அமோனியம் லாக்டேட்டு

அமோனியம் லாக்டேட்டு (Ammonium lactate) என்பது NH4(C2H4(OH)COO) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். லாக்டிக் அமிலத்தின் அமோனியம் உப்பான இச்சேர்மம் இலேசாக நுண்ணுயிரித் தடுப்பியின் பண்புகளைப் பெற்றிருக்கிறது.

அமோனியம் லாக்டேட்டு
Ball-and-stick model of the lactate anion
Ball-and-stick model of the ammonium cation
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அசானியம் 2-ஐதராக்சிபுரொப்பனேட்டு
வேறு பெயர்கள்
Ammonium lactate
Lac-hydrin
இனங்காட்டிகள்
515-98-0 N
ChEMBL ChEMBL1200747 N
ChemSpider 56149 N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10129918
பண்புகள்
C3H9O3N
வாய்ப்பாட்டு எடை 107.06 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

”E328" என்ற ஐரோப்பிய ஒன்றிய எண் இச்சேர்மத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அம்லாக்டின் மற்றும் லாக்-ஐதரின் போன்ற தோல் குழைமங்களில் செயல்திறன் மிக்கதொரு பகுதிப்பொருளாக விளங்குகிறது[1].

லாக்டிக் அமிலமும் அமோனியம் ஐதராக்சைடும் சேர்ந்த கலவையே அமோனியம் லாக்டேட்டு ஆகும். உலர் தோல், செதில் தோல், தோல் நமைச்சல் போன்ற தோல் நோய்களுக்கான சிகிச்சையில் தோலின் ஈரப்பதம் காக்கும் குழைமமாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. இக்குழைமத்தைப் பயன்படுத்துபவர்கள் சூரிய விளக்குகள் அல்லது தோல் பதனிடும் படுகைகளின் செயற்கை புறஊதா கதிரொளி அல்லது சூரிய ஒளி தோலில் படுவதைத் தவிர்க்க வேண்டும். அமோனியம் லாக்டேட்டு, சூரிய ஒளிக்கு எதிர்வினையாற்றும் உணரியாக தோலை மாற்றுகிறது. வேனிற் கட்டிகள் வந்தது போல தோல் தோற்றமளிக்கும். எனவே இத்தகையோர் வெயிலில் செல்லும் போது சூரிய ஒளியெதிர்ப்புக் குழைமங்கள் மற்றும் உடைகளை அணிந்துச் செல்லல் பாதுகாப்பானது ஆகும் . ரான்பாக்சி நிறுவனத்தின் லாக் – ஐதரின் வகை அமோனியம் லாக்டேட்டைப் பொறுத்த வரையில், நீண்டகால தொடர் ஒளிப்புற்று நோய்த்தன்மை ஆய்வு செய்யப்பட்டது. இம்முடிவுகளின்படி முடியில்லா அல்பினோ எலிகளுக்கு 12 சதவீத அமோனியம் லாக்டேட்டை மேற்பூச்சு குழைமமாக பரிந்துரைக்கப்பட்டது. புறஊதா கதிர்களால் தூண்டப்படும் தோல் புற்று அதிகரிப்பதாக உணரப்படுகிறது.


மேற்கோள்கள்

  1. "DailyMed: View Drug Label: Lac-Hydrin (ammonium lactate) Lotion". "Lac-Hydrin specially formulates 12% lactic acid, neutralized with ammonium hydroxide, as ammonium lactate to provide a lotion pH of 4.4-5.5. Lactic acid is an alpha-hydroxy acid. It is a normal constituent of tissues and blood. The alpha-hydroxy acids (and their salts) may act as humectants when applied to the skin."
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.