கானமூர்த்தி
கானமூர்த்தி இராகம் கருநாடக இசையின் 3வது மேளகர்த்தா இராகம் ஆகும். இந்த இராகம் கருணைச் சுவையை வெளிப்படுத்துகிறது. அசம்பூர்ண பத்ததியில் 3வது இராகத்திற்கு கானஸாமவராளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இலக்கணம்

கானமூர்த்தி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: | ஸ ரி1 க1 ம1 ப த1 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த1 ப ம1 க1 ரி1 ஸ |
சிறப்பு அம்சங்கள்
- இது ஒரு விவாதி மேளம்.
- பிரத்தியாகத கமகம் இந்த இராகத்திற்கு அழகைக் கொடுக்கிறது.
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமமாக மாற்றினால் இராகம் ஜாலவராளி (39) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் ரிஷப, மத்திம ஆகிய சுரங்கள் முறையே விஷ்வம்பரி (54), சியாமளாங்கி (55) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன. (மூர்ச்சனாகாரக மேளம்).
உருப்படிகள்
வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | கானமூர்த்தே | தியாகராஜ சுவாமிகள் | ஆதி |
கிருதி | மாமதுரஸா | கோடீஸ்வர ஐயர் | ஆதி |
கிருதி | சிறீபதே | வீணை சேஷண்ணா | ருபகம் |
கிருதி | நம்பி வாழ்கிறேன் | சுத்தானந்த பாரதியார் | ஆதி |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.