத்தில் ஒன்பது குளோரின் அணுக்களை அருகாமை அண்டை அனுக்களாகப் பெற்றுள்ளன.
அறை வெப்பநிலையில் யுரேனியம்(III) குளோரைடு பச்சைநிற படிகத் திண்மமாகக் காணப்படுகிறது. 837° செல்சியசு வெப்பநிலையை உருகுநிலையாகவும் 1657° செல்சியசு வெப்பநிலையை கொதி நிலையாகவும் பெற்றுள்ள யுரேனியம்(III) குளோரைடு 5500 கி.கி/மீ3 அல்லது 5500 கி/செ.மீ3 அடர்த்தியுடனும் காணப்படுகிறது.[3]
எடை அடிப்படையில் யுரேனியம்(III) குளோரைடின் பகுதிப்பொருட்களின் எடை சதவீதம்:
குளோரின்: 30.84%
யுரேனியம்: 69.16%
இச்சேர்மத்தின் முறையான ஆக்சிசனேற்ற நிலைகள்:
குளோரின் : −1
யுரேனியம்: +3
அதிகமான நீருறிஞ்சும் திறன் கொண்ட யுரேனியம்(III) குளோரைடு நன்றாக தண்ணீரில் கரைகிறது. மற்றும் ஐதரோகுளோரிக் அமிலத்தில் நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது.[4]
பயன்கள்
வினைச் செயலிகள்
நான்கைதரோ பியுரான் மற்றும் சோடியம் மெத்தில்சைக்ளோ பெண்டாடையீன் ஆகியனவற்றுடன் சேர்த்து யுரேனியம் மெட்டலோசீன் அணைவுச் சேற்மங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.[5]
வினையூக்கிகள்
இலித்தியம் அலுமினியம் ஐதரைடு மற்றும் ஒலிஃபீன்கள் இடையிலான வினையின் போது யுரேனியம்(III) குளோரைடு வினையூக்கியாகப் பயன்பட்டு ஆல்க்கைல் அலுமினேட்டுச் சேர்மங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.[6]
உருகிய வடிவம்
வெப்ப வேதியிய செயல்முறைகளில் யுரேனியம் (III) குளோரைடு, அணுசக்தி எரிபொருள்களின் மறுசீராக்கல் செயல்முறைக்கு முக்கியமா வேதிப்பொருளாக உதவுகிறது.[7] மின்தூய்மையாக்கல் செயல்முறைகளில் UCl3 வடிவத்தில் உள்ள யுரேனியம், எரிக்கப்பட்ட அணுக்கரு எரிபொருளை மறுசுழற்சிக்கு தயாரிக்கும் வடிவமாகக் கருதப்படுகிறது.[7][8]
பாதுகாப்பு
UCl3 இன் நீண்ட கால நச்சு விளைவுகள் குறித்த தரவுகள் இல்லையென்றாலும் அதிகமான அளவு பயன்படுத்துவதை இயன்ற அளவுக்கு தவிர்க்க வேண்டும்.
மற்ற கரையும் யுரேனியம் சேர்மங்களைப் போலவே UCl3 சேர்மமும் இரத்தத்தால் ஈர்க்கப்பட்டு சிறுநீரகம் நச்சடைவதற்கு வழிகோலுகிறது.[10]
மேற்கோள்கள்
- Serrano, K.; Taxil, P.; Dugne, O.; Bouvet, S.; Puech, E. J. Nucl. Mater. 2000, 282, 137–145.
- Remsen, Ira. Inorganic Chemistry. New York: Henry Holt and Company, 1890.
- Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford Science Publications ISBN 0-19-855370-6
- Comey, Arthur M.; Hahn, Dorothy A. A Dictionary of Chemical Solubilities: Inorganic. New York: The MacMillan Company, 1921.
- Brenna, J.G.; Anderson, R.A.; Zalkin, A. Inorg. Chem. 1986, 25, 1756–1760.
- Le Marechal, J.F.; Ephritikhine, M.; Folcher, G. J. Organomet. Chem. 1986, 309, C1–C3.
- Okamoto, Y.; Madden, P.; Minato, K. J. Nucl. Mater. 2005, 344, 109–114.
- Okamoto, Y.; Kobayashi, F.; Ogawa, T. J. Alloys Compd. 1998, 271, 355–358.
- Mech, A.; Karbowick, M.; Lis, T. Polyhedron. 2006, 25, 2083–2092.
- Bertell, Rosalie. "Gulf War Veterans and Depleted Uranium." May 1999. Available: http://ccnr.org/du_hague.html
புற இணைப்புகள்
- Uranium(III) chloride information at Webelements
- Uranium(III) chloride International Bio-Analytical Industries, Inc.
குளோரைடுகள் | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
HCl | He | ||||||||||||||||||
LiCl | BeCl2 | BCl3 B2Cl4 |
CCl4 | NCl3 ClN3 |
Cl2O ClO2 Cl2O7 |
ClF ClF3 ClF5 |
Ne | ||||||||||||
NaCl | MgCl2 | AlCl AlCl3 |
SiCl4 | P2Cl4 PCl3 PCl5 |
S2Cl2 SCl2 SCl4 |
Cl2 | Ar | ||||||||||||
KCl | CaCl CaCl2 |
ScCl3 | TiCl2 TiCl3 TiCl4 |
VCl2 VCl3 VCl4 VCl5 |
CrCl2 CrCl3 CrCl4 |
MnCl2 | FeCl2 FeCl3 |
CoCl2 CoCl3 |
NiCl2 | CuCl CuCl2 |
ZnCl2 | GaCl2 GaCl3 |
GeCl2 GeCl4 |
AsCl3 AsCl5 |
Se2Cl2 SeCl4 |
BrCl | KrCl | ||
RbCl | SrCl2 | YCl3 | ZrCl3 ZrCl4 |
NbCl4 NbCl5 |
MoCl2 MoCl3 MoCl4 MoCl5 MoCl6 |
TcCl4 | RuCl3 | RhCl3 | PdCl2 | AgCl | CdCl2 | InCl InCl2 InCl3 |
SnCl2 SnCl4 |
SbCl3 SbCl5 |
Te3Cl2 TeCl4 |
ICl ICl3 |
XeCl XeCl2 | ||
CsCl | BaCl2 | HfCl4 | TaCl5 | WCl2 WCl3 WCl4 WCl5 WCl6 |
Re3Cl9 ReCl4 ReCl5 ReCl6 |
OsCl4 | IrCl2 IrCl3 IrCl4 |
PtCl2 PtCl4 |
AuCl AuCl3 |
Hg2Cl2, HgCl2 |
TlCl | PbCl2, PbCl4 |
BiCl3 | PoCl2, PoCl4 |
AtCl | RnCl2 | |||
FrCl | RaCl2 | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Nh | Fl | Mc | Lv | Ts | Og | |||
↓ | |||||||||||||||||||
LaCl3 | CeCl3 | PrCl3 | NdCl2, NdCl3 |
PmCl3 | SmCl2, SmCl3 |
EuCl2, EuCl3 |
GdCl3 | TbCl3 | DyCl2, DyCl3 |
HoCl3 | ErCl3 | TmCl2 TmCl3 |
YbCl2 YbCl3 |
LuCl3 | |||||
AcCl3 | ThCl4 | PaCl5 | UCl3 UCl4 UCl5 UCl6 |
NpCl4 | PuCl3 | AmCl2 AmCl3 |
CmCl3 | BkCl3 | CfCl3 | EsCl3 | Fm | Md | No | LrCl3 |