ரூபவதி
ரூபவதி கருநாடக இசையின் 12 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 12 வது இராகத்திற்கு அதே பெயரே.
இலக்கணம்

ரூபவதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: | ஸ ரி1 க2 ம1 ப த3 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த3 ப ம1 க2 ரி1 ஸ |
சிறப்பு அம்சங்கள்
- இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் திவ்யமணி (48) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).
- சில ஜன்ய இராகங்கள் உண்டு.
உருப்படிகள்
வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | ஸ்ரீ கிருஷ்ண பஜரே | முத்துசாமி தீட்சிதர் | திஸ்ர ஏகம் |
கிருதி | நே மொறபெட்டிதே | தியாகராஜர் | த்ரிபுட |
கிருதி | பாளயமாம் ஸ்ரீ | மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா | ஆதி |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.