ஆபோகி
ஆபோகி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 22வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 4 வது மேளமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்

ஆபோகி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: | ஸ ரி2 க2 ம1 த2 ஸ் |
அவரோகணம்: | ஸ் த2 ம1 க2 ரி2 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1) , சதுஸ்ருதி தைவதம் (த2), ஆகிய சுரங்கள் வருகின்றன.
- ப, நி என்னும் ஸ்வரங்கள் வர்ஜம் ஆதலால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
- இது ஒரு ஔடவ இராகம். இது ஒரு உபாங்க இராகம்.
அம்சங்கள்
- இது ஒரு சர்வ ஸ்வர கமக வரிக ரத்தி இராகம் ஆகும்.
- இது திரிஸ்தாயி இராகம் ஆகும். மேலும் எப்போதும் பாடக் கூடியது.
- நீண்ட ஆலாபனைக்கு இடம் கொடுக்காத இராகம்.
- கச்சேரியின் ஆரம்பத்தில் பாடுவதற்குரிய இராகம். தியாகராஜ சுவாமிகளால் பிரசித்திக்கு வந்த இராகங்களில் இதுவும் ஒன்று.
- மூர்ச்சனாகர ஜன்ய இராகம். இதன் மத்திம மூர்ச்சனையே வலஜி இராகம் ஆகும்.
- கருணைச் சுவை கொண்ட இராகம்.
உருப்படிகள்
வகை | உருப்படி | தாளம் | இயற்றியவர் |
---|---|---|---|
வர்ணம் | எவரி போதன | ஆதி | பட்டணம் சுப்பிரமணிய அய்யர் |
கீர்த்தனை | சபாபதிக்கு வேரு தெய்வம் | ரூபகம் | கோபாலகிருஷ்ண பாரதியார் |
கிருதி | சேவிக்க வேண்டுமையா | ஆதி | முத்துத் தாண்டவர் |
கிருதி | நன்னு போரவநீ | ஆதி | தியாகராஜர் |
கிருதி | மனஸூநில்பசத்தி | ஆதி | தியாகராஜர் |
ஆபோகி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்
- " இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே... " - வைதேகி காத்திருந்தாள்
- " கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்... " - சந்திரமுகி
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.