கீரவாணி

கீரவாணி என்பது கருநாடக இசையில் 21வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் இந்த இராகத்தின் பெயர் கிரணாவளி. விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுப்பதுடன், பக்தி சுவையையும் வெளிப்படுத்தும். எப்போதும் பாடலாம்.

இலக்கணம்

கீரவாணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்:ஸ ரி221 ப த1 நி3 ஸ்
அவரோகணம்:ஸ் நி31 ப ம12 ரி2
  • வேத என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தில் 3வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) , காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்

  • பிரதியாகத கமகம் இந்த இராகத்தின் சாயலை நன்கு வெளிப்படுத்தும்.
  • இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் சிம்மேந்திரமத்திமம் ஆகும்.
  • இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். இதன் மத்திமம், பஞ்சமம், தைவதம் முறையே கிரக பேதத்தின் வழியாக ஹேமவதி (58), வகுளாபரணம் (14), கோசலம் (71) இராகங்கள் கொடுக்கும்.
  • மேல்நாட்டு இசையில் ஹார்மோனிக் மைனர் (Harmonic Minor Scale) என்பது கீரவாணி இராகமே.

உருப்படிகள்

ஜன்ய இராகங்கள்

கீரவாணியின் ஜன்ய இராகங்கள் இவை.

எவனோ ஒருவன்-அலைபாயுதே==திரையிசைப் பாடல்கள்== கீரவாணி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:

மேற்கோள்கள்


    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.